»   »  பாகுபலி முதல் காட்சி பார்த்தவர்களின் ரியாக்ஷன் என்ன?

பாகுபலி முதல் காட்சி பார்த்தவர்களின் ரியாக்ஷன் என்ன?

Posted By:
Subscribe to Oneindia Tamil

பாகுபலி முதல் காட்சி முடிந்துவிட்டது. படம் பார்த்த விஐபிகள் மற்றும் ரசிகர்கள் இந்தப் படம் குறித்து பல்வேறு கருத்துகள், விமர்சனங்களைத் தெரிவித்துள்ளனர்.

இந்தப் படத்துக்கு சில இணையதளங்கள் 4 நட்சத்திரங்கள் கொடுத்துள்ளன. பெரும்பாலும் குறை சொல்லவில்லை. ராஜமவுலியை ஓஹோவெனப் புகழ்ந்துள்ளனர்.


செட் நல்லாருக்கு, கேமரா நல்லாருக்கு, சிஜி மிரட்டலா இருக்கு என்றெல்லாம் பாராட்டியுள்ள இந்த விமர்சகர்கள், கதை புதிதல்ல.. அப்படி ஒன்றும் பிரமாதமா இல்ல என்று தெரிவித்துள்ளனர்.


[பாகுபலி விமர்சனம்]


விஷுவல் விருந்து

விஷுவல் விருந்து

பாலிவுட் லைப், பர்ஸ்ட் போஸ்ட் போன்ற தளங்கள் இந்தப் படம் ஒரு விஷுவல் விருந்து. அதுவும் போர்க்களக் காட்சிகள் மிரட்டுகின்றன. இந்திய சினிமாவில் இத்தனை நுணுக்கமான விவரணைகளோடு ஒரு சரித்திரப் படம் வந்ததே இல்லை என்று வர்ணித்துள்ளன.


எதிர்ப்பார்ப்பு இல்லாம போங்க

எதிர்ப்பார்ப்பு இல்லாம போங்க

'எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாம போங்க... படம் உங்களை ஆச்சர்யப்படுத்தும். அதுவும் கடைசி 45 நிமிட போர்க்களக் காட்சியில் நீங்கள் பிரமித்து நிற்பீர்கள்' - படம் பார்த்த ஒரு ரசிகரின் கமென்ட் இது.


இடைவேளைக்கு அப்புறம்தான்...

இடைவேளைக்கு அப்புறம்தான்...

இடைவேளை வரை படம் இயற்கை அழகை அள்ளி அள்ளித் தருவதாகவும், இடைவேளைக்குப் பிறகுதான் படத்தின் வேகம் கூடுவதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.


சிரஞ்சீவி ரசிகர்கள் ஆதரவு

சிரஞ்சீவி ரசிகர்கள் ஆதரவு

சிரஞ்சீவியின் ரசிகர்கள் பலர் தங்கள் ஆதரவு பாகுபலிக்கே என்று முழங்கி வருகின்றனர் சமூக வலைத் தளங்களில். சிரஞ்சீவி மகன் ராம்சரணை வைத்து மெகாஹிட் படமான மகதீரா தந்த எஸ்எஸ் ராஜமவுலிக்கே தங்கள் ஆதரவு என்று அவர்கள் கூறியுள்ளனர்.


'பாகுபலி இந்திய சினிமாவின் மைல்கல்'

'பாகுபலி இந்திய சினிமாவின் மைல்கல்'

பெரும்பாலான ரசிகர்கள் இந்தப் படம் தொழில்நுட்பம், படமாக்கம், நடிப்பு என பல விதங்களிலும் இந்திய சினிமாவின் மைல்கல் என்று பாராட்டியுள்ளனர்.


English summary
Though the reviews for SS Rajamouli's Bahubali are mixed, the public talk is positive in general.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil