அந்த ஆபாச மார்பிங் சீன்.. குடும்பத்தார் என்ன சொன்னாங்க தெரியுமா? லவ் டுடே இவானா ஓப்பன் டாக்!

சென்னை: இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் பாக்ஸ் ஆபிஸ் வேட்டை நடத்தி வருகிறது.

இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக இளம் நடிகை இவானா இந்த காலத்து மாடர்ன் பெண்ணாக நடித்து மிரட்டி இருந்தார்.

அதிலும் அவர் சொல்லும் "சொல்லுங்க மாமாக்குட்டி" வசனம் ஏகப்பட்ட காதலர்களை பயங்கர கடுப்பில் ஆழ்த்தி வரும் நிலையில், லவ் டுடே படத்தின் கிளைமேக்ஸில் வரும் அந்த ஆபாச மார்பிங் காட்சி குறித்து தனது குடும்பத்தாரிடம் எப்படி சொல்லி புரிய வைத்தேன் என்பது குறித்து ஓப்பனாக பேசியுள்ளார்.

நாச்சியார் படத்தில்

நாச்சியார் படத்தில்

மலையாளத்தில் 2012ம் ஆண்டு வெளியான மாஸ்டர்ஸ் திரைப்படத்தில் அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்த நடிகை இவானா, தமிழில் பாலா இயக்கத்தில் ஜோதிகா, ஜிவி பிரகாஷ் நடிப்பில் கடந்த 2018ல் வெளியான நாச்சியார் படம் மூலம் அறிமுகமானார். முதல் படமே பாலா படம் என்பதால் நடிப்பை நன்றாகவே கற்றுக் கொண்டார் இவானா.

சிவகார்த்திகேயன் தங்கச்சி

சிவகார்த்திகேயன் தங்கச்சி

ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நாச்சியார் படத்தில் நடித்த இவானாவுக்கு அதன் பிறகு பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் வெளியான ஹீரோ படத்தில் சிவகார்த்திகேயனின் தங்கையாக நடிக்கும் கதாபாத்திரம் தான் கிடைத்தது. ஆனால், சின்ன கேரக்டர் என்றாலும், தனது நடிப்புத் திறமையை அழகாக வெளிப்படுத்திய இவானாவை பார்த்த பிரதீப் ரங்கநாதன் நம்ம படத்தில் இவர் தான் ஹீரோயின் என ஃபிக்ஸ் செய்து விட்டார்.

ஹீரோயின் இவானா

ஹீரோயின் இவானா

நாச்சியார் படத்தில் ஹீரோயின் என்றால் ஜோதிகா தான். ஹீரோ படத்தில் தங்கையாக நடித்த இவானா லவ் டுடே படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கோலிவுட்டின் இளம் ஹீரோயினாக மாறி விட்டார். தியேட்டரில் இவானாவின் நடிப்பு, டிரெஸ்ஸிங் சென்ஸ் என அனைத்தையும் பார்த்து ஏகப்பட்ட 2கே கிட்ஸ் அவர் மீது காதல் வயப்பட்டுள்ளனர்.

இளைஞர்களை புடிச்சிட்டாரு

இளைஞர்களை புடிச்சிட்டாரு

சொல்லுங்க மாமாக்குட்டி என பேசியே நடிகை இவானா ஏகப்பட்ட இளைஞர்களின் இதயத்தை புடிச்சிட்டாரு என ஒட்டுமொத்த சினிமா துறையே இவானாவின் நடிப்பை புகழ்ந்து வருகிறது. தமிழ்நாட்டில் 70 கோடி வசூலை கடந்த லவ் டுடே திரைப்படம் தெலுங்கிலும் பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. ஓடிடியில் வெளியான நிலையிலும் ஏகப்பட்ட ரசிகர்கள் இவானாவின் இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களாக மாறி உள்ளனர்.

ஆபாச மார்பிங் சீன்

ஆபாச மார்பிங் சீன்

லவ் டுடே படத்தை இளைஞர்களை டார்கெட் செய்து தான் இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் எடுத்தாலும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் தியேட்டருக்கு சென்று அந்த படத்தை பார்த்து சிரித்து ரசித்து மகிழ்ந்தனர். ஆனால், குடும்ப ஆடியன்ஸை திடுக்கிட வைத்தது அந்த கிளைமேக்ஸ் காட்சியில் வரும் அந்த ஆபாச மார்பிங் சீன் தான்.

தப்பா இருக்குதுன்னு சொன்னாங்க

தப்பா இருக்குதுன்னு சொன்னாங்க

படத்தின் கிளைமேக்ஸில் கதைக்கு தேவையான அப்படியொரு ஆபாச மார்பிங் காட்சி இருக்கிறது என்பதை என் குடும்பத்தில் சொன்ன போது, சிலர், இது மட்டும் தப்பா இருக்குதுன்னு எச்சரிக்கை செய்தனர். ஆனால், செல்போன் பயன்படுத்துவதால் வரும் அனைத்து பிரச்சனைகளையும் படம் எடுத்து சொல்லி வரும் நிலையில், இது போன்ற மார்பிங் வீடியோக்களால் ஏகப்பட்ட பெண்கள் பாதித்து வருகின்றனர். ஆனால், இதற்கெல்லாம் பயப்படக் கூடாது என்கிற விழிப்புணர்வாக அந்த காட்சி இருக்கும் என சொல்லி புரியவைத்தேன் என செம ஒப்பனாக பேசியுள்ளார் இவானா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X