பழைய மேடியாக மாறிய மாதவன்: யாருய்யா இது என்று கலாய்த்த குஷ்பு

By Siva

சென்னை: அம்மா பேச்சை கேட்டு ஒரு நல்ல காரியம் செய்துள்ளார் மாதவன்.

விஞ்ஞானி எஸ். நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை இயக்கி, நடித்து வருகிறார் மாதவன். ராக்கெட்ரி- தி நம்பி எஃபெக்ட் என்று பெயர் வைக்கப்பட்டுள்ள அந்த படத்திற்காக உடல், பொருள், ஆவியை கொடுத்து உழைத்துக் கொண்டிருக்கிறார் மாதவன்.

Madhavan shaves his beard after two years

அந்த படத்திற்காக அவர் தாடி, மீசை வளர்த்திருந்தார். தயவு செய்து ஷேவ் பண்ணுப்பா என்று அவர் அம்மா அவரிடம் தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில் அம்மா பேச்சை கேட்டு கிளீன் ஷேவ் செய்து பழைய மாதவனாக மாறிவிட்டார்.

2 ஆண்டுகள் கழித்து கிளீன் ஷேவ் செய்த பிறகு எடுத்த புகைப்படத்துடன் தன் அம்மாவுக்கு அன்னையர் தின வாழ்த்து தெரிவித்தார் மாதவன். அவரின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எவ்வளவு நாளாச்சு உங்களை இப்படி பார்த்து என்று ஃபீல் பண்ணினார்கள்.


மாதவனின் புகைப்படத்தை பார்த்த குஷ்புவோ, நான் இவரை எங்கோ பார்த்திருக்கிறேன். நீங்க யார் என்று கேட்டு கலாய்த்துள்ளார். ராக்கெட்ரி படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு பிரான்ஸ், செர்பியாவில் நடைபெற உள்ளது.

இளம் நம்பி நாராயணன் பிரான்சுக்கு செல்ல தயார் என்று தெரிவித்துள்ளார் மாதவன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X