Don't Miss!
- Lifestyle எப்பவும் வெறும் தோசை சுடுறதுக்கு பதிலா, ஒருமுறை நெல்லூர் கார தோசையை ட்ரை பண்ணுங்க...
- News விவிபாட் ஒப்புகை சீட்டு 100% எண்ணப்படுமா? உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு.. பெரும் எதிர்பார்ப்பு
- Finance ஒரு பங்குக்கு ரூ.240 டிவிடெண்ட் வழங்கும் ஐடி நிறுவனம்.. நீங்களும் அதுல பங்கு வச்சிருக்கீங்களா?
- Automobiles ஆடி கார்களின் விலையை உயர்த்த முடிவு! எவ்வளவு காஸ்ட்லியாக போவுது தெரியுமா?
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
என்னது பிக்பாஸ் சீசன் 6ல் கூல் சுரேஷா.. இந்த சீசன் சூப்பரா களைகட்டும் போலருக்கே!
சென்னை : விஜய் டிவியின் பிரம்மாண்டமான நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 6 விரைவில் துவங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரமோக்கள் சிறப்பான வகையில் வெளியாகி வருகிறது. இரண்டாவது ப்ரமோவில் கமல் தோன்றி மிரட்டினார்.
விக்ரம் படத்தில் நடிப்பதற்காக கடந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய அவர், தற்போது இந்தியன் 2 படத்தில் நடித்துவரும் நிலையில் எப்படி சமாளிப்பார் என்ற கேள்வி தற்போது ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
Bigg Boss 6 Tamil: டிடி நீலகண்டன் முதல் தர்ஷா குப்தா வரை.. இத்தனை பேர் பிக்பாஸ்ல கலந்துக்கிறாங்களா?
பிக்பாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சி
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சி அவருடைய சிறப்பான தொகுப்புடனும் சிறப்பான போட்டியாளர்களுடனும் 5 சீசன்களை இதுவரை கடந்துள்ளது. இந்த நிகழ்ச்சிக்கான சிறப்பான வரவேற்பை தொடர்ந்து பிக்பாஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் துவங்கப்பட்டது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி
நேரலையில் ரசிகர்களை சந்தித்த இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் கமல் இடையிலேயே விலகினார். அப்போது அவர் விக்ரம் படத்தில் நடித்து வந்ததால் தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை நடத்த முடியவில்லை என்று விளக்கினார். தொடர்ந்து இந்த நிகழ்ச்சியை நடிகர் சிம்பு தொகுத்து வழங்கினார்.
பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி
இதனிடையே விரைவில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி துவங்கவுள்ளது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்தான் தொகுத்து வழங்கவுள்ளார். தற்போது இந்தியன் 2 படப்பிடிப்பில் கமல்ஹாசன் பங்கேற்கவுள்ள நிலையில், இந்தியன் 2 மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சி இரண்டையும் எப்படி சமாளிப்பார் என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
அடுத்தடுத்த ப்ரமோக்கள்
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் அடுத்தடுத்த ப்ரமோக்களை விஜய் டிவி வெளியிட்டு வருகிறது. குறிப்பாக இரண்டாவது ப்ரமோவில் கமல் மிரட்டலான பேச்சுடன் நிகழ்ச்சிக்கான இன்ட்ரோவை கொடுத்துள்ளார். இந்த நிகழ்ச்சியின் அடுத்தடுத்த போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பிக்பாஸ் சீசன் 6ல் கூல் சுரேஷ்?
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் நடிகர் கூல் சுரேஷ் இணையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. திரையரங்குகளில் வெளியாகும் பல படங்களை உடனுக்குடன் விமர்சனம் செய்து சமீப காலங்களில் மிகவும் பிரபலமாகியுள்ளார் கூல் சுரேஷ். இந்நிலையில் இவர் பிக்பாஸ் வீட்டில் இணைந்தால் கண்டிப்பாக நிகழ்ச்சி களைகட்டும் என்று எதிர்பார்க்கலாம்.
பிக்பாஸ் நிகழ்ச்சி
கடந்த 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சிக்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். 100 நாட்கள் ஒரே இடத்தில் 15க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இருக்கும் நிலையில் அவர்களின் நடவடிக்கைகள், உணர்வுகள் எப்படி மோதுகின்றன என்பது குறித்த நிகழ்ச்சியாக பிக்பாஸ் காணப்படுகிறது.