X
யூ டர்ன்

யூ டர்ன்

Thriller | 13 Sep 2018 | U/A | 128 Mins
Tamil

2.6 /5 Users

3 /5 Filmibeat

யூ டர்ன் கதை

யூ டர்ன் இயக்குனர் பவன் குமார் இயக்கத்தில் சமந்தா நடித்த த்ரில்லர் திரைப்படம். இத்திரைப்படம் கன்னட படத்தின் ரீமேக்காக உருவாகியுள்ளது. கன்னடத்தில் இயக்கிய பவன் குமார் தான் தமிழில் படத்தை இயக்கி, தயாரித்துள்ளார். இப்படத்திற்கு பூர்ண சந்திரா இசையமைத்துள்ளார்.  கதை : சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் சாலை தடுப்பு கற்களை நகர்த்தி யுடர்ன் எடுத்து செல்கிறார்கள் சில வாகன ஓட்டிகள். இதனால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் பாதிப்புகள் குறித்து கவர் ஸ்டோரி எடுக்க முயற்சிக்கிறார் பத்திரிகையாளர் ரச்சனா (சமந்தா). சாலை விதிகளை மீறிய ஒருவரை பேட்டி எடுக்க சமந்தா முனையும் போது, அந்த நபர் மரணிக்கிறார். இதனால் சமந்தாவை போலீஸ் சந்தேகப்படுகிறது. மேம்பாலத்தில் விதிகளை மீறி யுடர்ன் எடுத்தவர்கள் குறித்து சமந்தா சேகரித்து வைத்திருக்கும் பட்டியலில் உள்ள அனைவருமே மர்மமான முறையில் மரணித்திருப்பது போலீஸ் விசாரணையில் தெரிய வருகிறது. இந்த மரணங்களுக்கும் சமந்தாவுக்கும் என்ன தொடர்பு என்பதை பல சுவாரஸ்ய திருப்பங்களுடன் திரில்லிங்காக சொல்கிறது 'யுடர்ன்'.
Read More

யூ டர்ன் நடிகர்கள் & படக்குழுவினர்

யூ டர்ன் அணியின் தகவல்

இயக்குனர் பவன் குமார்
ஒளிப்பதிவாளர் NA
தொகுப்பாளர் NA
இசை NA
தயாரிப்பாளர் பவன் குமார்
பட்ஜெட் TBA
பாக்ஸ் ஆபீஸ் TBA
ஓடிடி தளம் TBA
ஓடிடி ரிலீஸ் தேதி TBA

யூ டர்ன் விமர்சகர்களின் விமர்சனம்

tamil.filmibeat.com
கன்னடத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெளிவந்த யுடர்ன் படத்தின் தமிழ் ரீமேக் தான் இந்த படம். கன்னட யுடர்னை பார்க்காதவர்களுக்கு இந்தப்படம் நிச்சயம் ஒரு சர்ப்ரைஸ் திரில்லர். முதல் பாதி முழுவதும் படத்தில் என்ன நடக்கிறது என்பதை பார்வையாளர்கள் யூகிக்க முடியாதபடி திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் பவன்குமார். இரண்டாம் பாதியை புதிய கோணத்தில் கையாண்டிருக்கும் விதமும், தமிழ் சினிமாவுக்கு புது அனுபவம். ஒரு சிறு சம்பவத்தை அடிப்படையாக வைத்து மிக அழகாக கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர். வழக்கமாக நம் சினிமாக்களில் வரும் கிளிஷே பேய்களில் இருந்து விடுபட்டு, சாதாரண மனிதர்களை போலவே பேய்களையும் காட்டியிருப்பது வித்தியாச உணர்வை தருகிறது. பத்திரிகையாளர், போலீஸ் அதிகாரிகள், சாலை விதிகளை மீறுபவர்கள், மரணங்கள், அழகான குடும்பம் என பாத்திரப் படைப்பும் சம்பவங்களும் கச்சிதம். ஏற்கனவே பார்த்து பழகிய அதே போலீஸ் அதிகாரியாக ஆதி. ஈரம் படத்தில் செய்ததை தான் இதிலும் செய்திருக்கிறார். ஆனால் முன்பைவிட முதிர்ச்சியான நடிப்பு. ஒரு போலீஸ் அதிகாரியாக தனக்காக எல்லையை கடக்காமல் பயணித்திருக்கிறார். படத்தின் மிகப்பெரிய பலம் நாயகி சமந்தாவும், திரைக்கதையும் தான். ஆனால் ஒரு சில இடங்களில் இதுவே படத்தின் பலவீனமாகவும் மாறிவிடுகிறது. இளநிலை பயிற்சி நிபருர் கதாபாத்திரத்திற்கு சமந்தா ஓவர் மெச்சூர்டாக தெரிகிறார். அதேபோல், ஒரு பெரிய ஆங்கில பத்திரிகையில் க்ரைம் ரிப்போர்ட்டராக இருக்கும் ராகுல் ரவீந்திரனுக்கு ஒரு முக்கியமான காவல் நிலையத்தில் நடைபெறும் அதிர்ச்சியான சம்பவங்கள் எதுவுமே தெரியாமலா இருக்கும். அப்படி தெரியவில்லை என்றால் அவர் எப்படி க்ரைம் ரிப்போர்ட்டராக இருக்க முடியும் இயக்குனரே. சாலை விதிமீறல்கள் என்பது தினமும் சர்வ சாதாரணமாக நாம் கடந்து போகும் ஒன்று தான். ஆனால் அதற்கான பின் வினைகள் இப்படி எல்லாம் கூட இருக்குமா என ஆச்சரியப்பட வைக்கிறது யுடர்ன். நாமும் சாலை விதிகளை மீறாமல் தியேட்டருக்கு யுடர்ன் எடுக்கலாம்.

யூ டர்ன் திரைப்பட ரசிகர் விமர்சனம்

  • கதை
  • செயல்
  • திசை
  • பட மதிப்பீடு
  • Murali Mohan sir direction is fantastic! Thank you Sir! You have done an amazing movie! Murali Mohan sir direction is fantastic! Thank you Sir! You have done an amazing movie!

  • i like this movie because of shivanna ad s muralimohan sir he done movie very well and its a great song in this song

×
2.6 /5 Your Rating

யூ டர்ன்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+