கண்ட இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை: விஜய் பட நடிகர் மீது பெண் டான்ஸர் புகார்
மும்பை: நடிகர் சல்மான் யூசுப் கான் மீது பெண் டான்ஸர் ஒருவர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
ஏபிசிடி படம் மூலம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தவர் சல்மான் யூசுப் கான். ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரபுதேவா நடித்த லக்ஷ்மி படத்திலும் நடித்திருந்தார்.
அவர் மீது பெண் டான்ஸர் ஒருவர் மும்பை ஓஷிவாரா காவல் நிலையத்தில் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். அந்த பெண் தனது புகார் மனுவில் தெரிவித்திருப்பதாவது,

சல்மான்
நான் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் வேலை விஷயமாக லண்டனில் இருந்தேன். அப்பொழுது சல்மானின் மேனேஜர் என்னை தொடர்பு கொண்டு பேசினார். நாடு திரும்பிய பிறகு ஓஷிவாராவில் உள்ள ஒரு காபி கடையில் வைத்து சல்மானை சந்தித்தேன். துபாயில் பாலிவுட் பார்க்கில் டான்ஸ் ஆடும் வாய்ப்பை அளித்தார் அவர்.

பாலிவுட்
வாய்ப்பு அளித்த பிறகு என்னை தன் காரில் வீட்டில் இறக்கிவிட்டார். அப்போது சல்மான் என்னை கண்ட இடத்தில் தொட்டார். இப்படி எல்லாம் செய்யாதீர்கள் என்று நான் சல்மானிடம் கூறினேன். அதற்கு அவரோ இது எல்லாம் பாலிவுட்டில் ரொம்ப சகஜம் என்றார்.

டான்ஸ் நிகழ்ச்சி
பின்னர் சல்மானின் மேனேஜர் போன் செய்து துபாய் நிகழ்ச்சிக்கு வரச் சொன்னார். இதையடுத்து ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி நானும், என் நடனக் குழுவும் துபாய் சென்றோம். ஆகஸ்ட் 30ம் தேதி பஹ்ரைனில் உள்ள பாலிவுட் பார்க் ரிசார்ட்டில் நடக்கும் மற்றொரு நடன நிகழ்ச்சிக்கு தன்னுடன் வருமாறு அழைத்தார் சல்மான்.

பாலியல் தொல்லை
துபாய் விமான நிலையத்தில் வைத்து சல்மான் தனது சகோதரரை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். நடன நிகழ்ச்சி முடிந்து துபாய்க்கு காரில் திரும்பி வந்தபோது சல்மானும், அவரின் சகோதரரும் என்னை கண்ட இடத்தில் தொட்டு பாலியல் தொல்லை கொடுத்தனர். இந்த சம்பவத்திற்கு பிறகு சல்மான் என்னையும், என் நடனக் குழுவையும் கொடுமைப்படுத்தினார், மிரட்டினார். பின்னர் எங்கள் ஒப்பந்தத்தை அவராக ரத்து செய்துவிட்டு எங்களை மும்பைக்கு அனுப்பி வைத்துவிட்டார் என்று அந்த பெண் தனது புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











