Don't Miss!
- Sports விராட் கோலி ரன்கள் அடித்தால் போதாது.. ஆர்சிபி அணியின் ரியல் எமன் யார் தெரியுமா? டூ பிளசிஸ் ஓபன் டாக்
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- News விவிபாட் ஒப்புகை சீட்டு 100% எண்ணப்படுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு.. பெரும் எதிர்பார்ப்பு
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
பைரவா, ஓ காதல் கண்மணி, அட்றா மச்சான் விசிலு - டிவி சேனல்களில் தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்
தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சன்டிவியில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்த புத்தம் புதிய பைரவா திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.
சென்னை: தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு சன்டிவியில் விஜய், கீர்த்தி சுரேஷ் நடித்த பைரவா திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. விஜய், டிவி, ராஜ் டிவி, கலைஞர் டிவி, ராஜ் டிவியிலும் சிறப்பு திரைப்படங்கள் ஒளிபரப்பாக உள்ளன.
தமிழ் புத்தாண்டு தினத்தன்று புத்தம் புதிய திரைப்படங்கள் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகின்றன. தொலைக்காட்சி ரசிகர்களை வீட்டை விட்டு வெளியே நகரவிடாமல் செய்வதற்காக சேட்டிலைட் சேனல்கள் போட்டி போட்டுக்கொண்டு புதிய திரைப்படங்களை ஒளிபரப்புகின்றன.
நடிகர்களின் சிறப்பு பேட்டிகள், புத்தம் புதிய திரைப்படங்களின் முன்னோட்டங்கள் என டிவி நேயர்களுக்கு தமிழ் புத்தாண்டு கலக்கல் புத்தாண்டாக அமையப் போகிறது. இந்த ஆண்டு ஏப்ரல் 14ல் தொலைக்காட்சி சேனல்களில் ஒளிபரப்பாக உள்ள திரைப்படங்களைப் பற்றி முன்னோட்டம் போட ஆரம்பித்துள்ளனர்.
சன்டிவி பிறந்தநாள் திரைப்படங்கள்
தமிழ் புத்தாண்டு தினத்தை சன்டிவி பிறந்தநாளாக கொண்டாடுகிறது. ஏப்ரல் 14ஆம் தேதி 11 மணிக்கு விஷால் நடித்த கதகளி திரைப்படமும், மாலை 6 மணிக்கு விஜய் நடித்த பைரவா திரைப்படமும் ஒளிபரப்பாகிறது.
விஜய் டிவி - ராஜ் டிவி
புத்தாண்டு தினத்தன்று விஜய் டிவியில் துல்கர் சல்மான் நடித்துள்ள ஓகே கண்மணி திரைப்படம் ஒளிபரப்பாகிறது. ராஜ் டிவியில் நடிகர் சந்தானம் நடித்த அட்றா மச்சான் விசிலு திரைப்படம் காலை 12 மணிக்கு ஒளிபரப்பாகிறது. மாலை 6 மணிக்கு வலியவன் திரைப்படமும், இரவு 10.30 மணிக்கு பாண்டியநாடு திரைப்படமும் ஒளிபரப்பாகிறது.
ஸ்ரீலங்கா வசந்தம் டிவி
தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஸ்ரீலங்காவில் உள்ள வசந்தம் தொலைக்காட்சியில் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது.
ஏசியா நெட் புலிமுருகன்
மலையாள சேனலான ஏசியா நெட் தொலைக்காட்சியில் விசுக்கனி பிறப்பு கொண்டாட்டமாக புலிமுருகன் திரைப்படம் ஒளிபரப்பாகிறது.
ஜீ தமிழ் சைத்தான்
ஜீ தமிழ் டிவியில் விஜய் ஆன்டணி நடித்த சைத்தான், விஜய் சேதுபதி நடித்த றெக்க திரைப்படம் ஒளிபரப்பாக உள்ளது. தமிழ் புத்தாண்டு தினத்தில் யாரு கையில் ரிமோட் இருக்கோ அவங்கதான் ராஜா.