»   »  மனைவி கொடுத்த புகாரின்பேரில் நடிகர் தாடி பாலாஜி மீது 4 பிரிவுகளில் வழக்கு

மனைவி கொடுத்த புகாரின்பேரில் நடிகர் தாடி பாலாஜி மீது 4 பிரிவுகளில் வழக்கு

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மனைவி நித்யா அளித்த புகாரின்பேரில் நடிகர் தாடி பாலாஜி மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சினிமா படங்கள், டிவி நிகழ்ச்சிகளில் நடித்து வருபவர் தாடி பாலாஜி. அவருக்கும், நித்யா என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் நடந்தது. அவர்களுக்கு போர்ஷிகா(6) என்ற மகள் உள்ளார்.

கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. வாய்பேச்சு கைகலப்பில் முடிய நித்யா பாலாஜி மீது கடந்த மே மாதம் 23ம் தேதி மாதவரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகார்

புகார்

மாதவரம் போலீசார் பாலாஜியின் பேச்சை கேட்டுக் கொண்டு தனது புகாரை கண்டுகொள்ளவில்லை என்று கூறினார் நித்யா. இதையடுத்து அவர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று பாலாஜி மீது புகார் அளித்தார்.

திருமணம்

திருமணம்

அந்த புகார் மனுவில் அவர் கூறியிருந்ததாவது, எனக்கும் நடிகர் பாலாஜிக் கும் திருமணம் நடந்தது. ஒரு மகள் இருக்கிறார். நான் ஒரு நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். எனது கணவருக்கு குடிப்பழக்கம் உண்டு. குடித்துவிட்டு வந்து என்னை சித்ரவதை செய்வார்.

விவாகரத்து

விவாகரத்து

அவர் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். அதை மறைத்து என்னை திருமணம் செய்தார். நான் தினமும் ஜிம்முக்கு போவேன். இதனால் நடத்தையில் சந்தேகப்பட்டார்.

ஜிம்

ஜிம்

தினமும் நான் வேலைக்கு செல்லும் போதும், ஜிம்முக்கு செல்லும் போதும் என்னை ரகசியமாக பின் தொடர்ந்து கண்காணிப்பார். நான் பணிபுரியும் அலுவலகத்துக்கு குடிபோதையில் வந்து என்னைப் பற்றி பேசி அவமானப்படுத்தினார். இது உயர் அதிகாரிகள் மத்தியில் எனக்கு அவமானமாக இருந்தது.

தாக்கினார்

தாக்கினார்

சமீபத்தில் என்னை அவர் தாக்கினார். இதனால் நான் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டேன். எனவே கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நித்யா புகாரில் தெரிவித்திருந்தார்.

வழக்கு

வழக்கு

நித்யாவின் புகாரின்பேரில் நடவடிக்கை எடுக்குமாறு மாதவரம் போலீசாருக்கு கமிஷனர் உத்தரவிட்டார். இதையடுத்து தாடி பாலாஜி மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

English summary
Madhavaram police have filed case against actor Balaji after his wife Nithya filed a complaint accusing him of torturing her.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil