twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    முதல் முறையாக தமிழில் பாடிய பப்பிலஹரி!

    By Shankar
    |

    பப்பி லஹரியை நினைவிருக்கிறதா... எண்பதுகளின் இறுதியில் பாலிவுட்டின் முன்னணி இசையமைப்பாளர். டிஸ்கோ டான்ஸர் போன்ற படங்களில் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட்.

    ரஜினி நடித்த ஜீத் ஹமாரி, மஹாகுரு, பேவாபா, வாஃபாதார், கிராப்தார் போன்ற பல இந்திப் படங்களுக்கு இசை அமைத்தவர். தமிழில் தாய் வீடு, பாடும் வானம்பாடி என சில படங்கள் செய்தார்.

    படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு இப்போது இல்லாவிட்டாலும், தொடர்ந்து ஆல்பங்கள் செய்வதிலும், பாடகராகவும் பப்பிலஹரி பிஸியாகிவிட்டார்.

    குரு படத்தில் ரஹ்மான் இசையில் இவர் பாடிய பாடல் பெரிய வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து சில படங்களில் பாடினார். சமீபத்தில் தி டர்ட்டி பிக்சர் படத்தில் இவர் பாடிய ஊலலலா பாடலுக்கு ஏக வரவேற்பு.

    இப்போது தமிழில் முதல் முறையாகப் பாடுகிறார். கருப்பம்பட்டி படத்தில் இடம்பெறும் 'நாட்டி ராஜா ராஜா..' என்ற பாடலை 'தமிழ்ப்படம்' புகழ் கண்ணன் இசையில் பாடினார்.

    இந்தப் பாடலுக்காக அவருக்கு பெரிய தொகையைக் கொடுத்து, மும்பை ஸ்டுடியோவில் வைத்து பதிவு செய்தனர்.

    இந்தப் பாடலுக்கு பப்பிலஹரியைப் பிடித்தது ஏன் என்று கேட்டபோது, இயக்குநர் பிரபுராஜ சோழன் கூறுகையில், "கொலவெறிப் பாட்டுக்குப் பிறகு தமிழ் இசை பக்கம் இன்னும் கூடுதல் கவனம் கிடைத்திருக்கிறது. வித்தியாசமாக செய்யும் போது அது சர்வதேச அளவில் ரீச் ஆகிறது. பப்பிலஹரி சிறப்பாக பாடிக்கொடுத்தார். இசையமைப்பாளர் கண்ணனை வாழ்த்தினார்," என்றார்.

    கருப்பம்பட்டி படத்தில் அஜ்மல், அபர்ணா பாஜ்பாய் நடித்துள்ளனர்.

    English summary
    Bappilahiri, one of the leading composers in Bollywood has crooned for a Tamil movie for the first time.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X