X
தடம்

தடம்

Crime | 01 Mar 2019 | U/A |
Tamil

2.5 /5 Users

3.5 /5 Filmibeat

தடம் கதை

தடம் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில், அருண் விஜய், யோகி பாபு, வித்யா நடிக்கும் அதிரடி மற்றும் திரில்லர் திரைப்படம். இத்திரைப்படத்தினை தயாரிப்பாளர் இந்தர் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் அருண் ராஜ் இசையமைத்துள்ளார். இத்திரைப்படம் உண்மை சம்பவத்தை மையமாக்கி எடுக்கப்பட்டுள்ள போலீஸ் க்ரைம் திரைப்படம். கதைச்சுருக்கம் ஒரு கொலை வழக்கு, அதில் சம்மந்தப்படும் ஓரே உருவம் கொண்ட இரட்டையர், அவர்களில் யார் கொலையாளி என கண்டுபிடிக்க முடியாமல் அலையும் போலீசின் திண்டாட்டம் தான் 'தடம்'.  கதை சிவில் இன்ஜினியரான எழிலுக்கு (அருண் விஜய்), தீபிகா (தன்யா ஹோப்) மீது காதல். தீபிகாவும் எழிலின் காதலை ஏற்றுக்கொள்கிறார். கட்டிட தொழிலில் கோடி கோடியா சம்பாத்தித்து, தன்னுடைய தொழில், வியாபாரத்தை பெருக்கி காதலி தீபிகா உடன் இன்ப வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே அவனது கனவு.  இதற்கிடையே, சுருளிவுடன் (யோகி பாபு) கூட்டணி அமைத்து திருட்டு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார் கவின் (மற்றொரு அருண் விஜய்). பெண்களை சல்லாபத்துக்கு மட்டுமே பயன்படுத்தும் கவின், வழக்கறிஞர்களுக்கே தெரியாத சட்ட நுணுக்கங்களை அறிந்தவர். சுயநலம் பிடித்த கவினுக்கு, ஆனந்தியின் (ஸ்மிருதி வெங்கட்) உண்மையான காதலை ஏற்றுக்கொள்ள மனமில்லை. இருவரும் வெவ்வேறு பாதையில் போய்க்கொண்டிருக்கும் போது, இருவரில் ஒருவர், அஜய் என்பவரை கொலை செய்துவிடுகிறார். ஆனால் போலீசாருக்கு ஒரு தோற்றத்தில் இருவர் இருக்கின்றனர் என்ற விவரம் தெரியாது. சம்மந்தப்பட்ட கவின் மற்றும் எழில் இருவருக்குமே தெரியாது.  இந்த வழக்கை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி கோபாலகிருஷ்ணன் (ஃபெப்ஸி விஜயன்), இறந்தவரின் மொபைல் போனில் இருக்கும் புகைப்படத்தை வைத்து எழிலை பிடித்து விசாரிக்கத் தொடங்குகிறார். முன்னர், எழில் மீது தனக்கு இருக்கும் தனிப்பட்ட வஞ்சத்தை தீர்க்கவும், இந்த வழக்கை அவர் முடிந்தவரை பயன்படுத்த முயற்சிக்கிறார்.  இந்த வழக்கை கையில் எடுக்கும் உதவி ஆய்வாளர் வித்யா பிரதீப், எழிலைக் கைது செய்கிறார். அப்போது எதேச்சையாக டிரங் அண்ட் டிரைவ் வழக்கில் சிக்குகிறார் கவின். இதனால் போலீசாருக்கு யார் கொலையாளி என்பதில் சந்தேகம் ஏற்படுகிறது. இருவரில் யார் உண்மையான கொலையாளி? அவரை போலீசார் எப்படி கண்டுப்பிடிக்கிறார்கள் என்பது தான் விறுவிறுப்பான மீதிப்படம்.
Read More

தடம் நடிகர்கள் & படக்குழுவினர்

தடம் அணியின் தகவல்

இயக்குனர் மகிழ் திருமேனி
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை அருண் ராஜ்
தயாரிப்பாளர் இந்தர் குமார்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

தடம் விமர்சகர்களின் விமர்சனம்

பில்மிபீட்
தடையற தாக்க மூலம் தடம் பதித்த மகிழ் திருமேணி, இந்த படத்தின் மூலம் மீண்டும் தனது தடத்தை அழுத்தமாக பதித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஆரம்பம் முதல் க்ளைமாக்ஸ் வரை விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து, பார்வையாளர்களை சீட்டின் நுனியிலேயே அமர வைக்கிறார். நல்ல க்ரைம் திரில்லர் படம் பார்த்த அனுபவம் கிடைக்கிறது. மகிழ்ச்சி மகிழ். தமிழ் சினிமாவில் இரட்டையர் கதை ஒன்றும் புதிதல்ல. இரட்டையரில் ஒருவர் தப்பு செய்ய, மற்றொருவர் போலீசில் சிக்கிக் கொள்ள என ஏற்கனவே இதேபோன்ற இரட்டையர் படங்கள் பல வந்திருக்கிறது. ஆனாலும், தனது திரைக்கதை மூலம் படத்தை புதிதாக காட்டி இருக்கிறார் மகிழ் திருமேனி. இருவரில் யார் குற்றவாளி என பார்வையாளர்கள் எளிதில் யூகித்துவிட முடியாத அளவுக்கு, நிறைய கதாபாத்திரங்களைக் கொண்டு, டிவிஸ்ட் மேல் டிவிஸ்ட் வைத்திருப்பது பாராட்டுக்குரியது. படத்தில் மூன்று கதாநாயகிகள். அதில் வித்யா பிரதீப்புக்கு மட்டும் தான் நடிப்பதற்கு வாய்ப்பு. பெண் உதவி ஆய்வாளராக மிடுக்காக வரும் அதேவேளையில், வழக்கை முடிக்க முடியாமல் திணறும் போது கவனம் ஈர்க்கிறார்.

தடம் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

தடம்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+