பத்து விரலையும் விரித்துக் காட்டி .. "மியாவ்".. கலகலக்க வைத்த "ரோசா"!
சென்னை : ஸ்லீவ்லெஸ் உடையில் பத்து விரல்களையும் விரித்துக் காட்டி மியாவ் போட்டு குட்மார்னிங் சொல்லியுள்ளார் ரோஜா நாயகி பிரியங்கா நல்கரி.
வழக்கம் போல ரசிகர்களும் குவிந்து விட்டனர். சிலர் டபுள் மீனிங்கிலும், இன்னும் சிலரோ டிரிபிள் மீனிங்கிலும் கலாய்த்துக் கொண்டுள்ளனர்.
குட்மார்னிங் சரி.. அது என்ன மியாவ் என்பது பல ரசிகர்களின் குழப்பம். இருந்தாலும் இதயங்களைப் பறக்க விட்டு வருகின்றனர்.

டாட்டூ ரகசியம்
ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறினாலும் கழுத்துக்கு கீழே போட்டிருக்கும் டாட்டூவை லாவகமாக ரசிகர்கள் பார்க்கும்படி கவர்ந்திழுக்கிறார் சன் டிவியின் ரோஜா சீரியல் நாயகி பிரியங்கா. டிவியில என்னன்னா இவரை சிங்கப் பெண் என்று ப்ரோமேவைப் போட்டு பட்டையை கிளப்பி வருகிறார்கள் ஆனால் .இவர் மியாவ்..என பூனைக்குட்டி போல கத்தி அனைவரையும் பயமுறுத்தி வருகிறார்.

அப்படி என்னதான் இருக்கு
தற்போது வீட்டுக்கு வீடு அனைவருக்கும் பரிச்சயமான நபராக பிரியங்கா நல்கரி தான் வலம் வந்து கொண்டிருக்கிறார் .குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவரை அதிகமாக விரும்புகின்றனர். அப்படி என்னதான் இருக்கு என்று நெட்டிசன்கள் கலாய்த்தாலும் இருக்கிறது எல்லாமே வேற லெவல்ல தான் இருக்கு ...நாங்க திறமையை சொன்னோம் என்று ரசிகர்களும் இவருக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர்.

பட்டிதொட்டி எல்லாம் பிரபலம்
ரோஜா சீரியல் தான் சன் டிவியில் டி ஆர் பி யில் டாப் .இதில் ஒவ்வொரு ப்ரோமோவும் பல லட்சக்கணக்கான ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது .அதுமட்டுமில்லாமல் டீவியிலும் இந்த சீரியலை தவறவிடாமல் பெண்கள் பார்த்து வருகின்றனர் .வேலைக்கு செல்லும் இளைஞர்களும் கூட தங்களுடைய போன்களில் இந்த சீரியலை பார்த்து வருகின்றனர்.அந்த அளவிற்கு இந்த சீரியல் பட்டிதொட்டியெல்லாம் பிரபலம் ஆகிவிட்டது.

முழுநிலவு
அதுவும் ரோஜா சீரியலில் ரோஜாவாக நடிக்கும் பிரியங்காவிற்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது .இவருடைய முகத்தைப் பார்த்தாலே பலருக்கும் எனர்ஜி கூடி விடுகிறதாம் .இவருடைய துறுதுறு கேரக்டரை பார்த்து தமிழ் ரசிகர்கள் நல்ல ஆதரவினை கொடுத்து வருகின்றனர் .இவர் முதலில் இந்த சீரியலில் நடிக்கும்போது தமிழ் தெரியாமல்தான் இருந்திருக்கிறார். ஆனால் தற்போது நன்றாக தமிழ் பேச பழகி விட்டார்.
Recommended Video

ஜெயிலுக்குள்ள சிங்கப்பெண்
ரோஜா சீரியலை வைத்து ட்ரோல் செய்து வந்தாலும் இவருக்கு இருக்கும் ஆதரவு மேலும் மேலும் பெருகி வருகிறது . அதுவும் தற்போது லேட்டஸ்ட் எபிசோடுகளில் இவர் ஜெயிலுக்குள் இருந்தாலும் ஜெயிலுக்குள் அப்படியே வில்லிகளை பந்தாடி வருகிறார். அந்த காட்சியை பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர். திரைப்படங்களில் கதாநாயகர்களே மிஞ்சும் அளவிற்கு இவருடைய சண்டைக்காட்சிகள் இருந்து வருவதால் இந்த எபிசோடே மீண்டும் மீண்டும் பார்த்து வருகின்றனர்.

கையை தூக்கி கண்ணை விரித்து
சீரியலை குடும்ப குத்துவிளக்காக புடவையில் பார்த்து வந்த பிரியங்கா நல்கரி. தற்போது மாடர்ன் உடையில் அதுவும் ரசிகர்களை பயமுறுத்துவது போல பூனை கண்ணோடும் மண்டை மேல கொண்டயோடு அழகான ஒரு போட்டோ எடுத்திருக்கிறார்.இந்த போட்டோவில் இவருடைய லேட்டஸ்ட் கெட்டப்பை பார்த்ததும் ரசிகர்கள் நம்ம ரோஜாவா இது என்று குழம்பி வருகின்றனர் .ஆனால் வெறித்தனமான ஆண் ரசிகர்கள் இது வேற லெவல் தல தலைவி என்று ஹார்ட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











