பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா கீர்த்தி சுரேஷ்.. புதிய லுக்கால் குழம்பிப் போன ரசிகர்கள்!

சென்னை: நடிகை கீர்த்தி சுரேஷ் இந்தி படத்தில் நடிப்பதற்காக உடல் எடையை குறைத்ததில் இருந்தே அவரது பழைய அழகு குறைந்து விட்டதாக ரசிகர்கள் ரொம்பவே வருத்தம் தெரிவித்து வந்தனர்.

மீண்டும் தனது பழைய அழகை திரும்ப கொண்டு வரும் முயற்சியில் ஏகப்பட்ட வேலைகளை பார்த்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது உதட்டிற்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமீபத்தில் மகேஷ் பாபு நடிப்பில் கீர்த்தி சுரேஷ் நடித்த சர்காரு வாரி பாட்டா படத்தை பார்த்த ரசிகர்களும் இதே கேள்வியை சமூக வலைதளங்களில் எழுப்பி வருகின்றனர்.

மெலிந்து போன கீர்த்தி சுரேஷ்

மெலிந்து போன கீர்த்தி சுரேஷ்

இது என்ன மாயம், ரஜினி முருகன், ரெமோ, சர்கார், சண்டக் கோழி 2, நடிகையர் திலகம் படம் வரை கும்முனு இருந்த நடிகை கீர்த்தி சுரேஷ், அஜய் தேவ்கனின் பாலிவுட் படமான மைதான் படத்தில் நடிப்பதற்காக தனது உடல் எடையை மொத்தமாக குறைத்தார். படக்குழுவினர் எதிர்பார்த்ததை விட அவரது தோற்றம் மோசமாக மாறியதே அந்த படத்தில் அவருக்கு வந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது என்றும் பிரியாமணிக்கு அந்த வாய்ப்பு சென்று விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

சரிந்த மார்க்கெட்

சரிந்த மார்க்கெட்

கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் நயன்தாரா, சமந்தாவை தூக்கிச் சாப்பிட்டு முன்னணி நடிகையாக மாறிய கீர்த்தி சுரேஷ் நடிகையர் திலகம் படத்தில் நடித்து தேசிய விருதும் வென்று மற்ற தென்னிந்திய நடிகைகளை பொறாமை கொள்ளச் செய்தார். விறுவிறுவென ஏறிய அவரது மார்க்கெட் அவரது உடல் எடை குறைப்புக்குப் பின்னர் அப்படியே சரிந்து விட்டது. அதற்கு பிறகு அவர் நடிப்பில் வெளியான பல படங்கள் அவருக்கு பெரிய வெற்றியை கொடுக்கவில்லை.

தங்கச்சி கதாபாத்திரம்

தங்கச்சி கதாபாத்திரம்

ஹீரோயினாக நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்தில் தங்கச்சியாக நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். மேலும், சிரஞ்சீவியின் போலா சங்கர் படத்திலும் சிரஞ்சீவிக்கு தங்கச்சியாக நடிக்கிறார் கீர்த்தி சுரேஷ். தமிழில் அஜித்துக்கு தங்கச்சியாக நித்யா மேனன் வேதாளம் படத்தில் நடித்ததன் பிறகு தான் அவரது மார்க்கெட் முற்றிலுமாக குறைந்தது குறிப்பிடத்தக்கது.

உதடு அறுவை சிகிச்சை

உதடு அறுவை சிகிச்சை

தனது தோற்றத்தை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வரும் நிலையில், மீண்டும் அழகாக மாற வேண்டும் என்கிற முனைப்புடன் உடற்பயிற்சி உள்ளிட்ட ஆரோக்கிய விஷயங்களில் கவனம் செலுத்தி வருகிறார் கீர்த்தி சுரேஷ். இந்நிலையில், கீர்த்தி சுரேஷ் தனது உதடுகளை அழகாக்க அறுவை சிகிச்சை செய்துக்கொண்டதாரா என்கிற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி உள்ளனர்.

வித்தியாசமா இருக்கு

வித்தியாசமா இருக்கு

சமீபத்தில் மகேஷ் பாபுவுடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்த சர்காரு வாரி பாட்டா படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷின் உதடுகள் வித்தியாசமாக இருப்பதை நோட் பண்ண அவரது ரசிகர்கள் தான் இப்படியொரு கேள்வியை எழுப்பி உள்ளனர். ஆனால், இது தொடர்பாக கீர்த்தி சுரேஷ் இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X