X
தொடரி

தொடரி

Drama | 22 Sep 2016 | U | 108 Mins
Tamil

2.5 /5 Users

2 /5 Filmibeat

தொடரி கதை

தொடரி  இயக்குனர் பிரபு சாலமனின் இயக்கத்தில் தனுஷ் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் காதல் திரைப்படம். இத்திரைப்படம் சென்னை முதல் மும்பை வரை செல்லும் ஒரு ரயிலில் நடக்கும் காதல் மற்றும் அதிரடியை மையமாக கொண்டு படமாக்கப்பட்டுள்ளது. கதை : ரயிலில் கான்டீன் வேலை செய்பவராக வருகிறார் பூச்சியப்பன் (தனுஷ்). அதே ரயிலில் ஒரு நடிகைக்கு டச்சப் பெண்ணாக வருகிறார் சரோஜா (கீர்த்தி சுரேஷ்). சரோஜாவுக்கு தான் எப்படியாவது பாடகியாக ஆகவேண்டும் என்ற ஆசை. சரோஜாவை கடந்ததும் பூச்சியப்பனுக்கு காதல் மலர, தனக்கு வைரமுத்துவை தெரியும் என்று பொய் கூறி பழக ஆரம்பிக்கின்றனர்.  ஒரு கட்டத்தில், பூச்சியப்பன் கூறியது பொய் என தெரிந்ததும் சரோஜா பிரிந்து செல்கிறார். இந்நிலையில், ரயில் என்ஜின் மாஸ்டர் மாரடைப்பில் இறந்து போக, ரயில் 140 கிமீ  வேகத்தில் செல்கிறது.  அந்த ரயிலை நிறுத்த பல போராட்டங்கள் முயற்சிகள் மேற்கொள்கின்றனர். இறுதியில் ரயிலை நிறுத்தினரா? பூச்சியப்பன் மற்றும் சரோஜாவின் காதல் என்ன ஆயிற்று என்பது மீதிக்கதை. 
Read More

தொடரி நடிகர்கள் & படக்குழுவினர்

தொடரி அணியின் தகவல்

இயக்குனர் பிரபு சாலமன்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை டி இமான்
தயாரிப்பாளர் தி ஜி தியாகராஜன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

தொடரி விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
தமிழில் வரும் முதல் ரயில் படம் என்ற அறிவிப்போடு வந்துள்ள தொடரியின் முதலும் கடைசியுமான வித்தியாசம் தலைப்பில் மட்டும்தான். நல்ல தமிழில் ஒரு டைட்டில். ஆனால் ஒரு நல்ல படத்துக்கு தலைப்பு மட்டும் நன்றாக இருந்தால் போதாதே! வித்தியாசமான கதைக் களம்தான். ஆனால் அதை எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு சொதப்பியிருக்கிறார் இயக்குநர் பிரபு சாலமன். முதல் பாதி முடியும் வரை என்ன கதை என்பதைக் கண்டுபிடித்துச் சொல்பவர்களுக்கு ஏதாவது ஒரு சொகுசு தொடரியின் முதல் வகுப்பு டிக்கெட்டை பரிசாகத் தரலாம். இரண்டாவது பாதியில் கிட்டத்தட்ட 50 நிமிடங்கள் தனுஷைக் கட்டி ஒரு ரூமுக்குள் அடைத்துவிடுகிறார்கள். முதல் பாதி பாஸஞ்சரை விட படு ஸ்லோ என்றால், இரண்டாம் பாதியில் படுவேகமாக ஓடிக் கொண்டிருக்கும் ரயிலின் மேல் ஏறி கண்ணாமூச்சு விளையாடி கெக்கே பிக்கே பண்ணியிருக்கிறார்கள். படு செயற்கையான, எளிதில் கண்டுபிடித்துவிடக்கூடிய சிறுபிள்ளைத்தனமான சிஜி வேலைகள் கடுப்பேற்றுகின்றன. 'லாஜிக் மீறல்' என்ற பதத்துக்கே அர்த்தம் இந்தப் படத்தின் இரண்டாம் பாதி. தேசிய விருது நடிகர் தனுஷின் நடிப்பில் குறையில்லை. பூச்சியப்பனாகவே மாறியிருக்கிறார். சரோஜாவாக வரும் கீர்த்தி சுரேஷ் இப்போதே சுதாரித்துக் கொள்வது நலம். இல்லாவிட்டால் இன்னொரு லூஸ் ஹீரோயின் ஆக்கிவிட வாய்ப்புள்ளது. ஹரீஷ் உத்தமன் நன்றாகவே வில்லத்தனம் செய்கிறார். படத்தின் ஒரே ஆறுதல் தம்பி ராமையா, இமான் அண்ணாச்சி, கருணாகரன் கூட்டணியின் நகைச்சுவை. ஆனால் சீரியல் காட்சிகளையும் கோமாளித்தனமாக்கியிருப்பதில் எதுவுமே எடுபடாமல் போயிருக்கிறது. இசை, பாடல்களில் இன்னும் கும்கி வாசனை. அந்த வட்டத்தை விட்டு இன்னும் வெளியில் வரவே இல்லை இமான். இன்றைய சூழலில் இயக்குநர்களுக்கு கேட்ட வசதியெல்லாம் செய்து கொடுத்து நல்ல வாய்ப்புகளைத் தரும் தயாரிப்பாளர்கள் வாயப்பது அரிதிலும் அரிதாகிவிட்டது. முதல் காட்சியைப் படமாக்கத் தொடங்குவதிலிருந்து பூசணிக்காய் உடைக்கும் வரை இந்த உண்மையை மனதில் கொண்டு பிரபு சாலமன்கள் படம் பண்ணினால், தொடரி மாதிரி 'விபத்துகள்' தவிர்க்கப்பட வாய்ப்புள்ளது!

தொடரி திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

தொடரி

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+