»   »  ஒரு படம் கற்றுக்கொடுத்த பாடம்!

ஒரு படம் கற்றுக்கொடுத்த பாடம்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
இன்று முதல் தியேட்டரில் புது தமிழ் படம் பார்க்க முடியாது!- வீடியோ

மாநிலங்களுக்கு இடையே தண்ணீருக்காக நடக்கும் அரசியலை, ஒரு கிணற்றை சாட்சியாக வைத்து சொல்ல நினைத்த படம் அது. மலையாளம், தமிழ் இரண்டு மொழிகளில் உருவாக்கப்பட்டிருந்தது.
இன்றைய சூழலில் இந்தியாவிலுள்ள அத்தனைபேரும் அவசியம் பார்க்க வேண்டிய மிக முக்கியமான படம். அதன் நியாயம் புரிந்துதான் பிரபல நடிகர்கள் பலரும் படத்திற்குள் வந்திருக்கிறார்கள்.

இந்தப் படம் வெளியான இரண்டே நாளில் பல திரைங்குகள் பார்வையாளர்களே இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது!

A lesson from recently released movie

உதாரணத்திற்கு, கடந்த திங்கள் அன்று உதயம் திரையரங்கில் நடந்த 6 மணி ஷோவை எடுத்துக்கலாம். படம் தொடங்கும் போது நான்குபேர் மட்டுமே. அதன் பிறகு ஒரு நான்கு பெண்கள். படம் ஓடத்தொடங்கி இருபது நிமிடத்தில் வந்திருந்த ஆறுபேரும் அங்கிருந்து வெளியேறிவிட்டார்கள்.

என்ன காரணம்? தமிழ் படம் என்று சொல்லிவிட்டு படம் முழுக்க மலையாளத்தில் பேசுகிறார்கள் என்பது பிரதான குற்றச்சாட்டு. கூடவே படிக்க முடியாத அளவுக்கு சப் டைட்டில். ஒரு படமோ, படைப்போ பார்வையாளனுக்கு சென்றடைய வேண்டும் என்றால், அவனுக்குப் புரியும் மொழியில் சொல்லப்பட வேண்டும் என்பதே!

இயக்குநர் எடுத்த தப்பான முடிவால், அனைவருக்கும் போய்ச்சேர வேண்டடிய நல்ல படம் தியேட்டர்களில் வெறிச்சோடிக் கிடக்கிறதே என்பது திரையுலக கமெண்ட்.

English summary
That recently released good movie screened theaters are looking empty due to the language of the movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil