Don't Miss!
- Technology
அண்ணாந்து பார்க்கும் ஆப்பிள்! மலிவு விலையில் எப்புட்றா? புதிய Noise EarBuds விலை என்ன தெரியுமா?
- News
50 ஆயிரம் ஆண்டுக்கு பிறகு பூமிக்கு அருகே பச்சை வால் நட்சத்திரம்.. கற்காலத்திற்கு பிறகு முதல் முறை!
- Finance
நம்பிக்கையுடன் முதலீட்டாளர்கள்..பட்ஜெட்டுக்கு முன்பு 400 புள்ளிகளுக்கு மேல் ஏற்றத்தில் சென்செக்ஸ்!
- Sports
2 தீராத குழப்பங்கள்.. நியூசி, உடனான 3வது டி20 போட்டி.. முடிவெடுக்க தடுமாறும் ஹர்திக் பாண்ட்யா!
- Lifestyle
பிப்ரவரி மாதம் இந்த 4 ராசிக்காரர்கள துரதிர்ஷ்டம் துரத்தி துரத்தி அடிக்கப்போகுதாம்... ஜாக்கிரதையா இருங்க...!
- Automobiles
நம்மல மாதிரி கொடுத்து வச்சவங்க யாருமே இல்ல.. போட்டி போட்டுட்டு இந்த பிப்ரவரில காரை அறிமுகம் செய்ய போறாங்க!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
சூப்பர்ஸ்டாரின் வசூல் சாதனையை 10 நாட்களில் முறியடித்த ஆர்ஆர்ஆர்... எந்த படம் தெரியுமா?
சென்னை : நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட், ஷ்ரேயா சரண், சமுத்திரக்கனி உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த வாரத்தில் திரையரங்குகளில் ரிலீசாகி அதிரிபுதிரி வெற்றியை கொடுத்துள்ள படம் ஆர்ஆர்ஆர். இந்தப் படத்தின் வசூல் சாதனை இந்திய அளவில் மிகப்பெரிய ஹிட்டடித்து மற்ற முக்கிய படங்களை ஓரங்கட்டி வருகிறது.
ஏப்ரல்
3,
ஞாயிறன்று
கலர்ஸ்
தமிழில்
என்ன
திரைப்படம்
தெரியுமா
?
அப்படி
என்ன
ஸ்பெஷல்
இந்த
படத்தில்
!

ஆர்ஆர்ஆர் படம்
நடிகர்கள் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் லீட் கதாபாத்திரங்களில் நடித்து கடந்த மாதம் 25ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது ராஜமௌலியின் ஆர்ஆர்ஆர். இந்தப் படம் சுதந்திர போராட்ட காலக்கட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் பிரம்மாண்டம் அந்தக் காலக்கட்டத்தை நம் கண்முன்னே நிறுத்தியுள்ளது.

பிரம்மாண்டமான தயாரிப்பு
தன்னுடைய பாகுபலி படங்களின்மூலம் பிரம்மாண்டத்திற்கு பெயர்போன இயக்குநர் ராஜமௌலி, இந்தப் படத்திலும் தன்னுடைய ரசிகர்களை ஏமாற்றாமல் சிறப்பான செட்களின்மூலம் ரசிகர்களை மிரட்டியுள்ளார். தற்போது இந்திய அளவில் 5 மொழிகளில் பான் இந்தியா படமாக ஆர்ஆர்ஆர் ரிலீசாகியுள்ளது.

என்ஜாய் செய்யும் ரசிகர்கள்
படத்தை திரையரங்குகளில் சென்று பார்க்கும் அனுபவத்தை ரசிகர்கள் என்ஜாய் செய்து வருகின்றனர். சிறப்பான திரைக்கதையும் படத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. படத்தின் வசூல் தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. மற்றப் படங்கள் ரிலீசான நிலையிலும் அதையெல்லாம் பீட் செய்து வசூல் மழை பொழிந்து வருகிறது படம்.

10 நாட்களில் ரூ.819 கோடி வசூல்
கடந்த 10 நாட்களில் 819 கோடி ரூபாயை உலகளவில் வசூல் செய்துள்ளது ஆர்ஆர்ஆர். இதையடுத்து இந்திய அளவில் அதிக வசூலை ஈட்டியுள்ள 6வது படம் என்ற பெருமையும் படத்திற்கு கிடைத்துள்ளது. தங்கல், பாகுபலி2, பஜ்ரங் பாய்ஜான், சிக்ரெட் சூப்பர்ஸ்டார் மற்றும் பீகே ஆகிய படங்கள் முதல் 5 இடங்களில் உள்ளது.

சூப்பர்ஸ்டார் படத்தை பீட் செய்த ஆர்ஆர்ஆர்
இந்நிலையில் தற்போது 10 நாட்களில் 6வது இடத்திற்கு வந்துள்ள ஆர்ஆர்ஆர் தொடர்ந்து சர்வதேச அளவில் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி வருகிறது. அதனால் 6வது இடத்தில் இருந்து மேலும் முன்னேற வாய்ப்புள்ளது. இந்நிலையில் சூப்பர்ஸ்டாரின் 2.O படத்தின் மொத்த வசூலான 800 கோடி ரூபாயை தற்போது ஆர்ஆர்ஆர் 10 நாட்களில் முறியடித்துள்ளது.

ஒரே பட்ஜெட்டில் இரு படங்கள்
ஆர்ஆர்ஆர் படம் 450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டது போலவே ரஜினியின் 2.O படமும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாக 450 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இயக்குநர் ஷங்கரின் பிரம்மாண்டமான படைப்பாக வெளியானது இந்தப் படம்.