Don't Miss!
- News
எங்கள் வேட்பாளர் ரெடி.. ‘ஆப்ஷன் 2’.. அதுக்குதான் ஓபிஎஸ் ‘வெய்ட்’ பண்றார்.. போட்டு உடைத்த புகழேந்தி!
- Lifestyle
கருட புராணத்தின் படி இந்த 5 விஷயங்களை செஞ்சா, மரணத்திற்கு பின் நரகம் செல்வதை தவிர்க்கலாம்..!
- Automobiles
இந்த கதை தெரியுமா? சஃபாரி பெயருக்காக டாடாவிடம் கையேந்தி நின்ற பிரபல வெளிநாட்டு கார் நிறுவனம்!!
- Sports
"கேப்டன் குற்றச்சாட்டு; துணைக்கேப்டன் பாராட்டு" நியூசி,தொடரில் ஏற்பட்ட சர்ச்சை..குழம்பும் ரசிகர்கள்
- Technology
தரமான 5G ஸ்மார்ட்போனை இந்தியாவுக்கு கொண்டுவரும் விவோ.! என்னென்ன அம்சங்கள்?
- Finance
பொறுப்புக்கு வந்த வாரிசுகள்.. குமார் மங்கலம் பிர்லா நிம்மதி..!
- Travel
தாம்பரத்தில் தாஜ்மஹாலா – ஆம்! ஒரு அற்புதமான கண்காட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது – மிஸ் பண்ணிடாதீங்க!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
யப்பா.. இது பீஸ்ட் படம்ப்பா.. அஜித்தின் துணிவு டிரைலரை துவைத்து எடுக்கும் விஜய் ரசிகர்கள்!
சென்னை: விஜய் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு அய்யோ அம்மா ஆடியோ லாஞ்ச் என்கிற ஹாஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் டிரெண்ட் செய்த நிலையில், தற்போது பீஸ்ட் ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து அஜித்தின் துணிவு படத்தை விஜய் ரசிகர்கள் துவைத்து எடுத்து வருகின்றனர்.
இயக்குநர்கள் எடுக்கும் படத்தை ட்ரோல் செய்கின்றனரா? அல்லது ட்ரோல் செய்யவே இயக்குநர்கள் படம் எடுக்கிறாங்களான்னே தெரியவில்லை என துணிவு படத்தின் டிரைலரை பார்த்து விட்டு விஜய் ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
பீஸ்ட் படத்தின் காட்சிகளையும் அப்படியே கம்பேர் செய்திருப்பது தான் இதில் ஹைலைட்டே என்பது குறிப்பிடத்தக்கது.
என்னமாறி அயோக்கிய பய மேல கைய வைக்கலாமா.. துணிவு டிரைலர் எப்படி இருக்கு? பீஸ்ட் வைப்ஸ் வருதா?

ப்ளூ சட்டை மாறன் கலாய்
பீஸ்ட் படம் மால் செட்.. துணிவு படம் பேங்க் செட் அவ்ளோ தான் என வின்னர் பட காமெடி சீனை போட்டு ப்ளூ சட்டை மாறன் இந்த ஆண்டின் கடைசி ட்ரோல் ட்வீட்டை போட்டுள்ளார். மணி ஹெய்ஸ்ட் படத்தின் வாடையுடன் சேர்த்து பீஸ்ட் படத்தின் வாடையும் ஹெவியாக அடிப்பதாக விஜய் ரசிகர்கள் ப்ளு சட்டை மாறன் ட்வீட்டுக்கு கீழ் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.

அப்படியே மேட்ச் ஆகுதே
விஜய்யின் பீஸ்ட் படத்தின் நடிகர்கள் மற்றும் அஜித்தின் துணிவு பட நடிகர்களை அப்படியே பர்ஃபெக்ட்டாக கம்பேர் செய்து அதற்குள் விஜய் ரசிகர்கள் ட்ரோல் பஞ்சாயத்தை ஆரம்பித்துள்ளனர். ஒவ்வொரு கதாபாத்திரமும் அப்படியே ஒத்துப் போகுதே என விஜய் ரசிகர்கள் அந்த கம்பேரிஷன் போட்டோவை அதிகம் ஷேர் செய்து வச்சு செய்து வருகின்றனர்.

டூப் சீனா
வாட்டர் பைக்கில் நடிகர் அஜித் சாகசம் செய்யும் காட்சியில் அவர் நடிக்கவே இல்லை என்றும் அந்த காட்சியில் டூப் நடிகர் தான் நடித்தார் என்றும் பங்கமாக ட்ரோல் செய்து வருகின்றனர். மேலும், முதல் காட்சியில் நடிகர் அஜித் மாஸ்க் போட்டுக் கொண்டு வங்கியினுள் வரும் நிலையில், அதற்கு முன் நடக்கும் ஸ்டன்ட் காட்சியில் கூட அவருக்கு பதில் டூப் நடிகரைத்தான் பயன்படுத்தியிருப்பாங்க என ட்ரோல்கள் பறக்கின்றன.

யப்பா இது பீஸ்ட்ப்பா
துணிவு படத்தின் டிரைலர் அப்படியே பீஸ்ட் படம் போல இருப்பதாக விஜய் ரசிகர்கள் ஹாஷ்டேக் பீஸ்ட்டை மீண்டும் டிரெண்ட் செய்து வரும் நிலையில், கில்லி படத்தில் பிரகாஷ்ராஜ் சொல்லும் அந்த எபிக் டெம்பிளேட்டை போட்டு "யப்பா இது பீஸ்ட்ப்பா" என விஜய் ரசிகர்கள் மரண பங்கம் செய்து வருகின்றனர்.

அஜித் ரசிகர்கள் பதிலடி
வாரிசு படத்தின் ஒவ்வொரு காட்சியும் அப்படியே மகேஷ் பாபுவின் மகரிஷி படத்தின் காப்பி போல வச்சிக்கிட்டு நீங்க கலாய்க்கலாமா என அஜித் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். மேலும், வாரிசு டிரைலர் வரட்டும் திருப்பிக் கொடுப்போம் என்றும் சோஷியல் மீடியா சண்டையை ரசிகர்கள் மாறி மாறி போட்டு வருகின்றனர்.