Don't Miss!
- News
"ஆபரேஷன் 111".. எடப்பாடி இறக்கிய மெகா டீம்.. நடப்பது நடக்கட்டும்.. பறந்து போன ஆர்டர்.. ஆஹா செம மோதல்
- Lifestyle
சாணக்கிய நீதியின் படி இந்த நபர்கள் எதிரிகளை விட ஆபத்தானவர்களாம்... இவங்கள பக்கத்துலேயே சேர்க்காதீங்க...!
- Sports
ஹர்திக் பாண்டியா முன் காத்திருக்கும் சவால்..ஒரு தவறு செய்தால் மொத்தமாக குளோஸ்..பாடம் கற்பாரா கேப்டன்?
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
சினிமாவே வேண்டாம்.. அந்த மாதிரி சான்ஸே தராங்க.. சீரியல் பக்கம் கவனம் செலுத்தும் இளம் நடிகை!
சென்னை: இளம் நடிகை ஒருவர் ஆசை ஆசையாக சீரியல் இருந்து சினிமாவை நோக்கி முன்னேற வேண்டும் என பெரும் முயற்சிகளை மேற்கொண்டு சில படங்களிலும் நடித்து விட்டார்.
ஆனால், தொடர்ந்து அவருக்கு சரியான கதாபாத்திரங்கள் அமையாமல் ஒரு மாதிரியான கதாபாத்திரங்களையே கொடுத்து வரும் நிலையில், இனிமேல் சினிமாவில் நடிக்கவே போவதில்லை என்கிற முடிவுக்கே வந்து விட்டாராம்.
சின்னத்திரை மட்டுமே போதும் என்கிற முடிவுக்கே நடிகை செல்ல சினிமாவில் வாய்ப்புக்காக நடத்தப்படும் ஏகப்பட்ட மோசடிகள் தான் காரணம் என்கிறார்.
வர நடிகைகளை எல்லாம் அவாய்டு பண்ணும் நம்பர் நடிகை.. டாப் நடிகருடன் ஜோடி போட பக்கா பிளானா?

அட்ஜெஸ்ட்மென்ட் பண்ண சொல்றாங்க
சீரியலில் நடித்து வந்த அந்த இளம் நடிகை அடுத்து சினிமாவில் நல்ல நடிகையாக வேண்டும் என நினைத்து ஆரம்பத்தில் கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு கோலிவுட்டில் அடியெடுத்து வைத்தார். ஆனால், அடுத்தடுத்த படங்களுக்கு முன்னேற முடியாமல் அவர் முடங்கிய நிலையில், தனது நட்பு வட்டாரத்தில் அதுகுறித்து மனம் திறந்து நடிகை பேசி உள்ளது கொஞ்சம் கொஞ்சமாக வெளியே கசிந்துள்ளது. பெரிய நடிகர்களின் பட வாய்ப்புகளை பெற அட்ஜெஸ்ட்மென்ட் பண்ண சொல்றாங்க என புலம்பித் தள்ளி இருக்கிறாராம் அந்த நடிகை.

சின்னத்திரையே சேஃப்டி
சின்னத்திரையில் திருமணம் ஆனாலும் நடிகைகள் எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் நடிக்க முடிகிறது. மக்கள் தங்களை ரசிக்கின்றனர், ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், சினிமாவில் வாய்ப்பு தேடி சென்றாலே திருமணம் ஆனதை மறைக்க வேண்டும் என சொல்லுகின்றனர். மேலும், விவகாரமான கதாபாத்திரங்களையே கொடுக்கின்றனர் என மனம் நொந்து பேசியுள்ளாராம்.

அப்படி நடிக்க பிடிக்கவில்லை
தேவைக்கு ஏற்ப சம்பளமும் பணமும் இங்கேயே கிடைக்கிறது. நம்மோட நடிப்புத் திறமையை வெளிக்காட்டலாம் என நினைத்து தான் சினிமாவுக்கு செல்ல ஆசைப்பட்டேன். ஆனால், அப்படியெல்லாம் பண்ணித்தான் நடிக்கணும்னா, அது தனக்கு செட்டே ஆகாது என ஒதுங்கி விட்டதாக அந்த இளம் நடிகை கூறி உள்ளார்.

ஃபோர்ஸ் பண்றாங்க
ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் கொடுப்பது, நடிப்புத் தானே என நாமும் நடித்தால், அப்படி நடிச்சவங்க தானே அப்புறம் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண ஏன் மறுக்கிறீங்க, நீங்க மட்டும் கொஞ்சம் வளைந்து கொடுத்தால் முன்னணி ஹீரோயினாக மாறிடுவீங்க என யாருன்னே தெரியாதவங்களாம் வந்து பேசி மோசடி பண்றாங்க, இவங்களை எல்லாம் சமாளித்தால் தான் முன்னேற முடியுமா? என்கிற குழப்பத்திலேயே சின்னத்திரையே போதும் என தோன்றுகிறது என அந்த இளம் நடிகை தெரிவித்துள்ளார்.