உக்ரைன் குழந்தைகளை நினைச்சா மனசு பதறுது.. உதவி செய்ய களத்தில் இறங்கிய எமி ஜாக்சன்!

சென்னை: நடிகை எமி ஜாக்சன் உக்ரைன் நாட்டு குழந்தைகளுக்காக நிதி திரட்டும் முயற்சியில் இறங்கி உள்ளார்.

இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த இவர் இயக்குநர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் வெளியான ஆர்யாவின் மதராசப்பட்டினம் படத்தின் மூலம் கோலிவுட்டில் நடிகையாக அறிமுகமானார்.

விஜய்யின் தெறி, ரஜினியின் 2.0 என ஏகப்பட்ட தமிழ் படங்களில் நடித்த இவர் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.

மெர்சலாக்கிய எமி

மெர்சலாக்கிய எமி

மதராசப்பட்டினம் படத்தில் இங்கிலாந்து பெண்ணாக நடித்து அசத்திய எமி ஜாக்சன் தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, ஐ, 2.0 என ஏகப்பட்ட தமிழ் திரைப்படங்களில் அழகும் கவர்ச்சியும் பொங்கும் இளமை துள்ளல் உடன் நடித்து கோலிவுட் ரசிகர்களை மெர்சலாக்கி வந்தார். ஜார்ஜ் பனாயிட்டுவை நிச்சயம் செய்து அவருடன் வாழ தொடங்கியதும் சினிமாவுக்கு ரெஸ்ட் கொடுத்தார்.

ஆண் குழந்தை

ஆண் குழந்தை

தொழிலதிபர் ஜார்ஜ் பனாயிட்டுவை திருமணம் செய்து கொள்ளாமல் அவருடன் வாழ்ந்து வந்த நடிகை எமி ஜாக்சனுக்கு கடந்த 2019ம் ஆண்டு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு ஆண்ட்ரியாஸ் என பெயரிட்டு வளர்த்து வருகிறார். பார்ட்னர் மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து பதிவிட்டுள்ளார்.

உக்ரைன் குழந்தைகளுக்காக

உக்ரைன் குழந்தைகளுக்காக

மீண்டும் விளம்பர படங்கள், வெப்சீரிஸ் என கவனம் செலுத்தி வரும் நடிகை எமி ஜாக்சன் தற்போது உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா ஆரம்பித்துள்ள போருக்கு எதிராக தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். மேலும், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் குழந்தைகளை மீட்க முடிவு செய்த அவர், அதற்கான நிதியை திரட்ட முடிவு செய்துள்ளார்.

உக்ரைனுக்கு உதவுங்கள்

உக்ரைனுக்கு உதவுங்கள்

உக்ரைனில் உள்ள குழந்தைகளின் நிலையை தன்னால் கனவில் கூட நினைத்து பார்க்க முடியவில்லை. அந்த குழந்தைகளை காப்பாற்றும் முயற்சியில் களமிறங்கி உள்ளேன். அதற்கான நிதியை திரட்டி வருகிறேன். உங்களால் முடிந்த உதவியை செய்யுங்கள் என அதற்கான தகவல்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் நடிகை எமி ஜாக்சன்.

பிஞ்சுக் குழந்தை

பிஞ்சுக் குழந்தை

உக்ரைன் மக்களுக்காக நாங்கள் இருக்கிறோம் என்கிற அறிவிப்புடன் அங்கே கஷ்டப்படும் குழந்தைகளின் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை எமி ஜாக்சன் ஷேர் செய்துள்ளார். அதில், மருத்துவ உதவிக்காக போராடும் பிஞ்சுக் குழந்தையின் புகைப்படம் நெஞ்சை பதை பதைக்க வைக்கிறது. தாயுள்ளம் கொண்ட எமி ஜாக்சன் செய்யும் இந்த முயற்சியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Recommended Video

உக்ரைனின் 2nd largest city-யை அழிக்கும் Russia | India's humanitarian assistance to Ukraine
பார்ட்னரை பிரிந்தாரா

பார்ட்னரை பிரிந்தாரா

இதற்கிடையே நடிகை எமி ஜாக்சன் தனது பார்ட்னர் ஜார்ஜ் பனாயிட்டுவை பிரிந்து விட்டார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால், இது தொடர்பாக எமி ஜாக்சன் இதுவரை எந்தவொரு அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X