twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எப்படி இருக்கு மெமரீஸ் திரைப்படம்

    |

    Rating:
    3.0/5

    இயக்குனர்: ஷியாம், பிரவீன்
    நடிகர்கள்:
    வெற்றி, பார்வதி, ரமேஷ் திலக்
    இசை:
    கவாஸ்கர் அவினாஷ்

    8 தோட்டாக்கள், ஜீவி, வனம் உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்து, நம்பிக்கை நட்சத்திரமாக வளர்ந்து வரும் நடிகர், வெற்றி. இவர் ஹீரோவாக நடித்துள்ள "மெமரீஸ்" எனும் திரைப்படம் சைக்காலஜி-த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. ஷ்யாம், பிரவீன் என்ற மலையாள இயக்குனர்கள் இப்படத்தினை டைரக்டு செய்துள்ளனர். கவாஸ்கர் அவினாஷின் இசையில் படம் உருவாகியுள்ளது. நடிகர் ரமேஷ் திலக் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

    Memories movie review

    மெமரீஸ் என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தனக்கு தெரிந்த நபர் ஒருவரின் வாழ்வில் மெமரீஸினால் ஏற்பட்ட அனுபவத்தை பகிர்ந்து கொள்ள வருகிறார், ஹீரோ. வெங்கி என்பவரின் வாழ்வில்தான் அந்த சம்பவம் என கூறுகிறார். ஃப்ளேஷ் பேக்கில் கதை நகர்கிறது.

    அம்மாவோட திடீர் விவாகரத்து முடிவுக்கு பொண்ணு வச்ச செக்.. பிக் பாஸ் அர்ச்சனாவுக்கு என்ன ஆச்சு?
    ஒரு பாழடைந்த வீட்டில், தலையில் அடிபட்ட நிலையில் கண் விழிக்கிறார் ஹீரோ வெற்றி. சட்டையெல்லாம் ரத்தக்கறை, தான் யார் என்பதே அவருக்கு நினைவில்லை. இவரை அடைத்து வைத்திருப்பவன் மூலம் தான் இரட்டை கொலை வழக்கில் தேடப்படும் கொலையாளி என்பதை தெரிந்து காெள்கிறார். இதனால், தன்னை அடைத்து வைத்திருக்கும் நபரிடம், "நான் யார், என்னை ஏன் அடைத்து வைத்திருக்கிறீர்கள்.." கேள்வியாய் கேட்கிறார். இதற்கு பதிலாக, "நீ யார் என்பதை 17 மணிநேரத்திற்கள் நீ கண்டுபிடிக்க வேண்டும். ஆனால் அப்படி கண்டுபிடித்த பிறகு நீ உயிருடன் இருக்க மாட்டாய்" என ட்விஸ்ட் வைக்கிறார், அந்த மர்ம நபர். அடர்ந்த காட்டிற்குள் தான் யார் என்பதை தேடி அலையும் ஹீரோவை, போலீஸ் துரத்துகிறது, அவர்களிடமிருந்து தப்பிக்கும் ஹீரோவை துப்பாக்கி முனையில் பிடிக்கும் ஆர்.என்.ஆர் மனோகர் "என் மனைவியை மட்டும்தானே கொல்ல சொன்னேன்...என் மகளை என்ன செய்தாய்?" என கேட்கிறார்.

    ஹீரோவை சுற்றி என்னதான் நடக்கிறது? உண்மையிலேயே அந்த கொலைகளை செய்தது அவர்தானா? அவரை துரத்தும் நபர்களுக்கும் ஹீரோவுக்கும் என்ன தொடர்பு? போன்ற அடுக்கடுக்கான கேள்விகளை நோக்கி நகர்கிறது திரைக்கதை.

    மெமரீஸ் படத்தில் ஹீராேவிற்கு மட்டுமல்ல, அவரை சுற்றி வரும் கதாப்பாத்திரங்களுக்கும் டபுள் ரோல்தான். மெமரி எரேசிங் மற்றும் மெமரி இன்ஸர்டிங் எனும் ஒரே கான்சப்டை வைத்து ஒரு நல்ல படத்தை கொடுக்க இயக்குநர் எடுத்த முயற்சிக்கு பாராட்டுகள். இப்போது வெளிவரும் பல டைம்-ட்ராவல், சைக்காலஜி த்ரில்லர் படங்களில் கதைக்குள் கதை வைப்பது இயல்பான விஷயம்தான். முதலில் ஏதோவொரு இயல்பான இளைஞராக காட்டப்படும் ஹீரோ வெற்றி, பிறகு தனது நினைவுகளை இழந்து விட்டு கொலைகாரனா? நல்லவனா? என்று தெரியாமல் விழி பிதுங்கும் மனிதனாக நல்ல நடிப்பை வெளிப்படுத்துகிறார். அதன் பிறகு வைக்கப்படும் ட்விஸ்ட் யாரும் எதிர்பாராதது.
    படத்தின் நாயகன் வெற்றி, தனக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தை சிறப்பாக செதுக்கி கொடுத்திறருக்கிறார். ரமேஷ் திலக், நண்பன்-காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் பொருந்தி இருக்கிறார். நாயகியாக களம் இறங்கியுள்ள பார்வதிக்கு பெரிதாக நடிக்க வேண்டிய வேலை இல்லாமல் போய் விடுகிறது.

    English summary
    Memories movie review
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X