அதிரடியான மாற்றங்களுடன் ‘புஷ்பா2’.. எப்ப படப்பிடிப்பு தெரியுமா?

சென்னை : புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தில் வெளிநாட்டு நடிகை ஒருவர் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

பான் இந்திய திரைப்படமாக வெளியான புஷ்பா திரைப்படம் உலகம் முழுவதும் பாக்ஸ் ஆபிஸில் 350 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளதாகவும், அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த திரைப்படமா புஷ்பா2 இருக்கும் என்று கூறப்படுகிறது.

புஷ்பா 2 திரைப்படம் வெளிநாட்டு பின்னணி கொண்ட திரைப்படமாக உருவாகி வருவதால், வெளிநாட்டு நடிகையை ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அல்லு அர்ஜுனின் புஷ்பா

அல்லு அர்ஜுனின் புஷ்பா

அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம், 'புஷ்பா'. சுகுமார் இயக்கிய இதில், ராஷ்மிகா மந்தனா ஸ்ரீவள்ளி என்ற கேரக்டரில் நடித்திருந்தார். மலையாள நடிகர் பஹத் ஃபாசில், கன்னட நடிகர் தனஞ்செயா, சுனில், அஜய் கோஷ், ராவ் ரமேஷ், மைம் கோபி உட்பட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர்.

ஊ சொல்றியா மாமா

ஊ சொல்றியா மாமா

நடிகை சமந்தா, ஊ சொல்றியா மாமா என்ற குத்துப்பாடலுக்கு ஆடியிருந்தார். தேவிஸ்ரீ பிரசாத் இசையில் படல்கள் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டடித்தது இந்த பாடல், இந்த பாடலை பார்ப்பதற்காவே திரையரங்குகளில் கூட்டம் கூடி ஆட்டம் போட்டனர். அது மட்டும் இல்லாமல் வாயா சாமி, ஸ்ரீவள்ளி பாடலும் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகின. புஷ்பா திரைப்படம தெலுங்கு தவிர, தமிழ், இந்தி, மலையாளம், கன்னட மொழிகளில் வெளியான அனைத்துப் பகுதியிலும் வரவேற்பைப் பெற்றது.

மிரட்டலான வசூல்

மிரட்டலான வசூல்

புஷ்பா முதல் பாகம் வசூலில் மிரட்டியிருப்பதால் அடுத்தப் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமாக உருவாக்க உள்ளனர். புஷ்பா 2 கதை வெளிநாட்டுப் பின்னணியில் எடுக்கப்பட இருக்கிறது. செம்மரக் கடத்தல் தாதாவாக மாறும் புஷ்பா, வெளிநாடுகளில் தன் ஆதிக்கத்தை எப்படி செயல்படுத்துகிறார் என்பது போல கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காக சீனா, ஜப்பான், ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பை படக்குழுவினர் தொடங்க உள்ளனர்.

வெளிநாட்டு ஹீரோயின்

வெளிநாட்டு ஹீரோயின்

புஷ்பா இரண்டாம் பாகத்தின் கதை வெளிநாட்டிலும் நடக்க இருப்பதால் வெளிநாட்டு நடிகை ஒருவரை இன்னொரு ஹீரோயினை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. ஸ்ரீவள்ளி கதாபாத்திரத்தில் நடித்த ராஷ்மிகா கொல்லப்பட்டுவிடுவதாகவும், பின்னர் பாலிவுட் நடிகை ஒருவருடன் ஹீரோ காதல் வயப்படுவார் என்பது போல கதை உருவாக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பாலிவுட் நடிகை ஒருவர் ஒரு பாடலுக்கு ஆட இருப்பதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X