பிக் பாஸ் சீசன் 6: பாதாம் தெரியும் ஆதாம் யாரு? மீண்டும் கமலை நொந்துபோக வைத்த ஜிபி முத்து
சென்னை: விஜய் டிவி தயாரிக்கும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த ஒரு வாரமாக ஒளிப்பரப்பாகி வருகிறது.
கமல் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் டிக் டாக் புகழ் ஜிபி முத்துவும் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளராக பங்கேற்றுள்ளார்.
பிக் பாஸ் வீட்டுக்குள் அடியெடுத்து வைத்த நாள் முதல் ஜிபி முத்துவின் அட்ராசிட்டி தொடர்ந்து வருகிறது.

பிக் பாஸ் சீசன் 6
விஜய் டிவியின் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த வாரம் 9ம் தேதி தொடங்கியது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சியில் மொத்தம் 20 பேட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர். இவர்கள் இப்போது 4 அணிகளாக பிரிந்து போட்டிப் போட்டு வருகின்றனர். வழக்கமாக 40 நாட்களில் தொடங்கும் சண்டைகள் எல்லாம், நான்கே நாட்களில் தொடங்கிவிட்டது என கமலே சொல்லும் அளவிற்கு குடுமிபிடி சண்டைகள் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில் முதல் நாளிலேயே அசத்தலான ப்ரோமோவுடன் மேடையேறிய ஜிபி முத்துவுக்கு ரசிகர்கள் மட்டுமின்றி சக போட்டியாளர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

முதல் நாளிலேயே அட்ராசிட்டி
முதல் ஆளாக பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைந்த ஜிபி முத்து, அங்கே தனியாக இருக்க பயந்து நடுங்கினார். யாருமே இல்லாததால் கேமராக்களைப் பார்த்து அவர் கொடுத்த ரியாக்ஷன்கள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. பிக் பாஸ் வீட்டுக்குள் தனியாக இருக்க பயமா இருக்கு சார் என கமலிடம் ஜிபி முத்து சொல்ல, அவரோ அதற்கு "எதோ டெக்னிக்கல் ப்ராப்ளமாம், அதனால இன்னும் ஒருநாள்ல அடுத்த ஆள் வருவாங்க. அதுவர நீங்க மட்டும் தனியா இருங்க" என வேடிக்கை காட்டினார். ஒருகட்டத்தில் கமலையே துணைக்கு உள்ளே வாங்கன்னு கூப்பிட்டு அதகளம் செய்தார்.

பாதாம் தெரியும், ஆதாம் யாரு?
அப்போது தனியாக இருந்த ஜிபி முத்துவிடம் பேசிய கமல், "இதுக்கெல்லாம் போய் பயப்படலாமா... ஏவாள் வரும் வர ஆதாம் மட்டும் தனியா இருந்த மாதிரி நீங்களும் இருங்கன்னு" சொல்லி முடிக்கவும், பிக் பாஸ் வீட்டில் இருந்த ஜிபி முத்து, "யாரு ஆதாமா" என திருப்பிக் கேட்டு கமலையே பங்கம் செய்தார். இந்நிலையில், பிக் பாஸ் வீட்டுக்குள் நேற்று என்ட்ரி கொடுத்த கமலிடம், மீண்டும் ஆதாம் யார் எனக் கேட்டு கலாய்த்துவிட்டார் ஜிபி முத்து. முதல் நாளில் 'ஆதாம்' காமெடி வைரல் ஆனதால் அங்கிருந்தே தொடங்கினார் கமல். .

மீண்டும் வைரலாகும் ஜிபி முத்து
அதனால், ஸ்டோர் ரூமில் இருந்த பாதாம் பருப்பை ஜிபி முத்துவிடம் எடுத்து வரசொன்னார் கமல். அதன் பின்னர் "பாதாம் தெரியுது ஆனால். ஆதாம் தெரியலையா?" என்று முத்துவிடம் கமல் கேட்க, அவரோ, "என்னது.. ஆதாமா.. அவர் யாரு?' என கமலிடம் திருப்பிக் கேட்டு அவரையே விழிபிதுங்க வைத்தார். அதுமட்டும் இல்லாமல் ஒரு பாதாமையும் எடுத்து வாயில் போட்டு மென்றுகொண்டிருந்தார் ஜிபி முத்து. இதைப் பார்த்த கமல் உட்பட பிக் பாஸ் ரசிகர்கள் ஜிபி முத்துவின் அட்ராசிட்டியை நினைத்து சிரித்து மகிழ்ந்தனர். ஒருபுறம் அட்ராசிட்டியில் கலக்கி வரும் ஜிபி முத்து, இன்னொரு பக்கம் சக போட்டியாளர்களுக்கு உதவி செய்து, அனைவரது மனதையும் கவர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











