twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னது...கேஜிஎஃப் 2, சூர்யா படத்தோட காப்பியா....இது என்னடா கேஜிஎஃப்.,க்கு வந்த சோதனை?

    |

    சென்னை : கேஜிஎஃப் 2 படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு அந்த படத்தை ஆஹா, ஓஹோ என கொண்டாடி வந்தனர். கேஜிஎஃப் 2, ஆர்ஆர்ஆர், புஷ்பா படங்களுடன் தமிழ் படங்களை ஒப்பிட்டு, இது போன்ற படங்கள் தமிழில் வருவதில்லை என திட்டி தீர்த்து வந்தனர்.

    தமிழ் சினிமாவில் திறமையான டைரக்டர்கள் இல்லை. பெரிய ஹீரோக்களின் படங்கள் ஃபிளாப் ஆவதற்கு காரணம் அவர்களை டைரக்டர்கள் இன்ஃப்ளுயன்ஸ் செய்வது தான் என பலவகையிலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இது பற்றி சோஷியல் மீடியாவில் பெரிய விவாதமே நடைபெற்றது.

     வடசென்னையில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டியது... இயக்குனர் வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்! வடசென்னையில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டியது... இயக்குனர் வெற்றிமாறன் பகிர்ந்த தகவல்!

    கேஜிஎஃப் வசூல் சாதனை

    கேஜிஎஃப் வசூல் சாதனை

    கன்னட படமான கேஜிஎஃப் 2, பான் இந்தியன் படமாக ஏப்ரல் 14 ம் தேதி 5 மொழிகளில் ரிலீஸ் செய்யப்பட்டது. கிட்டதட்ட 10,000 க்கும் அதிகமான தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்ட இந்த படம் 1000 கோடி வசூலை நெருங்கி வருகிறது. இது வரை பல படங்களில் வசூல் சாதனையை முறியடித்துள்ளது. ஒரு மான்ஸ்டர் பற்றிய கதை இவ்வளவு பிரம்மாண்ட வசூல் சாதனை படைப்பதை கண்டு அனைவரும் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

    தமிழ் சினிமா பயப்பட தேவையில்லை

    தமிழ் சினிமா பயப்பட தேவையில்லை

    இந்நிலையில் நேற்று டைரக்டர் மணிரத்னம், மற்ற மொழி படங்களின் பிளாக் பஸ்டர் வெற்றிகளை பார்த்து தமிழ் படங்கள் பயப்பட தேவையில்லை. தமிழில் திறமையான நிறைய டைரக்டர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் என கூறி அனைவருக்கும் நம்பிக்கை தந்தார். இந்நிலையில், கேஜிஎஃப் 2 படத்தில் பழைய தமிழ் சினிமாக்களின் ரெஃபரன்ஸ்கள் அதிகம் இருப்பதாக நெட்டிசன்கள் பல ஆதாரங்களை கூறி வருகிறார்கள்.

    கேஜிஎஃப் 2 கதை காப்பியா

    கேஜிஎஃப் 2 கதை காப்பியா

    விஜய் நடித்த குருவி, அஜித் நடித்த பில்லா 2 படங்களின் ரெஃபரன்ஸ்கள் இருப்பதாக முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது கேஜிஎஃப் 2 படத்தின் கதை, சூர்யா நடித்த அஞ்சான் படத்தின் காப்பி என்று ஒரு விஷயத்தை கிளப்பி விட்டுள்ளனர். அஞ்சான் படத்தில் சூர்யா பெயர் ராஜு பாய், கேஜிஎஃப் 2 படத்தில் யாஷ் பெயர் ராக்கி பாய். இரு படங்களிலுமே ஹீரோ சாதாரணமாக இருந்து, பெரிய கேங்ஸ்டராக வளர்ந்திருப்பார்கள்.

    அட ஆமாம்ப்பா...அப்படியே இருக்கு

    அட ஆமாம்ப்பா...அப்படியே இருக்கு

    இரண்டு படங்களிலுமே ஹீரோ, ஹீரோயினை கடத்தி வந்திருப்பார். பிறகு தான் ஹீரோ பற்றி புரிந்து கொண்டு அவர் மீது ஹீரோயினுக்கு லவ் வரும். இரண்டு படங்களிலும் கதைக்களம் மும்பையில் இருந்து தான் துவங்கும். தொப்பி வைத்த முஸ்லிம் பாய் ஒருவர் இரு படங்களிலுமே முக்கியமான ரோலில் நடித்திருப்பார். இதே போல் ஹீரோ பற்றி பில்டப் கொடுக்க சம்பந்தமே இல்லாமல் ஒரு எழுத்தாளர்/ பத்திரிக்கையாளர் கேரக்டர் இரு படங்களிலுமே வைக்கப்பட்டிருக்கும். இரண்டு படங்களிலுமே ஹீரோ கடலில் மூழ்குவதை காட்டப்படும்.

    என்னடா கேஜிஎஃப்.,க்கு வந்த சோதனை

    என்னடா கேஜிஎஃப்.,க்கு வந்த சோதனை

    இந்த ஒப்பீட்டை பார்த்த பலரும், அட ஆமாம்ப்பா. இதெல்லாம் நாங்க யோசிக்கவேயில்லையா. தமிழ் சினிமாவில் எப்பவோ எடுத்த படத்தின் கதையை சுட்டு, அதை கொஞ்சம் மாற்றி இப்போது பிளாக் பஸ்டர் படமாக்கி இருக்கிறார்களா என கேட்டு வருகிறார்கள். குட்டி கேஜிஎஃப் படத்தை நம்ம ஆளுங்க எப்பவோ எடுத்துட்டாங்களா. எல்லாமே ஒன்றாக தான் உள்ளது. ஆனால் சூர்யா படத்தில் வில்லன் சரியில்லை. கேஜிஎஃபில் ஸ்டிராங்கான வில்லன் இருந்ததால் மாஸாக காட்டி பிளாக் பஸ்டர் ஆக்கி விட்டனர் என கூறி வருகிறார்கள்.

    English summary
    Netizens shared the reference copy of KGF 2 story from Suriya's Anjaan movie. The two movie stories are same. In another set of peoples said that KGF 2 story was a reference of Ajith's Billa 2. But Anjaan story was exactly match to KGF 2.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X