For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  பிங்க் கலரு கண்.. உள்ளே நட்சத்திரம்.. சிங்கமாய் வந்த கமல்ஹாசன்.. வெளியானது பிக் பாஸ் 5 லோகோ புரமோ!

  |

  சென்னை: பிக் பாஸ் தமிழ் சீசன் 5ன் லோகோ புரமோ சொன்னபடி சரியான நேரத்தில் வெளியாகி உள்ளது.

  Bigg Boss Tamil season 5 Official Promo update | 31st August 2021

  விஜய் டிவியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அதன் வீடியோ ரிலீசாகி உள்ளது.

  முதல் சீசனை எப்படி தொடங்கினாரோ அதே கம்பீரத்துடன் சிங்கம் போல கமல்ஹாசன் 5வது சீசனுக்கான லோகோவை அறிமுகப்படுத்தி உள்ளார்.

  விஜய் சேதுபதியின் அனபெல் சேதுபதி டிரைலர் எப்படி இருக்கு...ஓர் சுவாரஸ்ய அலசல் விஜய் சேதுபதியின் அனபெல் சேதுபதி டிரைலர் எப்படி இருக்கு...ஓர் சுவாரஸ்ய அலசல்

  வந்துடுச்சு

  வந்துடுச்சு

  ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 5க்கான அதிகாரப்பூர்வ முதல் அப்டேட் வந்து விட்டது. விஜய் டிவியை இனி கையில் பிடிக்கவே முடியாது. சர்வைவர், மாஸ்டர் செஃப் என ஏகப்பட்ட நிகழ்ச்சிகள் வந்தாலும், கிங் ஆஃப் டி.ஆர்.பி மீண்டும் நான் தான் என்பதை பிக் பாஸ் இந்த சீசனிலும் நிரூபிக்க போகிறது.

  அதே கம்பீரம்

  அதே கம்பீரம்

  என்ன டிவி ஷோவை கமல் ஒளிபரப்பு செய்யப் போகிறாரா? சும்மா காமெடி பண்ணாதீங்க என கலாய்த்தவர்கள் ஆச்சர்யப்படும்படி எந்த மீடியாவானாலும் அதில் எனது பங்கு இருக்கும் என முதல் சீசனில் எந்தவொரு கம்பீரத்துடன் சிங்கம் போல பிக் பாஸ் நிகழ்ச்சியை ஆரம்பித்தாரோ, அதே கம்பீரத்துடன் 5வது சீசனையும் தொகுத்து வழங்க களமிறங்கி விட்டார் கமல்ஹாசன்.

  லோகோ புரமோ

  லோகோ புரமோ

  ஆகஸ்ட் 31ம் தேதி மாலை 5:55 மணிக்கு பிக் பாஸ் சீசன் 5ஐ குறிக்கும் வகையில் சரியாக சொன்ன நேரத்தில் சொன்ன படி கமல்ஹாசன் தோன்றி பிக் பாஸ் சீசன் 5ன் புதிய லோகோவை அறிமுகப்படுத்தும் புரமோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

  பிங்க் கலரு

  பிங்க் கலரு

  ஒவ்வொரு சீசனுக்கும் புதிய பிக் பாஸ் லோகோ அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. பிங்க் நிற கண்ணுடன் உள்ளே நட்சத்திரம் மின்னுவதை போல இந்த புதிய லோகோ டிசைன் உருவாக்கப்பட்டுள்ளது. வீடியோவை வெளியிட்ட கமல்ஹாசன் ஆரம்பிக்கலாமா? என தனது கண்ணை உருட்டி மிரட்டும் வீடியோ பிக் பாஸ் ரசிகர்களை எதிர்பார்ப்பின் உச்சத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது.

  ரம்யா கிருஷ்ணன் முதல் ஜிபி முத்து வரை

  ரம்யா கிருஷ்ணன் முதல் ஜிபி முத்து வரை

  இந்த பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் என ஒரு கெஸ்சிங் லிஸ்ட் வைரலாகி வருகிறது. ரம்யா கிருஷ்ணன், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணன், எம்.எஸ். பாஸ்கர், மைனா நந்தினி, கனி, ஜிபி முத்து உள்ளிட்ட பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியாகும்.

  ஆண்டவருக்காக

  ஆண்டவருக்காக

  பிக் பாஸ் நிகழ்ச்சியை இதுவரைக்கும் ஆண்டவர் கமல்ஹாசனுக்காக மட்டும் தான் பார்க்கிறோம். மற்றபடி இந்த முறை வேறு யாராவது ஷோவை ஹோஸ்ட் பண்ணால் பிக் பாஸுக்கு பெரிய கும்பிடு போட்டு விட்டு கிளம்பி இருப்போம். கமல் நடத்தும் நிகழ்ச்சி என்றாலும் அவர் வரும் நாட்களான சனி மற்றும் ஞாயிறு மட்டுமே இந்த ஷோவை பார்ப்போம் என தீவிர கமல் ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

  டாஸ்க்கை மாத்துங்க

  டாஸ்க்கை மாத்துங்க

  தயவு செய்து கடந்த சீசன் போல டம்மியான போட்டியாளர்களை உள்ளே கொண்டு வந்து எங்களின் பொறுமையை சோதிக்க வேண்டாம். மற்றும் இந்த முறை வீட்டில் மிக்சர் தின்னிகளை 80 நாட்களுக்கு மேல் வைத்திருக்க வேண்டாம். மேலும், பெண்டு கழட்டுற டாஸ்க்கை கொடுக்காமல் லெமன் இன் தி ஸ்பூன் போன்ற மொக்கை டாஸ்க்குகளை கொடுத்து குக் வித் கோமாளி போன்ற மற்ற ரியாலிட்டி ஷோக்களின் டி.ஆர்பியை ஏற்றி விட வேண்டாம் என்றும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

  English summary
  Bigg Boss Tamil season 5 pink color eye logo video out now. Kamal Haasan appears in the logo video and promote the show.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X