»   »  அழகோ அழகு..... மணிரத்தினத்தின் "கண்மணி"யை புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்!

அழகோ அழகு..... மணிரத்தினத்தின் "கண்மணி"யை புகழ்ந்து தள்ளும் பிரபலங்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான், நித்யா மேனன் நடிப்பில் வெளியாகியுள்ளது ஓகே கண்மணி.

காதல் கதைகளை கையாள்வதில் வல்லவரான மணிரத்னத்தின் மற்றுமொரு வெற்றிப் படைப்பு என ஓகே கண்மணியை பிரபலங்கள் தங்கள் சமூக வலைதளங்களில் பாராட்டி வருகின்றனர்.


அந்த வகையில், கௌதம்மேனன், அரவிந்த் சாமி, சூர்யா உள்ளிட்ட சிலரின் விமரனங்கள் இதோ...


ரெஸ்பெக்ட் சார்...

ரெஸ்பெக்ட் சார்...

கௌதம் மேனன் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘மணிரத்னம் சார் மீண்டும் ஒரு ட்ரண்டை உருவாக்கியுள்ளார். எனக்கே ஒரு காதல் கதை எழுத வேண்டும் என உணர்ந்தேன்' ரெஸ்பெக்ட் சார்.


உறைய வைக்கும் விஷூவல்...

உறைய வைக்கும் விஷூவல்...

தொழில்நுட்பத்திலும் புத்திசாலித்தனம். இசை தரமாக இருக்கிறது. விஷுவல் உறைய வைக்கிறது. துல்கர் எளிமையான, கட்டுப்பாடான நடிப்புடன், நித்யா மேனன் அவருடைய பெர்ஃபார்மென்ஸால் கட்டி போடுகிறார். ஒவ்வொரு ஃப்ரேமிலும் உயிர்ப்பாக இருக்கிறது. தேர்ந்த நடிகர்கள்' என பாராட்டித் தள்ளியுள்ளார்.


நல்ல விமர்சனங்கள்...

நல்ல விமர்சனங்கள்...

இதே போல் சூர்யா, ‘நல்ல விமர்சங்களை காண்கிறேன் ‘ஓகே கண்மணி' படத்திற்கு. விரைவில் பார்ப்பேன் என நம்புகிறேன்' என டுவீட் செய்துள்ளார்.


இளவயது அதிர்வுகள்...

இளவயது அதிர்வுகள்...

‘இந்தப் படத்தை பார்க்கையில் மணிரத்னத்திற்கு 25 வயது, பி.சி.ஸ்ரீராமிற்கு 22, ஏ.ஆர்.ரஹ்மானிற்கு 21. முழுமையான இள வயது அதிர்வுகளை கொண்ட ரொமாண்டிக் படம்' என இயக்குநர் மற்றும் ஒளிப்பதிவாளரான ரவி கே . சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.


மாஸ்டர் நிரூபித்து விட்டார்...

மாஸ்டர் நிரூபித்து விட்டார்...

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில், ‘சூப்பர் பெர்ஃபாமென்ஸ், ஆத்மார்த்தமான இசை, அழகான ஷாட்கள், மென்மையான ரொமாண்டிக். மாஸ்டர் எல்லா வகையிலும் நிரூபித்துள்ளார்' எனத் தெரிவித்துள்ளார்.


தாரா மேல் காதலில் விழுந்தேன்...

தாரா மேல் காதலில் விழுந்தேன்...

இதேபோல், அசோக் செல்வன் ‘அழகான படம், மிகவும் உண்மையாகவும், எளிமையாகவும் இருக்கிறது. ஏ.ஆர்.ரஹ்மான் பி.சி.ஸ்ரீராம் ஜீனியஸ், மணி சார் இன்னும் சிறப்பாகவே இருக்கிறார். நீண்ட காலங்களுக்கு பிறகு ஒரு தமிழ் படத்திலிருந்து சந்தோஷமாக வந்திருக்கிறேன். துல்கர் அருமை, தாரா மேல் காதலில் விழுந்து விட்டென்' என தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.


அசத்திட்டீங்க துல்கர்...

அசத்திட்டீங்க துல்கர்...

‘மணி சார், பி.சி.ஸ்ரீராம் சார் உங்களைப் போல காதலை இவ்வளவு அழகாக வேறு யாராலும் சொல்ல முடியாது. இந்தப் படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவருக்கும் பாராட்டுகள். குறிப்பாக துல்கர் சல்மான் அசத்தி விட்டார்' என பாராட்டியுள்ளார் நடிகர் ராணா.


அழகான காதல் கதை...

அழகான காதல் கதை...

மணிரத்னத்தின் இயக்கத்தில் ரோஜா, பம்பாய், கடல் ஆகிய படங்களில் நடித்த அரவிந்த் சாமி தனது டுவிட்டர் பக்கத்தில், ‘மணி சாரின் வழக்கமான அபாரமான படைப்பு. அழகான காதல் கதை. ஏ.ஆர்.ரஹ்மானின் இசை சூப்பர்' எனப் பாராட்டியுள்ளார்.


English summary
Mani Ratnam's "OK Kanmani" has received an overwhelming response from fans and critics alike. The romantic flick, starring Dulquer and Nithya in the lead roles, has been reviewed as a classy movie by most film-goers

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil