Don't Miss!
- News 88 தொகுதிகள்.. இன்று 13 மாநிலத்தில் 2ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா, கர்நாடகாவிலும் ஓட்டுப்பதிவு
- Technology இனி Signal Weak சிக்கலே இருக்காது.. மொபைல் Settings-ல இதை பண்ணா போதும்.. இன்டர்நெட் ஸ்பீட் சும்மா பிச்சிக்கும்
- Finance வேலைக்கு சேர்ந்த 6 மாசத்திலேயே ரிசைன்.. அனல் பறக்கும் விவாதம்..!
- Automobiles சாதா கிளாஸ் டிக்கெட்டை வாங்கிட்டு முதல் வகுப்பில் பயணிக்கனுமா!! விமான பணி பெண் சொல்லும் மூன்று ரகசிய வழிகள்!
- Lifestyle Today Rasi Palan 26 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் வேலை மாற்றத்தைப் பற்றி யோசிக்காமல் இருப்பது நல்லது..
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கடைசியில் செல்லம்மாவை இவர் உஷார் பண்ணிட்டாரே.. தீயாய் பரவும் அனிருத் காதல் செய்தி?
சென்னை: ராக்ஸ்டார் அனிருத்தின் காதல் செய்தி தான் இப்போ கோலிவுட்டின் ஹாட் டாப்பிக்கே..
சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான "செல்லம்மா" பாடலை பாடிய பாடகி ஜோனிடா காந்தி உடன் அனிருத் காதல் வலையில் சிக்கி உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.
மீம்களின் அரசனான இம்சை அரசன்.. சிரிக்க வைக்கவே பிறந்த வைகைப் புயல்.. #HappyBirthdayVadivelu
அதிக சம்பளம்
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானுக்கு அடுத்தபடியாக தமிழ்நாட்டில் அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர் என்றால் அது நம்ம ராக்ஸ்டார் அனிருத் தான். எந்த பாட்டு போட்டாலும், ஹிட்டு தான். மற்ற இசையமைப்பாளர்களுக்கு இலவசமாக பாடிக் கொடுத்தாலும் அந்த பாட்டு ஹிட்டு தான்.
ஜோனிடாவுடன் காதல்
சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான "செல்லம்மா" பாடலை பாடிய பிரபல பின்னணி பாடகி ஜோனிடா காந்தியை இசையமைப்பாளர் அனிருத் காதலித்து வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. அனிருத் இசையமைக்கும் படங்களில் ஜோனிடாவுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவும் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
ஜோனிடா காந்தி
1989ம் ஆண்டு அக்டோபர் 23ம் தேதி டெல்லியில் பிறந்தவர் ஜோனிடா காந்தி. பின்னர், குடும்பத்துடன் கனடா நாட்டில் செட்டில் ஆன அவர், 17 வயதில் யூடியூப் சேனலை தொடங்கி தனது இசை ஆல்பத்தை வெளியிட்டு பிரபலமானவர். ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடி வந்த ஜோனிடா, ஏகப்பட்ட பாலிவுட் பாடல்களையும் பாடி உள்ளார். ஷாருக்கானின் சென்னை எக்ஸ்பிரஸ் படத்தின் மூலம் பாடகியாக பிரபலமானார்.
இரண்டாவது முறையாக
ஏற்கனவே நடிகை ஆண்ட்ரியா உடன் இசையமைப்பாளர் அனிருத் காதல் வசப்பட்டதாகவும், இருவரும், இணைந்து லிப் லாக் கொடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சுச்சி லீக்ஸ் மூலம் வெளியிடப்பட்டு சர்ச்சையை கிளப்பின. ஆனால், அவை மார்ஃபிங் என்றும், அது வெறும் வதந்தி என்றும் கூறப்பட்டது. ஜோனிடா காந்தி காதல் பற்றி என்ன சொல்லப் போகிறார் அனிருத் என்பதை கோலிவுட் திரையுலகம் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறது.
Recommended Video
மாஸ்டர் டு இந்தியன் 2
இசையமைப்பாளர் அனிருத் இசையில் உருவாகி உள்ள தளபதி விஜய்யின் மாஸ்டர், சிவகார்த்திகேயனின் டாக்டர் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசனின் இந்தியன் 2 உள்ளிட்ட பெரிய படங்கள் ரிலீசுக்கு காத்திருக்கின்றன. மேலும், சில பெரிய படங்களுக்கும் அனிருத் இசையமைக்க ஒப்பந்தமாகி உள்ளார். ஜெயம் ரவியின் பூமி படத்திற்கு அவர் பாடிய "தமிழன் என்று சொல்லடா" பாடல் யூடியூபில் டிரெண்டாகி வருவது குறிப்பிடத்தக்கது.