»   »  ரஜினியின் புதிய அவதாரம் "கபாலி" ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்த இயக்குநர் ரஞ்சித்

ரஜினியின் புதிய அவதாரம் "கபாலி" ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்த இயக்குநர் ரஞ்சித்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் என்ன கடந்த 3 மாதங்களுக்கும் மேல் ரசிகர்களின் மண்டையைக் குடைந்த இந்தக் கேள்விக்கு இன்று விடையளித்திருக்கிறார் இயக்குநர் பா.ரஞ்சித்.

படம் பேச்சுவார்த்தை ஆரம்பித்தது முதலே மாபெரும் எதிர்பார்ப்பு படத்தின் மீது எழ ஆரம்பித்தது, கதை என்ன யார் நடிக்கிறார்கள் போன்ற விவரங்களை எல்லாம் மிகவும் ரகசியமாக வைத்திருந்தனர் படக்குழுவினர்.


சமீபத்தில் படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்ற விவரங்களை வெளியிட்டனர், ஆனால் தலைப்பை மட்டும் வெளியிடவில்லை. முதலில் காளி என்று கூறினார்கள் பின்னர் அது கண்ணபிரானாக மாறியது.


சில நாட்களுக்கு முன்னர் கபாலி என்ற தலைப்பை வைத்திருப்பதாக உறுதிப்படுத்தப் படாத செய்திகள் வெளியாகின, இது தொடர்பாக தட்ஸ்தமிழில் நாமும் ஒரு செய்தியைக் கொடுத்திருந்தோம்.(கண்ணா என் பேரு காளியும் இல்லை கண்ணபிரானும் இல்லை கபாலிம்மா)


ரசிகர்கள் மற்றும் ஊடகங்களின் யூகங்களை உறுதிபடுத்துவது போன்று ரஜினி - ரஞ்சித்தின் புதிய படத்திற்கு கபாலி என்றே பெயர் வைக்கப் பட்டிருக்கிறது. சற்று முன்பு இந்தத் தகவலை தனது ட்விட்டர் பக்கத்தில் முறையாக அறிவித்திருக்கிறார் இயக்குநர் ரஞ்சித்.புதிய படத்தின் பெயர் கபாலி மகிழ்ச்சி தானே என்று ரசிகர்களைப் பார்த்து கேட்டிருக்கிறார், இதனால் மகிழ்ச்சியடைந்த ரஜினி ரசிகர்கள் தற்போது ட்விட்டரில் இதனை உலக அளவில் ட்ரெண்டாக்கிக் கொண்டிருக்கின்றனர்.


கபாலி பேரக் கேட்டாலே சும்மா அதிருதில்ல...


English summary
Rajini's Next Movie Titled Kabali.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos