ஸ்கூல் பையன் ரோலில் சிவகார்த்திகேயனா...அதுவும் இந்த படத்திலா?
சென்னை : சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் சமீபத்தில் தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டது. உலகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ள இந்த படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. லாக்டவுனிற்கு பிறகு வெளிவந்துள்ள பிளாக்பஸ்டர் படம் இது.
விஜய்யின் மாஸ்டர் படத்திற்கு பிறகு, இந்த ஆண்டில் ரிலீசாகி மிகப் பெரிய வசூலை பெற்றுள்ள படம் டாக்டர் தான். இந்த ஆண்டில் வெளியிடப்பட்ட மிகப் பெரிய வெற்றி படங்களில் ஒன்றாக இந்த படமும் உள்ளது.

வித்தியாசமான ரோலில் சிவகார்த்திகேயன்
வழக்கமாக ஜாலியான கேரக்டர்களில், சிரித்த முகத்துடன், லவ் பாய் ரோலில் தான் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். முதல் முறையாக டாக்டர் படத்தில் வழக்கத்திற்கு மாறாக, சிரிக்காமல் சீரியசான கேரக்டரில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இருந்தாலும் இதுவும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

டான் பட ஷுட்டிங்கில் மும்முரம்
நெல்சன் திலீப்குமார் இயக்கிய டாக்டர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லே, சுனில் ரெட்டி, தீபா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். டாக்டர் படத்தை தொடர்ந்து டான் படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
Recommended Video

ஸ்கூல் பையல் ரோல்
அயலான் படத்தை முடித்த கையோடு சிபி சக்கரவர்த்தி இயக்கும் டான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் காதலை மையமாகக் கொண்ட படமாக எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் ஸ்கூல் பையன் ரோலில் நடிக்கிறாராம் சிவகார்த்திகேயன். அதற்காக உடல்எடையை குறைத்து ஸ்லிம் தோற்றத்திற்கு மாறி உள்ளார். சிவகார்த்திகேயனின் சமீபத்திய தோற்றத்தை பார்த்து படக்குழுவே ஆச்சரியப்பட்டுள்ளதாம்.

தனுஷின் நண்பன்
இதற்கு முன் 2012 ல் தனுஷ் நடித்த 3 படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார் சிவகார்த்திகேயன். அதில் ஸ்கூல் பையன் ரோலில் நடித்திருந்தார். அதற்கு பிறகு 10 ஆண்டுகள் கழித்து தற்போது மீண்டும் ஸ்கூல் பையன் ரோலில் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன். ஐஸ்வர்யா தனுஷ் இயக்கிய இந்த படத்தில் தனுஷ், ஸ்ருதிஹாசன், சிவகார்த்திகேயன் மூன்று பேருமே ஸ்கூல் யூனிஃபார்ம் போட்டு நடித்திருப்பார்கள்.

அடுத்து சிங்கபாதை
லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் டான் படத்தில் சிவகார்த்திகேயனுடன் பிரியங்கா அருள் மோகன், எஸ்.ஜே.சூர்யா, முனிஸ்காந்த், காளி வெங்கட், பாலசரவணன், சிவாங்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். டான் படத்தை முடித்து விட்டு, சிங்க பாதை படத்தின் வேலைகளை துவக்க போகிறார் சிவகார்த்திகேயன்.


Click it and Unblock the Notifications











