சூப்பர்.. வாத்தி கம்மிங் பாடலுக்கு வெறித்தனமாக ஆடிய 7 வயது சிறுவன்.. பாராட்டி தள்ளிய ஷில்பா ஷெட்டி!
சென்னை: தளபதி விஜய்யின் மாஸ்டர் பாடலான வாத்தி கம்மிங் பாடலுக்கு 7வயது சிறுவன் நடன நிகழ்ச்சியில் ஆடியுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த ஆண்டு பொங்கலை முன்னிட்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியானது.
விஜய் தி மாஸ்டர் எனும் பெயரில் இந்தியிலும் இந்த படம் டப் செய்யப்பட்டு வெளியானது குறிப்பிடத்தக்கது.

100 மில்லியன்
மாஸ்டர் திரைப்படம் வெளியான உடனே ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு வாத்தி கம்மிங் வீடியோ பாடல் யூடியூப் தளத்தில் வெளியானது. 98 மில்லியனை கடந்து 100 மில்லியனை வாத்தி கம்மிங் வீடியோ பாடல் நெருங்கி வருகிறது. ஏற்கனவே கடந்த ஆண்டு வெளியான லிரிக் வீடியோ 124 மில்லியன்களை கடந்து வைரலானது குறிப்பிடத்தக்கது.

1.5 மில்லியன் லைக்ஸ்
தளபதி விஜய் வித்தியாசமான ஸ்டெப் போட்டு அதிரடியாக நடனமாடும் வாத்தி கம்மிங் வீடியோ பாடல் இதுவரை 1.5 மில்லியன் லைக்குகளை அள்ளி சாதனை படைத்துள்ளன. தொடர்ந்து தளபதி விஜய்யின் பாடல்கள் இது போன்ற ரெக்கார்டுகளை யூடியூபில் செய்து வருவது விஜய் ரசிகர்களின் வெறித்தனத்தையே காட்டுகிறது.

டிரெண்டாகும் ஹாஷ்டேக்
விரைவில் 100 மில்லியன் வியூக்களை வாத்தி கம்மிங் கடக்க உள்ளதையும், 1.5 மில்லியன் லைக்குகளை குவித்ததையும் கொண்டாடும் விதத்தில் தற்போது #VaathiComing ஹாஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். மேலும், வாத்தி கம்மிங் பாடல் சர்வதேச அளவில் எந்தவொரு தடையுமின்றி டிரெண்டாகி வருகிறது என்றும் கொண்டாடி வருகின்றனர்.
வெளுத்து வாங்கும் குட்டிப் பையன்
மேலும், சோனி டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் டான்சர்ஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் சுமித் எனும் 7 வயது சிறுவன் வாத்தி கம்மிங் இந்தி பாடலுக்கு வெறித்தனமாக நடனமாடும் வீடியோவும் தற்போது இந்த ஹாஷ்டேக்கில் டிரெண்டாகி வருகிறது.

ஷில்பா ஷெட்டி பாராட்டு
அந்த நிகழ்ச்சிக்கு நடுவராக செயல்பட்டு வரும் பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி சிறுவன் சுமித்தின் அபாரமான ஆட்டத் திறமையை பார்த்து வெகுவாக பாராட்டி உள்ளார். மேலும், அனைத்து நடுவர்களுடன் அரங்கமே சேர்ந்து வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடும் புரமோ தற்போது வைரலாகி வருகிறது. குஷி படத்தின் மேக்கோரினா பாடலுக்கு விஜய்யுடன் நடனமாடி இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











