சிபி வரவே கூடாது...அப்படி என்ன கோபம்...கடுப்பாகி பேசிய பாவனி

சென்னை : பிக்பாஸ் சீசன் 5 ல் தற்போது நடைபெற்று வரும் டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்கை நெட்டிசன்கள் கழுவி ஊற்றி வருகிறார்கள். இந்த போட்டி நேர்மையாக நடத்தப்படவில்லை என பலரும் கூறி வருகின்றனர்.

வழக்கமாக முந்தைய சீசன்களில் டிக்கெட் டு ஃபினாலே வாரத்தில் போட்டிகள் கடுமையாக நடத்தப்படும். அவை உடல் வலிமையை சோதிப்பதாக இருக்கும். தண்ணீர் நிரப்பப்பட்ட பலூனை கையை இறக்காமல் பிடித்த படி நிற்க வேண்டும். கயிற்றை விடாமல் பிடித்து படி பல மணி நேரம் நிற்க வேண்டும். காலால் பலகையை சமன் செய்தபடி மேலுள்ள பலகையில் க்யூப்களை அடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டன.

சின்னபிள்ளை தனமான டாஸ்க்

சின்னபிள்ளை தனமான டாஸ்க்

ஆனால் இந்த சீசனில் இதுவரை உடல் வலிமையை சோதிக்கும் வகையிலான டாஸ்க்குகள் நடத்தப்படவில்லை. சின்ன பிள்ளை தனமான டாஸ்க்குகள் மட்டுமே கொடுக்கப்படுவதாக ரசிகர்கள் எரிச்சல் தெரிவித்து வருகின்றனர். டிக்கெட் டு ஃபினாலே டாஸ்க்குள் அதே போல் கொடுக்கப்பட்டு வருவது ரசிகர்களை சலிப்படைய வைத்துள்ளது.

தாமரை கேட்ட கேள்வி

தாமரை கேட்ட கேள்வி

தற்போது நடத்தப்பட்டு வரும் ஃபினாலே டிக்கெட் டாஸ்க்கில் நிரூப், தாமரை, பாவனி, பிரியங்கா, ராஜு ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். சிபி, அமீர், சஞ்சீவ் ஆகியோர் அடுத்த கட்டத்திற்கு முன்னேறினர். இவர்களுக்கான அடுத்த கட்ட டாஸ்க் துவங்குவதற்கு முன், 88 வது நாளான நேற்று காலை வீட்டிற்குள் நிரூப் மற்றும் தாமரை, பாவனி ஏன் அமீரின் முட்டையை உடைக்கவில்லை என பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

 வார்த்தை விஷமா வருது

வார்த்தை விஷமா வருது

தாமரை, பிரியங்கா பற்றி பேசுகையில், அந்த புள்ள பார்க்குறது பாவமா இருக்கு. ஆனா வார்த்தை எல்லாம் விஷமா வருது என்கிறார். அதே நேரத்தில் வெளியில் அமர்ந்து பிரியங்கா மற்றும் பாவனி, தாமரை பற்றியும், அடுத்த கட்டத்திற்கு முன்னேறி உள்ள மூன்று பேர் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போதும் பிரியங்கா, தாமரைக்கு சிபி மீதும் கோபம் உண்டு என சொல்கிறார்.

Recommended Video

Pavani பிரச்சினை பற்றி Abhinay மனைவி என்ன சொன்னாங்க தெரியுமா?? | Bigg Boss Tamil, Abhinay Pavani
சிபி வரவே கூடாது

சிபி வரவே கூடாது

அதற்கு பதில் கூறும் பாவனி, சிபி வரவே கூடாது. அவர் என்ன பண்ணிருக்கார் இதுவரை வர்றதுக்கு. ஒன்னுமே பண்ணல. அவர் எதற்காக வர வேண்டும் என கோபமாக பிரியங்காவிடம் தெரிவித்தார். இதை பார்த்த ரசிகர்கள் பாவனிக்கு சிபி மீது என்ன கோபம். இவ்வளவு சீரியசாக அவர் வரவே கூடாது என்கிறார். அக்ஷரா இருக்கும் வரை அவருக்கும், சிபிக்கும் தான் பிடிக்காமல் அடிக்கடி மோதிக் கொள்வார்கள். ஆனால் பாவனிக்கு என்ன ஆயிற்று என கேட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X