சிரஞ்சீவியை தொடர்ந்து சிவ ஷங்கர் சிகிச்சைக்காக ரூ.5 லட்சம் தந்த தனுஷ்

சென்னை : பிரபல நடன இயக்குனர் சிவ ஷங்கர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தகவல் சமீபத்தில் வெளியானது. அவரது சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாததால், தந்தையை காப்பாற்ற உதவும்படி அவரது மகன் கேட்டிருந்தார்.

சிவ ஷங்கர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் இருப்பதை அறிந்து கோலிவுட் மட்டுமின்றி, டோலிவுட்டை சேர்ந்த திரை பிரபலங்கள், சிவஷங்கருடன் பணியாற்றிய பலரும் அவர் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

சிகிச்சையில் சிவஷங்கர்

சிகிச்சையில் சிவஷங்கர்

சிவஷங்கர் தற்போது ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சிகிச்சைக்காக ஒரு நாளைக்கு ரூ.1 லட்சம் வரை ஆகிறதாம். சிவஷங்கர் மட்டுமின்றி அவரது மனைவி, மூத்த மகன் ஆகியோருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் சிவஷங்கரின் மனைவி மற்றும் மகன் வீட்டு தனிமையில் இருக்கிறார்கள்.

உடனடியாக உதவிய சிரஞ்சீவி

உடனடியாக உதவிய சிரஞ்சீவி

சிவஷங்கரின் இளைய மகன் அஜய் தான் தந்தையை காப்பாற்ற உதவும்படி கேட்டுள்ளார். இதனை அறிந்ததும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் அறக்கட்டளையை சேர்ந்தவர்கள் உடனடியாக சிவஷங்கரின் குடும்பத்தினரை தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். பிறகு உடனடி தேவைக்காக ரூ.3 லட்சத்தை சிரஞ்சீவி சார்பில் அளித்துள்ளனர்.

நிதி அளித்த தனுஷ்

நிதி அளித்த தனுஷ்

சிரஞ்சீவியை தொடர்ந்து நடிகர் தனுஷ், சிவஷங்கரின் மருத்துவ சிகிச்சைக்காக ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கி உள்ளார். தனுஷின் உதவியாளர் உள்ளிட்டோர் சிவஷங்கரின் குடும்பத்தினர்களை தொடர்பு கொண்டு சிவஷங்கரின் உடல்நிலை மற்றும் சிகிச்சை நிலவரம் குறித்து கேட்டறிந்து வருகின்றனர்.

மன்மத ராசா டான்ஸ் மாஸ்டர்

மன்மத ராசா டான்ஸ் மாஸ்டர்

தனுஷிற்கு மிகப் பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த சூப்பர்ஹிட் பாடலான மன்மத ராசா பாடலுக்கு நடனம் அமைத்தவர் சிவஷங்கர். அதைத் தொடர்ந்து தனுஷ் நடித்த பல படங்களுக்கும் சிவஷங்கர் நடனம் அமைத்துள்ளார். ஒரே சமயத்தில் பல படங்களில் நடித்து வரும் தனுஷ், அடுத்ததாக டைரக்டர் சேகர் கம்முலா இயக்கும் புதிய படத்தில் நடிக்க போகிறார்.

தெலுங்கு படங்களில் தனுஷ்

தெலுங்கு படங்களில் தனுஷ்

வரிசையாக பல பான் இந்தியன் படங்களில் தனுஷ் நடித்து வருகிறார். சேகர் கம்மலா படத்தை தொடர்ந்து டைரக்டர் வெங்கி அட்லுரி இயக்கும் மற்றொரு படத்திலும் தனுஷ் நடிக்க போகிறார். இந்த இரு படங்களும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் தயாராக உள்ளதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X