X
தமிழ் » திரைப்படங்கள் » இது நம்ம ஆளு
இது நம்ம ஆளு

இது நம்ம ஆளு

Action | Romance | 27 May 2016 | U |
Tamil

2.5 /5 Users

1.5 /5 Filmibeat

இது நம்ம ஆளு கதை

இது நம்ம ஆளு தமிழ் திரையுலகின் நகைச்சுவையான காதல் திரைப்படம். இப்படத்தின் இயக்குனர் பாண்டியராஜ் மற்றும் நடிகர் சிலம்பரசன் நடிகை நயன்தாரா ஆகியோர் நடிக்கும் இப்படத்தை சிலம்பரசன் தயாரிக்க அவர் தம்பி குரலரசன் இசையமைத்துள்ளார். கதை : படம் சிவா என்ற இளைஞனை மையப்படுத்திய கதை. கதை ஐடி ஊழியர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் கொண்டாட்டங்களிலிருந்து ஆரம்பமாகிறது. படத்தில் சகோ என்ற சூரி, சிம்புடன் படம் முழுக்க பிரவேசிக்கிறார். நடிகை நயன்தாராவின் வருகை அதனை தொடர்ந்து நயன்தாராவிடம், சிம்பு அவரது பிளாஷ்பேக்கை கூறுகின்றார். ஆண்ட்ரியா, ஜெய், சந்தானம் என நட்சத்திர பட்டாளங்களின் கலக்கல் மற்றும் சிம்பு ஆண்ட்ரியாவின் அழகிய காதல், ஊடல் பின்பு பிரிதல்..என கதை இடைவேளையை நோக்கி நகர்கின்றது. மறுபடியும் நிகழ்கால வாழ்க்கைக்கு கதை திரும்ப, நயன்தாரா மற்றும் சிம்புவின் திருமணம், அதில் வரும் சிக்கல்கள் என நகைச்சுவை மற்றும் உணர்ச்சிவசமான கதையாக உள்ளது இது நம்ம ஆளு.  ஜெய் மற்றும் சந்தானம் ஓரிரு காட்சிகளில் மட்டும் வந்திருந்தாலும் அவர்களின் நடிப்பு அபாரம். 
Read More

இது நம்ம ஆளு நடிகர்கள் & படக்குழுவினர்

இது நம்ம ஆளு அணியின் தகவல்

இயக்குனர் பாண்டிராஜ்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை குறளரசன்
தயாரிப்பாளர் சிலம்பரசன்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

இது நம்ம ஆளு விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
காதலித்துப் பிரிந்த சிம்பு - நயன்தாராவை வைத்து ஒரு படம் எடுத்திருக்கிறார் பாண்டிராஜ். இது காதல் படம் என்கிறார் இயக்குநர். காதல் படம்தானா? பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்! முதலில் இது படம்தானா? ஒரு காதல் கதையை இப்படியா படமாக்குவார்கள்? காட்சிகளில் ஒரு குறைந்தபட்ச நேர்த்தி இல்லை. அழகன் என்ற படத்தில் காதலனும் காதலியும் விடிய விடிய பேசினார்கள் என்ற ஒரு வரியை மூன்று நிமிடப் பாடலாக, கவிதையாக காட்சிப்படுத்தியிருப்பார் கேபி. இந்தப் படத்திலும் அப்படி ஒரு காட்சி. ஆனால் காட்சிப்படுத்திய விதத்தில் பாடாய்ப் படுத்தியிருக்கிறார்கள். காரணம் யாராக இருந்தாலும் பழி முழுவதும் இயக்குநர் பாண்டிராஜ் மீதுதான்! வசனம் பேசுவதாகக் கூறிக் கொண்டு வார்த்தைகளை கடித்துத் துப்புகிறார் சிம்பு. காதில் ரத்தம் வராத குறைதான். இவரது நிஜ குணத்தைப் பிரதிபலிக்கும் வசனங்களுக்கு ஏதோ பெரிய காப்பிய ரேஞ்சுக்கு முக்கியத்துவம் தந்திருக்கிறார்கள். கூடவே அவ்வப்போது சூரி அடிக்கும் கமெண்டுகள் இன்னும் எரிச்சலூட்டுகின்றன. படத்தின் மிகப் பெரிய ஆறுதல் நயன்தாரா. 2020-லும் கூட இவரை அடித்துக் கொள்ள முடியாது போலிருக்கிறது. சில காட்சிகளில் சிம்புவிடம் அவர் காதல் வசப்படுவது செயற்கையாகத் தெரிந்தாலும், இறுதிக் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். இன்னொரு ப்ளஸ் பாலசுப்பிரமணியம் கேமிரா! சந்தானம் இரண்டு காட்சிகளில் வருகிறார். நட்புக்கு மரியாதை. ஆன்ட்ரியாவை தெலுங்குப் பெண்ணாகக் காட்டி, அவரது உச்சரிப்பு கொடுமையை நியாயப்படுத்திவிட்டார் பாண்டிராஜ். இசை..? பாவம்.. சின்னப் பையன். உண்மையைச் சொன்னால் மனசு கஷ்டப்படும்!

இது நம்ம ஆளு திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு

×
2.5 /5 Your Rating

இது நம்ம ஆளு

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+