»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜூன் 06, 2003

சண்டியரை தடுக்க சென்சார் போர்டுக்கு கிருஷ்ணசாமி கடிதம்

சென்னை:

கமல்ஹாசனின் சண்டியர் படத்துக்கு அனுமதி தரக் கூடாது என்று கோரி தணிக்கைக் குழுவினருக்கு புதிய தமிழகம்கட்டியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

சென்னையில் கிருஷ்ணசாமி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:

நடிகர் கமல்ஹாசன் நடிக்கும் சண்டியர் திரைப்படத்தின் சூட்டிங் வரும் திங்கள்கிழமை முதல் முழு வீச்சில்ஆரம்பிக்கப் போவதாக தகவல் கிடைத்துள்ளது. வன்முறைக் கலாச்சாரத்தைத் தூண்டும் இந்தப் படத்தை திரையிடஅனஉமதிக்க மாட்டோம்.

கமல்ஹாசன் நெருப்போடு விளையாடுகிறார். வீச்சரிவாள் காட்சிகளை கமல்ஹாசன் படம் பிடிக்கும்போது எங்கள்கட்சியின் தாழ்த்தப்பட்ட இனத் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள். சூட்டிங்கை தடுப்பார்கள்.

இந்தப் படத்துக்கு அனுமதி தரக் கூடாது என்று சென்னை மற்றும் மும்பை தணிக்கைக் குழுவினருக்கும் கோரிக்கைமனு அனுப்பியுள்ளேன். மதுரை பக்கம் வீச்சரிவாளுடன் கமல் தோன்றும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.இவையெல்லாம் ஜாதிக் கலவரத்தைத் தூண்டி வன்முறைக்கி வித்திடும் செயல்கள் தான்.

நக்கீரன் ஆசிரியர் கோபால் கைத் துப்பாக்கி வைத்திருந்ததாகக் கூறி அவரை ஜெயலலிதா கைது செய்துபொடாவில் சிறையில் அடைத்துள்ளார். ஆனால். வீச்சரிவாள் கலாச்சாரத்தை மட்டும் ஜெயலலிதா ஏன்அனுமதிக்கிறார்?

கமல்ஹாசன் கையில் வைத்து போஸ் தரும் கத்தி கதிர் அறுக்கும் கத்தியல்ல. கழுத்தறுக்கும் கத்தி. கமல்ஹாசன் நல்லஅறிவாளி. அவரது திறமையும் அறிவும் நல்ல விஷயத்துக்குத் தான் பயன்பட வேண்டும். சமூகத்தை சீரழிக்கவோவன்முறைக்கோ அவர் பயன்படக் கூடாது.

கடந்த சட்டமன்றக் கூட்டத்தில் ஜெயலலிதா என்னை ஜாதி வெறியன் என்று கூறினார். இந்த வார்த்தையை அவைக்குறிப்பில் இருந்து நீக்கக் கோரி வரும் 14ம் தேதி மதுரையில் கண்டனப் பொதுக் கூட்டம் நடக்கிறது. அதில் திமுக,மதிமுக. பா.ம.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய கட்சிகள் பங்கேற்க உள்ளன.

மாணவர்களுக்கு பறிக்கப்பட்ட பஸ் பாஸ் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். இல்லாவிட்டால் எல்லாகட்சிகளும் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார் கிருஷ்ணசாமி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil