»   »  ஒன் அன்ட் ஒன்லி 'தல'யை அடுத்து ஜெயம் ரவி தான் பெஸ்ட் ஹீரோ: நடிகர் ஸ்ரீசரண்

ஒன் அன்ட் ஒன்லி 'தல'யை அடுத்து ஜெயம் ரவி தான் பெஸ்ட் ஹீரோ: நடிகர் ஸ்ரீசரண்

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தல அஜீத்தை அடுத்து ஜெயம் ரவி தான் சிறந்த ஹீரோ என்று நடிகர் ஸ்ரீசரண் தெரிவித்துள்ளார்.

பயணம் படம் மூலம் பிரபலம் ஆனவர் நடிகர் ஸ்ரீசரண். சென்னையைச் சேர்ந்த அவர் சித்தார்த் நடித்த 180 படத்தில் அவருக்கு நண்பராக நடித்திருந்தார். அஜீத்தின் பில்லா 2 படத்தில் பாபி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்போது ஸ்ரீசரண் ஜெயம் ரவி, நயன்தாரா நடித்து வரும் தனி ஒருவனில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் படம் பற்றியும், ஜெயம் ரவி பற்றியும் கூறுகையில்,

ரவி

ரவி

தனி ஒருவன் படத்தில் ரவியுடனேயே இருக்கும் போலீஸ்காரராக நான் நடித்து வருகிறேன். படம் முழுக்க நான் ரவியுடன் தான் இருப்பேன். ரவி ஒரு அருமையான மனிதர்.

தல

தல

நான் பணியாற்றிய ஹீரோக்களில் ஒன்ட் அன்ட் ஒன்லி தல அஜீத்துக்கு பிறகு ஜெயம் ரவி தான் சிறந்த ஹீரோ ஆவார். அவர் சிறிதும் தலைக்கனம் இல்லாத மனிதர்.

நண்பர்கள்

நண்பர்கள்

படப்பிடிப்பு தளத்தில் நாங்கள் எல்லாம் ஒரு நண்பர்கள் கும்பல் போன்று தான் ஜாலியாக அரட்டை அடித்துக் கொண்டிருப்போம். தனி ஒருவன் இயக்குனர் ராஜா தான் பாவம் அத்தனை டென்ஷனையும் ஏற்றுக் கொள்வார்.

பாடல்கள்

பாடல்கள்

தனி ஒருவன் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இரண்டு பாடல்கள் மற்றும் சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டியுள்ளது. நான் வரும் காட்சிகள் ஒன்று இரண்டு படமாக்கப்பட உள்ளது என்று ஸ்ரீசரண் தெரிவித்துள்ளார்.

ரோமியோ ஜூலியட்

ரோமியோ ஜூலியட்

ஜெயம் ரவி, ஹன்சிகா மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள ரோமியோ ஜூலியட் ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. ரோமியோ ஜூலியட் படத்தை ஹன்சிகா பெரிதும் எதிர்பார்க்கிறார்.

English summary
Actor Sricharan told that, “Jayam Ravi is by far the best lead actor I have worked with apart from the one and only Thala."
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil