அட்டகாசமாக துவங்கிய தளபதி 66 ஷுட்டிங்....இனி வேற லெவல் ஆட்டம் தான்
ஐதராபாத் : விஜய் நடிக்கும் தளபதி 66 படத்தின் இரண்டாம் கட்ட ஷுட்டிங் இன்று துவங்கி உள்ளது. இதனால் இனி மாஸான அப்டேட்கள் வரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
டைரக்டர் வம்சி பைடபள்ளி இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு தளபதி 66 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 6 ம் தேதி சென்னையில் பூஜையை போட்டு, முதல் கட்ட ஷுட்டிங்கையும் சில நாட்களிலேயே எடுத்து முடித்து விட்டனர். தில் ராஜு தயாரிக்கும் இந்த படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.

தள்ளி போகிறதா தளபதி 66 ரிலீஸ்
தளபதி 66 படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2023 ம் ஆண்டு பொங்கலுக்கு தான் ரிலீஸ் செய்ய போகிறார்கள் என கூறப்படுகிறது. இதற்கிடையில் தளபதி 66 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை விஜய்யின் பிறந்தநாளான ஜுன் 22 ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பீஸ்ட் படத்தை போல் விஜய்யின் பிறந்தநாளன்று தளபதி 66 படத்தின் டைட்டிலும் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐதராபாத் வந்த விஜய்
இந்நிலையில் இரண்டாம் கட்ட ஷுட்டிங் ஐதராபாத்தில் இன்று துவங்கி உள்ளது. இதற்காக விஜய் சென்னையில் இருந்து நேற்று ஐதராபாத் வந்தார். ஐதராபாத் விமான நிலையத்தில் மாஸ்க் அணிந்து, ரொம்ப சிம்பிளாக விஜய் வந்த வீடியோக்கள் நேற்று சோஷியல் மீடியாவில் பரவி செம டிரெண்டானது. இதை அதிகமானவர்கள் ரசித்து, லைக் செய்துள்ளனர்.

எங்கே நடக்குது ஷுட்டிங்
ஐதராபாத் விமான நிலையத்தில் நின்றிருந்த விஜய் ரசிகர்களில் ஒருவர் இதை வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில் ஐதராபாத்தில் உள்ள அன்னபூர்ணா ஸ்டூடியோவில் இன்று தளபதி 66 படத்தின் இரண்டாம் கட்ட ஷுட்டிங் துவங்கப்பட்டுள்ளது. இதற்காக பிரம்மாண்ட செட் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாம். இந்த புதிய செட்டில் கிட்டதட்ட இம்மாத இறுதி வரை இரண்டாம் கட்ட ஷுட்டிங் தொடர்ந்து நடைபெற உள்ளதாம்.
Recommended Video

அட..அப்படியா விஷயம்
மற்றொரு தகவலாக இந்த இரண்டாம் கட்ட ஷுட்டிங்கில் ஹீரோயின் ராஷ்மிகா மந்தனாவும் பங்கேற்கிறாராம். அதனால் விஜய் - ராஷ்மிகா இடையேயான காட்சிகள் இந்த செட்டில் எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது. இரண்டாம் கட்ட ஷுட்டிங்கை ஐதராபாத்தில் முடித்த பிறகு, படக்குழு மீண்டும் சென்னை திரும்ப உள்ளதாம். அங்கு அமைக்கப்பட உள்ள மற்றொரு செட்டில் பாடல் காட்சிகளை படமாக்க போகிறார்களாம். மொத்தமாக தளபதி 66 படத்தின் ஷுட்டிங் இந்த ஆண்டு ஆகஸ்ட் வரை நடைபெறும் என கூறப்படுகிறது.

எல்லாமே டிரெண்டிங்கா
தளபதி 66 படத்தின் ஷுட்டிங்கிற்காக நேற்று விஜய், ஐதராபாத் வந்த தகவல் கசிந்ததும் #Thalapathy66 ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்ட் ஆனது. இதைத் தொடர்ந்து இன்று இரண்டாம் கட்ட ஷுட்டிங் துவங்கப்பட்டதாக தகவல் வெளியானதும் மீண்டும் டிரெண்டிங் ஆகி உள்ளது. அதுவும் ட்விட்டர் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.


Click it and Unblock the Notifications











