twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கத்தி எடுத்து குத்திட்டு டாஸ்க்குன்னு சொல்லுவ? அதை நான் ஏத்துக்கணுமா? எரிமலையாக வெடித்த தாமரை!

    |

    சென்னை: தாமரை செல்வியை எப்படி சீண்டிவிட்டால் அவர் எரிமலையாக வெடிப்பார் என நன்கு அறிந்து வைத்துக் கொண்டு பிரியங்கா விளையாடுவதை பார்த்த ரசிகர்கள் அவரை திட்டித் தீர்த்து வருகின்றனர்.

    பாவனி பற்றி தப்பாக பேசக் கூடாது என ராஜுவிடம் பஞ்சாயத்து பேசிய பிரியங்கா தாமரை மற்றும் இமான் அண்ணாச்சியை இணைத்து வைத்து பேசுவது போல ஸ்கெட்ச் போட்டது பலருக்கும் எரிச்சலை கிளப்பியது.

    மொத்த மரியாதையையும் இழந்த பிரியங்கா.. கேவலமா விளையாடுறீங்க.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்! மொத்த மரியாதையையும் இழந்த பிரியங்கா.. கேவலமா விளையாடுறீங்க.. கழுவி ஊற்றும் நெட்டிசன்ஸ்!

    வழக்கம் போல இன்றைக்கும் பிரியங்கா தான் புரமோக்களில் நிறைந்து காணப்படுகிறார்.

    3வது புரமோ

    3வது புரமோ

    முதல் இரு புரமோக்களிலும் நடந்த அதே பஞ்சாயத்து தான் 3வது புரமோவிலும் தொடர்கிறது. பிரியங்கா டீமில் தப்பா மாட்டிக் கொண்ட சிபிக்கும் ராஜு டீமில் தப்பா மாட்டிக் கொண்ட பாவனிக்கும் ஒரே நிலைமை தான். இப்படி அணியை மாற்றி அமைத்தால் தான் சோலோ கேம் வெளிப்படும் என்பது தான் பிக் பாஸ் போடும் பக்கா பிளான்.

    தாமரைக்கு சிபி சப்போர்ட்

    தாமரைக்கு சிபி சப்போர்ட்

    பிரியங்கா, அபிஷேக் நைட் தூங்காம என்ன பேசிக்கிறாங்க, பாவனி யார் கூட நட்பா பழகுறாங்க போன்ற சென்சிட்டிவான விஷயங்களை கையில் எடுத்துக் கொண்டு பிக் பாஸ் பிரேக்கிங் நியூஸ் சீரியல் நியூஸாக மாறி விட்டது. தாமரையை டென்ஷனாக பிரியங்கா, அபிஷேக் நினைக்கிறாங்க என்பதை புரிந்து கொண்ட சிபி தாமரைக்கு சப்போர்ட்டாக பேச அதை பிடித்துக் கொண்டு பிரியங்கா வேறு ஒரு பிரச்சனையை கிளப்பி உள்ளார்.

    தாமரை பிரியங்கா சண்டை

    தாமரை பிரியங்கா சண்டை

    ஜாலியை ஜீலினு சொல்லி நாங்க க்யூட்டாக கொஞ்சிக்கிறோம் என பிரியங்கா சொன்ன நிலையில், செல்லப்பிள்ளை, தங்கப்பிள்ளை என சிபியை தாமரை செல்வி கொஞ்சுவதை பார்த்து பொறாமைப்பட்டு பேசுவது போல பிரியங்கா விரித்த வலையில் தாமரை செல்வி வசமாக சிக்கிக் கொண்டு சண்டை போட ஆரம்பித்தார்.

    முத்தம் கொடுக்கும் பிரியங்கா

    முத்தம் கொடுக்கும் பிரியங்கா

    கடந்த சில வாரங்களாகவே தொடர்ந்து தாமரைக்கு கேம் ஆட சொல்லி கொடுப்பது போல நடிக்கும் பிரியங்கா தாமரையின் உண்மையான முகத்தை தோலுரித்துக் காட்டுகிறேன் என பலமுறை போராடி வருகிறார். ஆனால், சண்டைக்கு பின்னர் ஓட்டு குறைந்து விடுமே என பயந்து தாமரைக்கு கொஞ்சம் கூட வெட்கமே இல்லாமல் போய் முத்தம் கொடுக்கிறாரே என அக்‌ஷராவை போல நெட்டிசன்களும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    கத்தி எடுத்து குத்திட்டு

    கத்தி எடுத்து குத்திட்டு

    கத்தியை எடுத்து குத்திட்டு.. அதுவும் டாஸ்க் என சொல்வது போல பிரியங்கா பேசுவது என்ன நியாயம் என எரிமலையாக சீறி எழுந்து தாமரை சண்டை போடும் 3வது புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது. தாமரை தான் சரியென்று சிலரும் பிரியங்கா தாமரையின் முகத்திரையை கிழித்து விட்டார் என்று சிலரும் சமூக வலைதளத்தில் சண்டை போட்டு வருகின்றனர்.

    English summary
    Bigg Boss Tamil 5 Day 60 Promo 3: Priyanka and Thamarai fight continues in the house
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X