விஜய் சேதுபதியின் தூக்கத்தை கெடுக்கும் ரம்யா கிருஷ்ணன்

By Siva

Recommended Video

சூப்பர்டீலக்ஸ் படத்துல இருந்து விலகின நதியா

சென்னை: விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ் படத்தில் இருந்து நதியா வெளியேறியுள்ளார். அவருக்கு பதிலாக ரம்யா கிருஷ்ணன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஆரண்ய காண்டம் புகழ் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் சூப்பர் டீலக்ஸ். இந்த படத்தில் விஜய் சேதுபதி திருநங்கை ஷில்பாவாக நடிக்கிறார்.

ஷில்பா கதாபாத்திரத்தின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சூப்பர் டீலக்ஸ்

சூப்பர் டீலக்ஸ்

சூப்பர் டீலக்ஸ் படத்தில் நதியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஓரிரு நாட்கள் படப்பிடிப்புக்கும் வந்துள்ளார். அதன் பிறகு அவர் படத்தில் இருந்து விலகியுள்ளார்.

கதாபாத்திரம்

கதாபாத்திரம்

தான் கொடூர வில்லியாக நடிக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்ட பிறகே அவர் படத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது. முதலில் தனது கதாபாத்திரம் குறித்து முழுவதும் கேட்காமல் நடிக்க ஒப்புக் கொண்டாராம்.

டேமேஜ்

டேமேஜ்

கொடூர வில்லியாக நடித்தால் தனது இமேஜ் டேமேஜாகிவிடும் என்று பயந்து நதியா சூப்பர் டீலக்ஸ் படத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.

நடிப்பு

நடிப்பு

நதியா விலகியதை அடுத்து வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க ரம்யா கிருஷ்ணனை ஒப்பந்தம் செய்துள்ளனர். வில்லியாக நடிப்பது எல்லாம் ரம்யாவுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி, எளிதாக நடித்துவிடுவார்.

ரசிகர்கள்

ரசிகர்கள்

விஜய் சேதுபதிக்கு வில்லியாக ரம்யா கிருஷ்ணன் நடிப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் ஃபஹத் ஃபாசில், சமந்தா, காயத்ரி உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X