கமலின் கேரக்டர் பெயர் இதுவா...அப்போ யாரு தாம்ப்பா 'விக்ரம்' ?

சென்னை : கமல் நடித்த விக்ரம் படம் ரிலீசாக இன்னும் 2 நாட்கள் மட்டுமே மீதமுள்ளது. இந்த சமயத்தில் ரசிகர்களின் ஹார்ட் பீட்டை எகிற வைப்பதற்காக படத்தில் முக்கிய ரோல்களில் நடித்திருப்பவர்களின் கேரக்டர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளது.

இதுவரை லீட் ரோலில் நடிக்கும் கமலின் பெயர் தான் டைட்டில் ரோலான விக்ரம் என அனைவரும் நினைத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அது இல்லையாம். கமலின் கேரக்டர் பெயரையும் வெளியிட்டுள்ளதால், யார் அந்த விக்ரம் என்ற கேள்வி அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது.

கேரக்டர் பெயர்கள் வெளியீடு

கேரக்டர் பெயர்கள் வெளியீடு

அனைவரின் எதிர்பார்ப்பையும் மணிக்கு ஒரு முறை தூண்டி வரும் கமல் நடித்துள்ள விக்ரம் படம் ஜுன் 3 ம் தேதி ரிலீசாக உள்ளது. உலகம் முழுவதும் 5000 தியேட்டர்களில் 5 மொழிகளில் மிக பிரம்மாண்டமாக படத்தை வெளியிடுகிறார்கள். இதற்கான ப்ரொமோஷனும் வேற லெவலில் நடந்து வருகிறது. இந்நிலையில் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சார்பில் படத்தில் முக்கிய ரோல்களில் நடித்திருப்பவர்களின் கேரக்டர் பெயர்களை நேற்று முதல் வெளியிட்டு வருகிறது.

கமல் பெயர் விக்ரம் இல்லையா

கமல் பெயர் விக்ரம் இல்லையா

ராஜ்கமல் ஃபிலிம்ஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, ஃபகத் ஃபாசிலின் கேரக்டர் பெயர் அமர். விஜய் சேதுபதியின் கேரக்டர் பெயர் சந்தான தேவன். படத்தில் கமலின் பெயர் கமாண்டர் அருண்குமார். முரட்டுத்தனமான, கொடூரமான ரா ஏஜன்ட் ரோலில் தான் கமல் நடித்திருக்கிறாராம். இதனால் டைட்டில் ரோலான விக்ரம் யார் என்ற கேள்வி எழுந்தது. டிரைலரில் கமல் வைத்திருக்கும் குழந்தை யார், காளிதாஸ் ஜெயராம் தான் டைட்டில் ரோலான விக்ரம் ரோலில் நடிக்கிறார் என கூறப்பட்டது.

அப்போ யாருப்பா விக்ரம்

அப்போ யாருப்பா விக்ரம்

அந்த குழந்தை யார் என பலரும் கேட்டு வந்த நிலையில், சூர்யா சிறுவயதில் இருக்கும் போது தான் வரைந்த அவரின் ஓவியத்தை சமீபத்தில் வெளியிட்டார் அவரின் அப்பா நடிகர் சிவக்குமார். குழந்தை பருவத்தில் உள்ள சூர்யாவின் முகமும், விக்ரம் டிரைலரில் காட்டப்படும் குழந்தையின் முகமும் அச்சு அசலாக ஒரே மாதிரி உள்ளது. இதனால் விக்ரம் படத்தில், அந்த குழந்தை தான் வளர்ந்து பெரியவனாகி வரும் சூர்யா என்று கூறப்படுகிறது.

இவர் தானா அது

இவர் தானா அது

விக்ரம் 3 படத்தில் லீட் ரோலில் நடிக்கவும் கமல், சூர்யாவை தான் தேர்வு செய்துள்ளார். இந்த தகவல்களை வைத்து பார்க்கும் போது விக்ரம் படத்தில் டைட்டில் ரோலான விக்ரம் கேரக்டரில் சூர்யா தான் நடித்துள்ளார் என்பது உறுதியாகி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X