வாரிசு டீம் பிராங்க்.. நயன்தாரா ‘அறம்’ லுக்.. ஹீரோயினாக மாறிய ராஜலட்சுமியின் எக்ஸ்க்ளூசிவ் பேட்டி!

சென்னை: வாரிசு படத்தின் "வா தலைவா" பாடலை பாடியுள்ள ராஜலட்சுமி செந்தில் ஹீரோயினாகவும் 'லைசென்ஸ்' படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அறம் நயன்தாரா மாதிரியே இருக்கீங்க என்கிற கமெண்ட்டுக்கும் வாரிசு இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ளாதது ஏன் என்பது குறித்தும் அவர் பேசியுள்ள எக்ஸ்க்ளூசீவ் பேட்டி டிரெண்டாகி வருகிறது.

நாட்டுப்புற பாடகர்களான செந்தில் மற்றும் அவரது மனைவி ராஜலகட்சுமி விஜய் டியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நிலையில் ஏகப்பட்ட சினிமா பாடல்களை பாடி வருகின்றனர்.

சின்ன மச்சான் பாடலை பாடி ஹிட் அடித்த ராஜலட்சுமி புஷ்பா படத்தின் சாமி சாமி பாடல் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

ஹீரோயினான ராஜலட்சுமி

ஹீரோயினான ராஜலட்சுமி

சைலென்ஸ் படத்தில் ஹீரோயினாக ராஜலட்சுமி நடித்து வருகிறார். இயக்குநர் கணபதி பாலமுருகன் இயக்கத்தில் தந்தை மகள் பாசம் மற்றும் பெண்களின் பாதுகாப்பு உள்ளிட்ட கருத்துக்களை வலியுத்தும் படமாக இந்த படம் உருவாகி வருகிறது. சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த பலரும் அறம் நயன்தாரா மாறி இருக்கீங்க என கமெண்ட் போட்டது குறிப்பிடத்தக்கது.

அறம் நயன்தாரா மாதிரியா

அறம் நயன்தாரா மாதிரியா

இந்நிலையில் தமிழ் ஃபிலிமிபீட்டுக்கு பேட்டி அளித்துள்ள ராஜலட்சுமி செந்தில் அறம் நயன்தாரா மாதிரியும் ராட்சசி ஜோதிகா மேம் மாதிரியும் இருக்கேன்னு பலரும் சொல்கின்றனர். ஆனால், அந்த மாதிரி இருக்கணும்னு நாங்க திட்டமிட்டு இதை பண்ணல. லுக் டெஸ்ட் பண்ணும் போது, இந்த கதாபாத்திரம் எப்படி இருக்கணும்னு வந்த தோற்றம் தான் இது என விளக்கம் கொடுத்துள்ளார் ராஜலட்சுமி.

வாரிசு படத்துல பாடியிருக்கேன்

வாரிசு படத்துல பாடியிருக்கேன்

வாரிசு படத்தின் ஓப்பனிங் பாடலான வா தலைவா பாடலில் ஆரம்பத்தில் வரும் வெறும் 4 லைன் மட்டுமே பாடியிருக்கேன். திடீரென ஒரு நாள் கூப்பிட்டு பாட சொன்னாங்க, பாடிட்டு வந்தேன். வீட்டுக்கு வரும் போதே தளபதி 66ல் ராஜலட்சுமி பாடியிருக்காருன்னு செய்தி வந்திடுச்சு.. அவ்ளோதான் இனிமே கூப்பிடமாட்டாங்கன்னு நினைச்சி விட்டுட்டேன்.

பிராங்க்ன்னு நினைச்சிட்டேன்

அப்புறம் வாரிசு ஆடியோ லாஞ்சுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி ஏதோ புது நம்பர்ல இருந்து போன் வந்துச்சு, வாரிசு படத்துல நீங்க பாடியிருக்கீங்களா.. ஆடியோ லாஞ்சுக்கு வந்துடுங்கன்னு நான் யாரோ பிராங்க் பண்றாங்கன்னு நினைச்சிட்டு அந்த இசை வெளியீட்டு விழாவுக்கே போகறது மிஸ் பண்ணிட்டேன். அப்புறம் அந்த பாட்டை கேட்கும் போது தான் என் வாய்ஸ் இருக்குன்னு தெரிஞ்சதும் பெரிய தப்பு பண்ணிட்டோம்னு தோணுச்சு என இந்த பேட்டியில் ஏகப்பட்ட விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X