X
90 ML

90 ML

Comedy | 01 Mar 2019 | A |
Tamil

2.5 /5 Users

2 /5 Filmibeat

90 ML கதை

90 ML இயக்குனர் அழகிய அஸுர இயக்கத்தில் ஓவியா நடிக்கும் நகைச்சுவை திரைப்படம், இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் அனிதா உதீப் தயாரிக்க, இசையமைப்பாளர் சிலம்பரசன் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் பாடல்கள் இணையத்தளத்தில் வெளியாகி பரிபலமாகியுள்ளது. சிலம்பரசன் இசையில் மரண மட்ட பாடல் 2018-ம் ஆண்டு புத்தாண்டில் வெளியாகி ரசிக்கப்பட்ட நிலையில், ப்ரிண்டி சாங், பீர் பிரியாணி என இரு பாடல்கள் 2019-ம் ஆண்டு ஜனவரியில் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தின் மரண மட்ட பாடலை நடிகை ஓவியா பாடியுள்ளார்.  கதை  சென்னையில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்புக்கு கையில் சிகரெட்டுடன் வருகை தருகிறார் ரீடா (ஓவியா), இவர் தன் காதலனுடன் தாற்காலியமாக லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்துவருகிறார். இதனை அறியும் அந்த அபார்ட்மெண்ட் பெண்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்படுகிறது. அந்த அபார்ட்மெண்டில் நான்கு பெண்கள் ஓவியாவுடன் நெருக்கமாக பழகுகின்றனர். அவர்கள் தன் குடும்பம், கணவர், வாழ்க்கை என ஒரு சிறு வட்டத்துக்குள் தன் வாழ்க்கையை வாழ்கின்றனர். பின் ஓவியாவுடன் நெருக்கமான பழக்கத்தால் அபார்ட்மெண்ட் தோழிகள் தங்களுக்கு உள்ள பிரச்சனைகளை ஓவியா கொடுக்கும் தைரியத்தை வைத்து எதிர்கொள்கிறார்கள்.
Read More

90 ML நடிகர்கள் & படக்குழுவினர்

90 ML அணியின் தகவல்

இயக்குனர் அனிதா உதீப்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை சிலம்பரசன்
தயாரிப்பாளர் அனிதா உதீப்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

90 ML விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
படத்தில் பூதக்கண்ணாடி வைத்து தேடினால்கூட கதை என்ற ஒன்று எங்கேயும் கிடைக்கவில்லை. 'என் வாழ்க்கை, என் இஷ்டம்' என்ற கேரக்டர் ஓவியா. அன்சன் பாலுடன் லிவ்விங் டுகெதர் முறையில் வாழ்க்கை நடத்துகிறார். இருவரும் ஒன்றாக தம்மடித்து, தண்ணியடித்து, செக்ஸ் வைத்துக்கொண்ட நேரம் போக, கொஞ்சம் வேலைக்கும் போகிறார்கள். இப்படிப்பட்ட இந்த ஜோடி, ஒரு அப்பார்ட்மெண்டுக்கு குடியேறுகிறது. அங்கு ஏற்கனவே குடியிருக்கும் நான்கு பெண்களுடன் நட்பாகிறார் ஓவியா. அந்த நால்வரில் மூவர் திருமணமானவர்கள், ஒருவர் மட்டும் வேலைக்கு போகும் இளம்பெண். இந்த ஐவர் கூட்டணி ஒன்றாக சேர்ந்து, தம்மடித்து, தண்ணியடித்து, கஞ்சா இழுத்து, செக்ஸ் கதை பேசி பொழுதை கழிப்பது தான் முழுபடமும். 'ஆண்கள் செய்யும் அத்தனை விஷயங்களையும் பெண்களாலும் செய்ய முடியும். ஏன் பொண்ணுங்க தம்மடிக்கக் கூடாதா, தண்ணியடிக்கக் கூடாதா, செக்ஸ் பற்றி பேசக்கூடதா' என்று கேட்கும் பெண்ணியவாதிகள் கூட இந்த படத்தை பார்த்தால் நிச்சயம் ஷாக் ஆவார்கள். அந்தளவிற்கு படத்தில் எல்லா விசயங்களுமே படுதூக்கலாக இருக்கிறது. படம் முழுக்க அந்த ஐந்து பெண்களும் போதையிலேயே மிதக்கிறார்கள். இது ஒன்றே படம் யதார்த்த வாழ்வில் இருந்து எத்தனை தூரம் தள்ளி நிற்கிறது என்பதற்கு உதாரணம்.

90 ML திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

90 ML

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+