Don't Miss!
- News வெள்ளிக்கிழமை இதை மட்டும் யாருக்கும் தராதீங்க.. எந்தெந்த பொருளை வெள்ளி கிழமை தானம் தரலாம் தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இன்று தொடங்குகிறது தனுஷின் ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங்.. குஷி மோடில் ரசிகர்கள்!
சென்னை: தனுஷ் நடிக்கும் தி கிரே மேன் ஹாலிவுட் படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்குகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். எந்த மாதிரி கதாப்பாத்திரம் என்றாலும் பட்டையை கிளப்பி வருகிறார்.
7 ஆண்டு கால காதல் திருமணம் முடிவுக்கு வந்தது.. விவாகரத்து நோட்டீஸ் கொடுத்த கிம் கர்தாஷியன்!
நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குநர், எழுத்தாளர், பாடலாசிரியர், என பல முகங்களை கொண்டுள்ளார்.
ஹாலிவுட்டில் என்ட்ரி
தமிழ் படங்கள் மட்டுமின்றி இந்தி படங்களிலும் நடித்து வரும் தனுஷ் ஹாலிவுட்டிலும் தடம் பதித்துள்ளார். தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் தி ஃபகிர் என்ற படத்தின் மூலம் ஹாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார் தனுஷ்.
மார்க் கிரேனியின் நாவல்
இந்நிலையில் தற்போது தி கிரே மேன் என்ற ஹாலிவுட் படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார் தனுஷ். இந்த படத்தின் ஷூட்டிங்கில் பங்கேற்பதற்காக சமீபத்தில் தனுஷ் அமெரிக்கா சென்றார். இந்த படம் மார்க் கிரேனி என்பவர் எழுதிய 'தி கிரே மேன்' என்கிற நாவலை அடிப்படையாக கொண்டது.
கொலை கூட்ட தலைவன்
இப்படத்தை ஆன்டனி ரூஸோ மற்றும் ஜோயி ரூஸோ சகோதரர்கள் இயக்குகின்றனர். ஹாலிவுட் நட்சத்திரங்கள் ரயான் காஸ்லிங், கிறிஸ் ஈவென்ஸ் உடன் நடிகர் தனுஷ் இணைந்து நடிக்கின்றனர். இதில் தனுஷ் ரயான் காஸ்லிங்கின் கேரக்டரை கொலை செய்யும் கூட்டத்தின் தலைவனாக நடிக்கிறார்.
லாஸ் ஏஞ்சல்ஸில்..
இந்நிலையில் இப்படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்குகிறது. இதுவரை ப்ரி புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வந்த நிலையில் இன்று முதல் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. முதற்கட்டமாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தி கிரே மேன் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.