20 லட்சம் கொடுக்கலைன்னா சூசைட் பண்ணிப்பேன்னு நித்யா மிரட்டுறா சார்.. தாடி பாலாஜி புலம்பல்!
சென்னை: தனது மகளை சரியான பாதைக்கு கொண்டு செல்லாமல் தவறான பாதைக்கு அழைத்துச் செல்கிறார் நித்யா என தாடி பாலாஜி சமீபத்தில் பரபரப்பு புகார் அளித்திருந்தார்.
தாடி பாலாஜி மற்றும் நித்யா இருவருக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டு விவாகரத்து வழக்கு நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், 20 லட்சம் ரூபாய் பணத்தை கேட்டு நித்யா மிரட்டுவதாக தனியார் யூடியூப் சேனலுக்கு தாடி பாலாஜி அளித்த பேட்டி பரபரப்பை கிளப்பி உள்ளது.

யார் சொல்வது பொய்
தாடி பாலாஜி மற்றும் அவரது மனைவி நித்யா என இருவரும் மாற்றி மாற்றி குற்றச்சாட்டுக்களை சமீபத்தில் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டு இருந்தனர். போதா குறைக்கு அவர்களின் மகளும் தந்தைக்கு எதிராக அம்மாவுக்கு சாதகமாக பேசுவதை கேட்டு ரசிகர்கள் ரொம்பவே ஷாக் ஆகி விட்டனர்.

சிக்கிய கமல்
பிக் பாஸ் சீசன் 2வில் இருவரும் போட்டியாளர்களாக பங்கேற்ற நிலையில், இருவரையும் சேர்த்து வைக்க பெரும் போராட்டத்தை பிக் பாஸ் ஹோஸ்ட்டான கமல் நிகழ்த்தி உள்ளார். மகளின் படிப்புக்காக ஊட்டி கான்வென்ட்டில் எல்லாம் சேர்க்க சொல்லி அறிவுறுத்தி உள்ளார். ஆனால், சமீபத்தில் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கமல் கேரக்டரையே காலி செய்து விட்டார் நித்யா.

சூசைட் பண்ணிப்பேன்னு மிரட்டுறா
தாடி பாலாஜி பேசும் போது அவர் பக்கம் நியாயம் இருப்பது போல பேசுகிறார். அதே போல, நித்யா மற்றும் அவரது மகள் பேசும் போது அவர்கள் பக்கம் நியாயம் இருப்பது போல பேசுகின்றனர். இந்த குழப்பத்திற்கு நடுவே ரூ. 20 லட்சம் பணம் தரவில்லை என்றால் சூசைட் பண்ணிப்பேன்னு நித்யா தற்கொலை மிரட்டல் விடுத்தார் என்கிற பதற வைக்கும் விஷயத்தை போட்டு உடைத்தார் தாடி பாலாஜி. தன்னிடம் இருந்து பணம் பறிக்கும் நோக்கில் தான் அவர் இப்படி செயல்படுகிறார் என்றும், பிடிக்கவில்லை என்றால் விலகி போக வேண்டியது தானே, பணம் மட்டும் எதுக்கு என கேட்டுள்ளார்.

அப்பா தான் மிரட்டுனாரு
இதுபற்றிய கேள்விக்கு நித்யா பதிலளிக்காமல் அவரது மகளை பதிலளிக்க வைத்தார். அப்போது, அப்பா தான் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டினார் என்று சொல்லி உள்ளார். மேலும், தனக்கு நடனமாட விருப்பம் இருப்பதால் தான் அது போன்ற இன்ஸ்டா ரீல் வீடியோக்களை போடுகிறேன் என்றும் அம்மா சொல்லிக் கொடுக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

மகளுக்காக பணம் வேணும்
நான் சொகுசா வாழ்றதுக்காக பணம் கேட்கல, மகளின் எதிர்காலத்துக்காகத்தான் பணம் வேணும்னு தாடி பாலாஜியிடம் கேட்டேன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் 25 லட்சத்துக்கும் மேல் சம்பாதித்தார். ஆனால், கேட்டால், பணமே இல்லை என பொய் சொல்கிறார் என நித்யா கூறியுள்ளார். மகள் படிக்க நல்ல பள்ளிக்கூடத்தில் சேர்க்க வேண்டும் என சொல்லும் நித்யா, ஏன் மகளை தேர்வுக்கு அனுப்பாமல் ஈவென்ட்டுகளுக்கு அழைத்துச் சென்று அவரையும் கெடுக்கிறார் என தாடி பாலாஜி கேட்டுள்ளார். இப்படி இருவரும் மாற்றி மாற்றி சண்டைப் போட்டு வருவது எங்கே போய் தான் முடியப் போகிறதோ தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











