ஜல்லிக்கட்டு காளைகளுடன் தீவிர பயிற்சியில் சூர்யா... வாடிவாசல் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஆரம்பம்!
சென்னை : நம்ம வீட்டு பிள்ளை வெற்றியை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் சூர்யா ஹீரோவாக நடிக்க இப்படத்திற்கு எதற்கும் துணிந்தவன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை மையமாகக் கொண்டு உருவாகி வருகிறது என கூறப்படும் நிலையில் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா அருள்மோகன் ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் சத்யராஜ், சூரி முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் வெற்றிமாறன் சூர்யா கூட்டணி முதல் முறையாக இணையும் வாடி வாசல் படத்தின் படப்பிடிப்பு மிக விரைவிலேயே தொடங்க இயக்க சூர்யா அதற்காக ஜல்லிக்கட்டு காளைகளுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது.
ஒரே படத்தில் இணையும் கமல், சூர்யா... ஆச்சரியத்தில் ரசிகர்கள்

சூர்யாவுடன் கூட்டணி
தென்னிந்திய அளவில் சூர்யாவின் திரைப்படங்களுக்கு மிகப் பெரிய மார்க்கெட் இருந்து வர சூரரைப்போற்று ரிலீசுக்கு பிறகு இந்திய அளவில் சூர்யாவின் மார்க்கெட் பல மடங்கு உயர்ந்துள்ளது இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யாவின் மிரட்டலான நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக தயாராக இருந்தது ஆனால் கொரோனா காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டதால் தீபாவளி பண்டிகையையொட்டி திரையரங்குகளில் வெளியாக இருந்த சூரரைப்போற்று ஓடிடியில் வெளியிடப்பட்டது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை அபர்ணா பாலமுரளி அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் ரசிகர்களிடம் தனி இடத்தை பிடித்தார். அசுரன் மாபெரும் வெற்றிக்கு பிறகு வெற்றிமாறன் அடுத்து இயக்கும் படங்களைப் பற்றி அறிய ரசிகர்கள் பெரும் ஆவலுடன் இருக்க சூர்யாவுடன் கூட்டணி அமைத்து வாடிவாசல் என்ற படத்தை இயக்கி வந்தார்.

சூரியை ஹீரோவாக
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு ஏற்கனவே அசுரன் படத்தை தயாரித்து இருந்த நிலையில் மீண்டும் வெற்றிமாறன் இயக்கும் வாடிவாசல் படத்தையும் தயாரிக்கிறார். இப்படம் மதுரையை கதைக் களமாகக் கொண்டு உருவாகி வர சென்ற ஆண்டு தொடங்கப்பட்ட இதன் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே கொரோனா திடீரென பரவியதால் படப்பிடிப்பு உடனடியாக நிறுத்தப்பட்டது. அதன் பிறகு வாடிவாசல் படப்பிடிப்பு தொடங்குவதற்கு பற்றிய எந்த ஒரு அறிகுறியும் இல்லாததால் வெற்றிமாறன் இதற்கிடையில் வேறு படத்தை இயக்க தயாரானார். தனது ஒவ்வொரு படங்களின் மூலம் ரசிகர்களை பிரம்மிக்க செய்து வரும் இயக்குனர் வெற்றிமாறன் இதுவரை காமெடியில் கலக்கிக் கொண்டிருந்த சூரியை ஹீரோவாக மாற்றியுள்ளார். சீமராஜா படத்தில் சிக்ஸ் பேக் வைத்து அசத்தியிருந்த சூரி இப்பொழுது வெற்றிமாறன் இயக்கத்தில் ஹீரோவாக விடுதலைப் படத்தில் நடித்து உள்ளார். சத்தியமங்கலம் காட்டுப்பகுதிகளில் முழுக்க முழுக்க படமாக்கப்பட்ட விடுதலை ரிலீசுக்கு தயாராக இருக்கிறது. இப்படத்தில் கதா நாயகியாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் தங்கை பவானிஸ்ரீ நடித்துள்ளார். விடுதலை படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார் ஆனால் சில காரணங்களால் அவரால் நடிக்க முடியாமல் போக அந்த கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடித்து முடித்துள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை
இந்தநிலையில் சூர்யாவும் வாடிவாசல் படத்திற்கு முன்பாக இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்தார். சூர்யாவின் திரைப்படங்கள் மாஸ் மற்றும் கிளாஸாக மட்டுமல்லாமல் சமூக அக்கறை கொண்ட படங்களாகவும் இருக்க ரசிகர்கள் மத்தியில் தனி கவனம் பெற்று வருகிறது. சூர்யாவின் திரைப்படங்கள் தமிழில் மட்டுமல்லாமல் மலையாளம் மற்றும் தெலுங்கிலும் மிகப்பெரிய வசூலை அள்ளுகிறது. இந்த நிலையில் தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை மையப்படுத்தி இப்படம் உருவாகி வர கதைக்கு ஏற்றது போல் இதற்கு எதற்கும் துணிந்தவன் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக இளம் நடிகை பிரியங்கா அருள்மோகன் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயனுடன் ஜோடி யாக டாக்டர் படத்திலும் இப்பொழுது டான் படத்திலும் நடித்து வருகிறார். மேலும் சத்யராஜ் மற்றும் சூரி உள்ளிட்ட பலர் இதில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

அக்டோபரில் படப்பிடிப்பு ஆரம்பம்
எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பும் இப்பொழுது இறுதி கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் வாடிவாசல் படப்பிடிப்பு பற்றிய முக்கிய அப்டேட் வெளியாகி உள்ளது. அசுரன் மற்றும் விடுதலை நாவலை தழுவி எடுக்கப்பட்ட நிலையில் வாடிவாசல் படமும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டு வருகிறது. சி.சு.செல்லப்பா எழுதிய 'வாடிவாசல்' நாவலை மையமாக வைத்து இப்படம் உருவாகிறது. கலைபுலி எஸ் தாணு இப்படத்தை தயாரிக்கிறார். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். வாடிவாசல் படத்திற்கு கோலிவுட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஜல்லிக்கட்டு காளைகளை மையப்படுத்திய படமாக உருவாவதால் நடிகர் சூர்யா ஜல்லிக்கட்டு காளைகளுடன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. வெற்றிமாறன் திரைப்படங்கள் என்றாலே நம்பத்தகுந்த வகையில் திரைக்கதை இருக்கும் அந்த வகையில் இப்படத்தில் ஜல்லிக்கட்டு காளை உடன் சூர்யா சண்டையிடும் காட்சிகளும் மிக தத்ரூபமாக இருக்க வேண்டும் என்பதற்காக நடிகர் சூர்யா ஜல்லிக்கட்டு காளைகளுடன் ஒரு மாதம் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு களைகளுடன் நெருக்கமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. சுமார் 200 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தில் பிரம்மாண்டமாக பொருட்செலவில் ஜல்லிக்கட்டு அரங்கம் செட் ஒன்றும் அமைக்கப்பட உள்ளது. அக்டோபர் மாதம் வாடிவாசல் படப்பிடிப்பு மீண்டும் மதுரையில் தொடங்க உள்ளது எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











