»   »  பாஸ், ரஜினி ட்விட்டர் கணக்கின் புதிய கவர் பிக்சரை பார்த்தீங்களா?

பாஸ், ரஜினி ட்விட்டர் கணக்கின் புதிய கவர் பிக்சரை பார்த்தீங்களா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது ட்விட்டரில் உள்ள கவர் பிக்சரில் கபாலி பட புகைப்படத்தை வைத்துள்ளார்.

ரஜினிகாந்த் ட்விட்டரில் சேர்ந்த கதையை யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க முடியாது. அவர் ட்விட்டரில் சேர்ந்த தினம் ட்விட்டரே அதிர்ந்தது. உலக மீடியாக்கள் அவரது கணக்கில் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நொடிக்கு நொடி அதிகரித்ததை பற்றி செய்திகள் வெளியிட்டன.

Rajinikanth changes his twitter cover picture

இப்படி அதிரடியாய் ட்விட்டரில் சேர்ந்த ரஜினி அவ்வப்போது ட்வீட் செய்து வருகிறார். அவர் கடைசியாக ஸ்வாமி தயானந்த குருஜியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ட்வீட் செய்திருந்தார்.

அவர் அடிக்கடி ட்வீட் செய்யாவிட்டாலும் ரசிகர்கள் அவரது ட்விட்டர் கணக்கை அடிக்கடி கவனித்து வருகிறார்கள். இந்நிலையில் ரஜினி தனது ட்விட்டர் கணக்கின் கவர் பிக்சரை மாற்றியுள்ளார். கவர் பிக்சரில் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் இருக்கும் கபாலி படத்தின் புகைப்படத்தை வைத்துள்ளார்.

கோட், சூட் அணிந்து ஒரு நாற்காலியில் ஸ்டைலாக அமர்ந்திருக்கும் புகைப்படத்தை வைத்துள்ளார் ரஜினிகாந்த்.

English summary
Rajinikanth has changed his cover picture in his twitter account. He has displayed a still from his upcoming movie Kabali.
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil