Just In
- 4 hrs ago
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- 5 hrs ago
லைகா தயாரிக்கும் சிவகார்த்திகேயனின் டான்.. வெளியானது சூப்பர் அப்டேட்!
- 5 hrs ago
சிபிராஜ் நடிக்கும் ‘கபடதாரி‘ … வெளியானது மிரட்டலான முன்னோட்ட காட்சி!
- 5 hrs ago
குப்புறப்படுத்து தீவிர யோசனை.. என்ன ஆச்சு குமுதா.. ஏன் இவ்வளோ சோகம் !
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Automobiles
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
திருட்டு வீடியோவை ஒழிக்க அனைத்து திரையரங்குகளிலும் சிசிடிவி.. தீபாவளி வரை கெடு!
சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் வரும் நவம்பர் 6ம் தேதிக்குள் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட வேண்டும் என தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவுறுத்தியுள்ளது.

சென்னை தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்ட கலந்தாய்வு கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது.

அதில் திருட்டு வீடியோ பைரசியை ஒழிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அக்கூட்டத்தின் இறுதியில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
திருட்டு வீடியோவை ஒழிக்க அனைத்து திரையரங்குகளிலும் சிசிடிவி.. தீபாவளி வரை கெடு- தயாரிப்பாளர்கள் சங்கம்#CCTV #தயாரிப்பாளர்கள்சங்கம் #producerscouncil #piracy pic.twitter.com/hNT7Y7cQnj
— Tamil Filmibeat (@FilmibeatTa) October 24, 2018
அதன் விபரமாவது:
1. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் உள்/வெளி அரங்குகள், வாசல்கள், பார்க்கிங் பகுதிகளில் CCTV கேமரா பொருத்த வேண்டும். அது வருகிற நவம்பர் 6 தீபாவளி தினத்திற்க்குள் பொருத்தபட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2. பொருத்தபட்ட கேமராக்கள் 24 மணி நேரமும் தங்கு தடையின்றி record செய்யபடும்.
4. வருகிற நவம்பர் 15ம் தேதிக்குள் CCTV கேமரா பொருத்தாத திரையரங்குகளுக்கு திரைப்படம் தரப்படமாட்டாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
5. இனி அனைத்து காட்சிகளிலும் 2 நபர்களை திரையரங்குக்குள் முழு நேர கண்காணிப்பு பணிக்கு அமர்த்தபடுவர்.
6. ஒவ்வொரு முறையும் திரைப்படம் ஆரம்பிக்கும் முன்னர் திருட்டுத்தனமாக வீடியோ எடுத்தால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற விழிப்புணர்வு வீடியோ ஒளிபரப்பப்படும்.
7. திரைப்படத்தினை காண வரும் பொது மக்களிடம் கேமரா இருக்கிறதா என்று கட்டாயமாக பரிசோதனை செய்யப்படும்
8. தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் இணைந்த குழு ஒன்று அமைக்கபடும். மேற்படி விஷயம் குறித்து ஏதேனும் பிரச்சினை ஏற்படுமாயின் அதனை அந்த குழுவில் வைத்து ஆலோசித்து அதற்கு தீர்வு காண வேண்டும் என்றும் திருட்டு வீடியோவை ஒழிக்க இந்த குழு கடுமையாக போராடும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
[6ம் தேதி அல்ல 2ம் தேதியே ரிலீஸாகும் சர்கார்?: இருக்கு மெகா காரணம் இருக்கு]