கேன்ஸ் பட விழாவில் வெளியான டாம் குரூஸின் ’டாப்கன் மேவ்ரிக்’ மூவி...இந்தியாவில் எப்போது ரிலீஸ்?

சென்னை: கேன்ஸ் திரைவிழாவில் டாம் குரூஸ் நடிப்பில் உருவான Top Gun Maverick திரைப்படம் திரையிடப்பட்டு பெரும் வரவேற்பை பெற்றது. இதில் டாம் குரூஸுக்கு கௌரவ ( 'Palme d'Or ') விருது வழங்கப்பட்டது.

Recommended Video

Top Gun Maverick Tamil Review | Yessa ? Bussa ? | Filmibeat Tamil

கேன்ஸ் திரைவிழாவில் Top Gun Maverick திரையிடப்பட்டபோது பார்வையாளர்கள் 6 நிமிடம் எழுந்து நின்று கைதட்டி டாம் குரூஸை வாழ்த்தினார்கள்.

பேரமவுண்ட் (Paramount Pictures) பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான Top Gun Maverick திரைப்படத்தை இந்தியாவில் விரைவில் தியேட்டரில் ரிலீசாகிறது .

மின்னல் வேக நடிகர் டாம் குரூஸ்

மின்னல் வேக நடிகர் டாம் குரூஸ்

ஹாலிவுட் உலகின் மின்னல் வேக நடிகர், ஸ்டண்ட் காட்சிகளில் டூப் போடாமல் நடித்துல் உலகம் முழுவதும் பெரும் ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகர் டாம்குரூஸ். இவர் 1986 ஆம் ஆண்டு டாப்கன் என்கிற படத்தில் நடித்தார். அந்தப்படம் உலகம் முழுவதும் டாம் குரூஸை கொண்டுச் சேர்த்தது. அதன் இரண்டாம் பாகமாக 36 வருடங்கள் கழித்து டாப் கன் மேவ்ரிக் வந்துள்ளது.

ஓடிடி தளத்தில் வெளியிட மறுத்த டாம் குரூஸ்

ஓடிடி தளத்தில் வெளியிட மறுத்த டாம் குரூஸ்

டாப் கன் மேவ்ரிக் படத்தை தயாரித்து வெளியிட இருந்த நேரத்தில் கொரோனா பேரிடர் உலகம் முழுவதும் ஏற்பட்டதால் தனது படத்தை வெளியிடாமல் தாமதித்தார் டாம் குரூஸ். ஓடிடி தளத்தில் படத்தை வெளியிட மாட்டேன், அகன்ற திரையில் என் படத்தை ரசிகர்கள் காணவே கடின உழைப்பை செலுத்தி இருக்கிறேன் என்று டாம் தெரிவித்திருந்தார். அதற்காக படத்தை வெளியிடாமல் வைத்திருந்தார்.

கேன்ஸ் விழாவில் டாப் கன் இரண்டாம் பாகம்

கேன்ஸ் விழாவில் டாப் கன் இரண்டாம் பாகம்

கேன்ஸ் 2022 பட விழாவில் கலந்துக்கொண்ட டாம் குரூஸ் அங்கு தனது டாப் கன் மேவ்ரிக் படத்தை திரையிட்டார். அப்போது அவருக்கு பார்வையாளர்கள் சிறப்பான மரியாதை செலுத்தினர். 6 நிமிடம் எழுந்து நின்று கைதட்டினர். வானில் விமானம் மூலம் வண்ண புகைகளால் மரியாதை செய்யப்பட்டது. இதைப்பார்த்து டாம் குரூஸ் கண் கலங்கினார்.

படத்தின் கதை இதுதான்

படத்தின் கதை இதுதான்

கடற்படையின் சிறந்த விமானிகளில் ஒருவராக முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக சேவை செய்யும் பீட் "மேவரிக்" மிட்செல் (டாம் குரூஸ்), தனது பைலட் பணியில் அவர் பல சிக்கல்களை துணிந்து எதிர்கொள்கிறார். அவர் TOPGUN பைலட்களின் ஒரு பிரிவினருக்குப் பயிற்சியளிக்கும் போது, அவருடைய இறந்துபோன நண்பனின் மகன் "Rooster"என்றழைக்கப்படும் லெப்டினன்ட் பிராட்லி பிராட்ஷா (மைல்ஸ் டெல்லர்) மற்றும் "Goose" என்றழைக்கபடும் Radar Intercept அதிகாரி Lt. நிக் பிராட்ஷாவை சந்திக்கிறார். தொடர்ந்து விமானியாக பல இன்னல்களை சந்தித்து வெல்கிறார்.

இந்தியாவில் எப்போது ரிலீஸ்?

இந்தியாவில் எப்போது ரிலீஸ்?

டாப் கன் படம் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதால் டாம் குரூஸின் வழக்கமான சாகசத்தை தாண்டிய படமாக இது இருக்கலாம் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். இந்தியாவில் இப்படம் மே 27 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீசாகிறது. இந்திய ரசிகர்களுக்கு இது ஒரு சிறந்த பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்பதில் மாற்று கருத்தில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X