»   »  அட அண்ட புளுகுனி ஆகாச புளுகுனி: நடிகரை விளாசிய முன்னாள் காதலி

அட அண்ட புளுகுனி ஆகாச புளுகுனி: நடிகரை விளாசிய முன்னாள் காதலி

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பாலிவுட் நடிகர் நவாஸுத்தீன் சித்திக்கி தன்னை பற்றி கூறியது பொய் என்று அவரின் முன்னாள் காதலியான சுனிதா தெரிவித்துள்ளார்.

பாலிவுட் நடிகர் நவாஸுத்தீன் சித்திக்கி தன் வாழ்க்கை வரலாறை புத்தகமாக எழுதியுள்ளார். அதில் தனது முதல் காதலியான சுனிதா தன்னை பிரிந்து சென்றதை தாங்க முடியாமல் தற்கொலைக்கு முயன்றதாக குறிப்பிட்டுள்ளார்.

இதை பார்த்த சுனிதா சமூக வலைதளத்தில் கூறியிருப்பதாவது,

நடிப்பு

நடிப்பு

நானும் நவாஸும் என்.எஸ்.டி.யில் ஒன்றாக படித்தோம். ஆனால் அப்பொழுது நாங்கள் ஒருவரையொருவர் பார்த்ததே இல்லை என்று நவாஸ் கூறுவது உண்மை இல்லை.

சுவர்

சுவர்

நான் நவாஸ் வீட்டு சுவரில் எதையுமே வரையவில்லை. அப்படி இருக்கும் போது அவர் என்னை பிரிந்த பிறகு சுவருக்கு வெள்ளை அடித்ததாக கூறியுள்ளார்.

பிரிவு

பிரிவு

நவாஸ் ஏழையாக இருந்தார் என்று நான் அவரை பிரிந்து செல்லவில்லை. அவரின் எண்ணங்கள் மோசமாக இருந்ததால் பிரிந்தேன். அந்த சமயம் அவரை விட நான் தான் சினிமாவில் போராடிக் கொண்டிருந்தேன்.

நண்பர்கள்

நண்பர்கள்

எங்களுக்கு இடையேயான அந்தரங்க விஷயங்களை எல்லாம் நவாஸ் தனது நண்பர்களிடம் கூறி ஜோக்கடித்தார். அப்பொழுது தான் அவரின் எண்ணங்களை புரிந்து கொண்டு விலகினேன் என்று சுனிதா தெரிவித்துள்ளார்.

English summary
Bollywood actor Nawazuddin Siddiqui's former girlfriend Sunita said that whatever he told about her in his autobiography is not true.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X