தடுப்பூசி போட்டாச்சு... நடிகை நதியாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது

மும்பை : 1990 களில் தமிழ், மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்தவர் நதியா. ரஜினி, பிரபு, சத்யராஜ், சுரேஷ், மோகன், விஜயகாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் அனைவருடனும் ஜோடி சேர்ந்து நடித்து கலக்கியவர்.

சினிமாவில் புகழின் உச்சியில் இருந்த போதே திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கணவருடன் அமெரிக்காவில் செட்டில் ஆன நதியா, அவ்வப்போது இந்தியா வந்து படங்களில் நடித்து வந்தார். தமிழில் நீண்ட இடைவெளிக்கு பிறகு பிரபுவின் 50 வது படமான ராஜகுமாரன் படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்தார்.

Nadhiya tests positive for covid 19

பிறகு ஜெயம் ரவிக்கு அம்மாவாக எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படத்தில் நடித்து, அனைவரின் மனதிலும் அழுத்தமான இடத்தை பிடித்தார். அழகான, இளமையான அம்மாவாக நடித்து அசத்திய நதியாவிற்கு தமிழிலும் பட வாய்ப்புக்கள் குவிந்தன.

கணவன் மற்றும் இரு மகள்களுடன் அமெரிக்காவில் இருந்து லண்டனில் குடியேறினார். சமீபத்தில் மும்பையில் வந்து குடும்பத்துடன் செட்டில் ஆனார். அவ்வப்போது யோகா, ஒர்க் அவுட் செய்யும் வீடியோக்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து, அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வந்தார். இளமை சீக்ரெட்டையும், உடற்பயிற்சியின் அவசியத்தையும் உணர்த்தி வரும் நதியா, சமீபத்தில் தான் கொரோனா தடுப்பூசி முழுவதையும் போட்டுக் கொண்டார்.

Recommended Video

Covid Vaccine போட்டவங்களுக்கும் ஏன் பாதிப்பு ஏற்படுகிறது? இதான் காரணம்

இந்நிலையில் நதியாவிற்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சினிமாக்களில் அரிதாக நடித்து வரும் நதியா, விளம்பர படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். கதை நன்றாக இருந்தால் மட்டுமே சினிமாக்களில் நடிக்க ஒப்புக் கொள்கிறார்.

Nadhiya tests positive for covid 19

கொரோனாவில் இருந்து நம்மையும், நமது குடும்பத்தாரையும் காத்துக் கொள்ள அனைவரும் சீக்கிரம் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியம் என வலியுறுத்தி வந்தவர் நதியா. இவர் மே மாதம் தான் இரண்டாவது தடுப்பூசி போட்டுக் கொண்டார். இந்நிலையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

நதியா தற்போது மலையாளம் த்ரிஷ்யம் படத்தின் தெலுங்கு ரீமேக்கான த்ரிஷ்யம் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ஷுட்டிங் ஐதராபாத்தில் ஒரு மாதத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. இந்த படத்தையும் ஜீத்து ஜோசப் தான் இயக்கி வருகிறார். இதே போல் த்ரிஷ்யம் 2 தமிழ் ரீமேக்கான பாபநாசம் 2 படத்தில் முதல் முறையாக கமலுக்கு ஜோடியாக நடிக்க நதியாவுடன் பேசப்பட்டு வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X