twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'அவளோடே ராவுகள்' மூலம் சினிமாவில் அதிர்வுகளை ஏற்படுத்தியவர் ஐ.வி.சசி! #RIPIVSasi

    By Vignesh Selvaraj
    |

    சென்னை : கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற நடிகர்களை இயக்கிய பிரபல இயக்குனர் ஐ.வி. சசி உடல் நலக் குறைவால் தனது 69-வது வயதில் சென்னையில் இன்று காலமானார்.

    இவரது மரணம் திரையுலகில் அனைவரையும் வருத்தமடையச் செய்துள்ளது. நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரை இயக்கியவர் சசி. 'அலாவுதினும் அற்புத விளக்கும்' போன்ற படங்களை இயக்கி தனது திறமையால் தனி முத்திரை பதித்தவர்.

    தனது இயக்கத்தில் 'அவளோடே ராவுகள்' படத்தில் நடித்த நடிகை சீமாவை இவர் திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அனு, அனி என்ற இரு மகள்கள் உள்ளனர்.

     ஆர்ட் டைரக்டர்

    ஆர்ட் டைரக்டர்

    இயக்குநர் ஐ.வி. சசியின் முழுப்பெயர் இருப்பம் வீடு சசிதரன். இவர் கோழிக்கோட்டில் 1948-ம் ஆண்டில் பிறந்தார். சென்னை கலைக்கல்லூரில் டிப்ளமோ படித்துள்ளார். சினிமா உலகில் ஆர்ட் டைரக்டராக நுழைந்தார். பிறகு சில படங்களில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார்.

    மலையாள இயக்குநர்

    மலையாள இயக்குநர்

    ஐ.வி. சசி 1968-ல் தனது 27-வது வயதில் 'கலியல்ல கல்யாணம்' என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். 1970 முதல் 1990 வரை பல வெற்றிப்படங்களை தந்தவர் சசி. 'அவளோடே ராவுகள்', 'அனுபவம்', 'ஆள் கூட்டத்தில் தனியே', '1921', 'மிருகய்யா', 'பலராம் விஷ் தாராதாஸ்', 'ஆதியொழுக்குகள்', 'தேவசுரம்' உட்பட பல வெற்றிப்படங்களை மலையாளத்தில் எடுத்திருக்கிறார்.

    அவளோடே ராவுகள்

    அவளோடே ராவுகள்

    'அவளோடே ராவுகள்' படத்தின் மூலம் பிரபலமானார் சசி. இந்தப் படம் ஒரு இளம் விபச்சாரியின் வாழ்வியலைப் பேசும் படமாக வெளிவந்து ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. அந்தக் காலகட்டத்தில் திரையுலகில் பல அதிர்வுகளை ஏற்படுத்தியது இந்தப் படம். இந்தப் படத்தில் விபச்சாரியாக நடித்த நடிகை சீமாவையே திருமணம் செய்துகொண்டார் இயக்குநர் ஐ.வி.சசி.

    ரஜினி, கமல்

    ரஜினி, கமல்

    நடிகர் கமல்ஹாசனை வைத்து 'குரு', 'அலாவுதீனும் அற்புத விளக்கும்' ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார் சசி. ரஜினிகாந்தை வைத்து 'காளி', 'எல்லாம் உன் கைராசி' ஆகிய படங்களை இயக்கி உள்ளார் ஐ.வி.சசி. இந்தப் படங்கள் நல்ல ஹிட் ஆனதும் குறிப்பிடத்தக்கது.

    கமலுடன் பல படங்கள்

    கமலுடன் பல படங்கள்

    கமல்ஹாசனை வைத்து மலையாளத்தில் ஐ.வி.சசி இயக்கிய 'ஆசிர்வாதம்', 'ஆனந்தம் பரமானந்தம்', அனுமோதனம்', 'யேட்டா' உள்ளிட்ட படங்கள் நல்ல வெற்றியைப் பெற்றன. 'அவளோடே ராவுகள்' படத்தில் நடிகர் கமல்ஹாசன் தியேட்டருக்கு வெளியே நிற்கும் நபராக நடித்திருப்பார்.

    மம்முட்டியை அறிமுகம் செய்தவர்

    மம்முட்டியை அறிமுகம் செய்தவர்

    நடிகர் மம்முட்டியை தனது 'திரிஷ்னா' படத்தின் மூலம் ஐ.வி சசி அறிமுகப்படுத்தினார். இவர் இந்தி, மலையாளம், தமிழ் என 150 படங்களுக்கு மேல் இயக்கி உள்ளார். அவற்றில் பல படங்கள் பெரிய ஹிட் அடித்தன.

    விருதுகள்

    விருதுகள்

    தேசிய ஒருங்கிணைப்புக்காக 'ஆரூடம்' படத்திற்கு 1982 ஆம் ஆண்டு தேசிய விருது பெற்றார் ஐ.வி.சசி. சிறந்த இயக்குனருக்கான மாநில விருதுகளை இரண்டுமுறை பெற்று உள்ளார். சிறந்த கலை இயக்குநருக்கான விருதை 'அனுபவம்' படத்திற்காகப் பெற்றுள்ளார். 2015-ம் ஆண்டு ஜே. சி. டேனியல் விருது பெற்றார். 2013-ம் ஆண்டு வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்றுள்ளார்.

    உடல்நலக்குறைவு

    உடல்நலக்குறைவு

    இன்று காலை சென்னையில் சாலிகிராமத்தில் இருக்கும் அவரது வீட்டில் அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு உள்ளது. உடனடியாக மருத்துவமனை கொண்டு செல்லபட்டார். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. திரையுலகினர் அவரது மறைவுக்கு வருத்தங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

    English summary
    The famous director I.V.Sasi, who directed the leading actors, died today in Chennai due to poor health. His death has hurt everyone in the film industry. I.V.Sasi has directed more than 150 films.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X