ரெஜினாவின் சானா கஷ்டம் பாடலுக்கும் வந்திருச்சு கஷ்டம்...இப்போ எதிர்ப்பது யார் தெரியுமா ?

ஐதராபாத் : புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய ஊ சொல்றியா மாமா அயிட்டம் பாடலை தொடர்ந்து ரெஜினா, சிரஞ்சீவியுடன் இணைந்து நடனமாடி உள்ள சானா கஷ்டம் பாடலுக்கும் ஆண்கள் அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இந்த பாடலும் தற்போது பிரபலமாக துவங்கி விட்டது.

அல்லு அர்ஜுன் நடித்த புஷ்பா படம் சமீபத்தில் ரிலீசானது. இதில் ஹீரோயின் ராஷ்மிகா மந்தனாவாக இருந்தாலும், பிரபலமாக பேசப்பட்டு, பெயர் வாங்கியது என்னவோ சமந்தா தான். ஒரே ஒரு அயிட்டம் சாங்கிற்கு ஆடி மொத்த பெயரையும் தட்டி சென்று விட்டார் சமந்தா. சமந்தா ஆடிய அந்த ஒற்றை பாடலுக்காகவே இந்த படம் கோடிகளை அள்ளி வருகிறது.

ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பு

ஆரம்பம் முதலே எதிர்பார்ப்பு

தென்னிந்திய மொழி சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா விவாகரத்திற்கு பிறகு நடிக்கும் முதல் படம், அதுவும் முதல் முறையாக அயிட்டம் சாங்கிற்கு ஆடுகிறார், இந்த ஒரு பாடலுக்கு அல்லு அர்ஜுனுடன் நடனமாட அவர் ரூ.150 கோடி சம்பளம் வாங்கி உள்ளார் என அடுத்தடுத்து வெளியான தகவல்கள் புஷ்பா படத்தில் சமந்தா ஆடிய பாடல் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது.

ஊ சொல்றியா மாமாவிற்கு எதிர்ப்பு

ஊ சொல்றியா மாமாவிற்கு எதிர்ப்பு

ஊ சொல்றியா மாமா பாடல் ஆண்களை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதாக கூறி, அந்த பாடலை தடை செய்ய வேண்டும் என ஆண்கள் சங்கத்தினர் எதிர்ப்பு கிளப்பிய பிறகு இந்த பாடல் செம ஹிட் ஆனது. அதுவும் இந்த பாடலை ஆண்கள் தான் அதிகம் விரும்பி பார்த்தனர். சமந்தா ஆடிய அயிட்டம் சாங் பற்றிய பேச்சுக்கள் அடங்குவதற்குள் சிஞ்சீவியின் ஆச்சாரியா படத்தில் ரெஜினாவும் அயிட்டம் சாங்கிற்கு ஆடி பரபரப்பை கிளப்பினார்.

இந்த பாடலுக்கும் எதிர்ப்பா

இந்த பாடலுக்கும் எதிர்ப்பா

இருந்தாலும் சமந்தாவின் ஊ சொல்றியா மாமா பாடல் அளவிற்கு ரெஜினா ஆடிய சானா கஷ்டம் பாடல் பிரபலமாகவில்லை. இந்நிலையில் விவேகாவின் பாடல் வரிகளில் அமைந்த இந்த பாடல், இன்றைய இளைஞர்கள் ஆர்எம்பி டாக்டராவதற்கே விரும்புவதாகவும், அந்த படிப்பு படித்தவர்களுக்கு தான் அழகு சிகிச்சை என்ற பெயரில் நடிகைகளை தொட்டு சிகிச்சை அளிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற அர்த்தத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

ஹிட்டாக்க தான் எதிர்ப்பா

ஹிட்டாக்க தான் எதிர்ப்பா

இந்த பாடல் வரிகளை மாற்ற வேண்டும். படக்குழுவினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஆண் டாக்டர்கள் அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதனால் இந்த பாடலில் அப்படி என்ன தான் இருக்கிறது என பார்ப்பதற்காக அதிகமானவர்கள் இந்த பாடலை பார்க்க துவக்கி விட்டனர். இதனால் நிஜயமாகவே இவர்கள் பாடலை எதிர்க்கிறார்களா அல்லது அந்த பாடலை ஹிட் ஆக்க வேண்டும் என இப்படி எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள் என்ற சந்தேகம் அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X