»   »  திரைத் துளி

திரைத் துளி

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜூன் 07, 2003

கிருஷ்ணசாமிக்கு கமல் மன்றம் பதிலடி

கடலூர்:

சண்டியர் படத்தை விமர்சிக்க கிருஷ்ணசாமிக்கு எந்த தகுதியும் இல்லை என கமல்ஹாசன் நற்பணிஇயக்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்ட தலைமை கமலஹாசன் நற்பணி இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்கூறியிருப்பதாவது:

கமலஹாசன் தன்னிகரற்ற கலைஞர். அவரைப் பற்றியும் அவர் தயாரித்து வரும் சண்டியர்திரைப்படம் பற்றியும் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி விமர்சித்து வருகிறார்.

இது முடவன் கொம்பு தேனுக்கு ஆசைப்பட்ட கதை. தான் பிரபலம் அடைய வேண்டும் என்பதற்காகதினம் ஒரு பேட்டியும், நாளும் ஒரு அவதூறும் பேசி வருகிறார்.

பற்றாக்குறைக்கு அவரது மாவட்டச் செயலாளர்கள் வேறு கூட்டாக அறிக்கை விடுகின்றனர்.

சண்டியர் படம் வெளி வந்தால் சாதி மோதல் வரும், தலைகள் உருளும். படத்தை ஓட விடமாட்டேன்என்று மிரட்டுகிறார்.

மதுரையில் சண்டியர் என்ற பெயரில் தான் படதொடக்க விழா நடைபெற்றது. அதை தடுக்கதுணிவில்லாத கிருஷ்ணசாமி படம் வந்தால் தடுப்பேன் என்று கூறுவது கோமாளித்தனமாக உள்ளது.

மனித ஆற்றலை மனித வளத்துக்கு மட்டுமே பயன்படுத்த பயிற்சி பெற்றவர்கள் நாங்கள். சட்டத்தைஜனநாயகத்தை மதிப்பவர்கள். சுதந்திர இந்தியாவில் கருத்து வெளியிடுவதற்கு அனைவருக்கும்உரிமை உண்டு.

அதை செய்யாதே, இதை செய்யாதே என கூற யாருக்கும் உரிமை இல்லை. அது வன்முறையைதூண்டுவதாக இருந்தால் கண்டிக்கவும் தண்டிக்கவும் அரசு, சட்டம், போலீஸ் மற்றும் நீதிமன்றங்கள்எல்லாம் இங்கே உண்டு.

எனவே கிருஷ்ணசாமி தனியாக கவலைப்பட தேவையில்லை. அவரின் எந்த சவாலையும் சந்திக்கஎங்கள் இயக்கம் தயராக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

கமல்ஹாசனின் தடையுைம் மீறி இதே போல பல்வேறு மாவட்ட நற்பணிச் சங்கங்களும் அறிக்கைகைளைவெளியிட்டு வருகின்றன.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil